#செல்ஃப்மேட்: ஒரு நாளைக்கு 5 ஆர்டர்கள் முதல் 700 ஆர்டர்கள் வரையில் பார்க்கும் இந்தப் பெண் தொழிலதிபர், ஃப்ளிப்கார்ட்டே வணிகத்தில் தான் எடுத்த சிறந்த முடிவு எனக் கூறுகிறார்!

Read this article in हिन्दी | English | ગુજરાતી | मराठी | ಕನ್ನಡ | বাংলা

சித்ரா வியாஸ், அவரது எலக்ட்ரானிக்ஸ் வியாபாரமானது தனது சொந்த வலைதளத்தின் மூலமாக முன்னேற்றத்தைக் காணவில்லை என்ற சமயத்தில் விற்பனையை அதிகரிக்க ஃப்ளிப்கார்ட்டின் பக்கம் திரும்பினார். வெகு விரைவிலேயே அவரது வணிகத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கின. கோவிட்-19 காரணமாக முடங்கியபோது கூட, இதைப் பயன்படுத்தி அவரால் வளர முடிந்தது. இலட்சியவாதியான இந்த விற்பனையாளர், சிறிய அளவில் தொடங்கி “சிறந்த தொழில் முனைவோர்” என்ற விருதை எப்படி வென்றார் என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

entrepreneur

ன் பெயர் சித்ரா வியாஸ். நான் 5 வருடங்கள் முன்பாக ஃப்ளிப்கார்ட் விற்பனையாளரானேன். நான் முதலில் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை செய்யும் தொழில் முனைவராக என் பயணத்தைத் தொடங்கினேன். என்னுடைய கணவர் முன்பு இ-வணிக (இ-காமர்ஸ்) தொழில்துறையில் பணியாற்றியதால், ஆன்லைனில் விற்பனை செய்யவேண்டுமா என்ற சந்தேகம் கொஞ்சம் இருந்தது.

எங்களுக்கு முதலீட்டாளர் தேவைப்பட்டது, ஆனால் அதற்கு நாங்கள் சங்கடப்படவில்லை. என்னுடைய மாம இதில் முதலீடு செய்தார் மேலும் விரைவிலேயே, எங்களது தயாரிப்புகளை விற்பதற்கு எங்களுக்கான சொந்த வலைதளம் எங்களிடம் இருந்தது. ஆனால் சந்தையில் எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர் பார்வைக்குக் கொண்டுவருவதற்கான சரியான வழிகாட்டுதல் இல்லை. அப்போது தான் ஃப்ளிப்கார்ட்டை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். எங்களுடைய மூலதனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தோம்.

entrepreneur

இணைந்த சிறிது நாட்களிலேயே Flipkart, விற்பனை அதிகரிப்பதைக் கண்டோம். ஒரு வாரத்திற்குள், 100 ஆர்டர்கள் எங்களுக்குக் கிடைத்தன! எங்களது வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை ஃப்ளிப்கார்ட் எங்களுக்கு வழங்கியது. எங்கள் வணிகத்துல் எங்களுக்கு உதவிட கணக்கு மேலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார், மேலும் எங்களது பட்டியல்களில் கூடுதலாக பிரிவுகளைச் சேர்க்கத் தொடங்குமாறு அவர் அறிவுறுத்தினார். அப்போதுதான் ஃபேஷன் பிரிவில் எங்களுக்கான வாய்ப்புகளை நாங்கள் ஆராயத் தொடங்கினோம்.

எங்கள் கணக்கு மேலாளர் அனைத்தையும் அறிந்திருந்தார் — த பிக் பில்லியன் டேஸுக்கு எங்களை தயார்படுத்தியதோடு, ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் அடிக்கிக்கொண்டே போகும் ஆர்டர்களை சமாளிப்பதற்கு ஏற்றவாறு எங்கள் சரக்குகளை எப்படி மீண்டும் கையிருப்பாக்கிக் கொள்வது என்பதைக் காட்டினார். ஃப்ளிப்கார்ட்டில் உள்ள கணக்கு மேலாளர்கள் மிகவும் உதவியாக இருப்பதுடன், எதிலாவது எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அல்லது ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் அவர்களுக்கு மெசேஜ் செய்தால் போதும், எங்களுக்கு உதவிட அவர்கள் இருப்பார்கள் – இதுவே ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்வதற்கான ஒரு முக்கிய அம்சமாகும்.

கோவிட்-19 லாக்டவுனின் போது, ஃப்ளிப்கார்ட் எங்களுக்கு ஒரு உறுதிமொழி அளித்தது. காலணிகள் தான் அந்த நேரத்தில் எங்களது முதன்மை பிரிவாக இருந்தது, அத்துடன் அப்போது தான் உணவு மற்றும் ஊட்டசத்து பிரிவில் உலர் பழங்களை (ட்ரை ஃப்ரூட்ஸ்) விற்கத் தொடங்கியிருந்தோம்.

லாக் டவுனுக்கு முன்பு, எங்களது பெரும்பாலான விற்பனை காலணி பிரிவிலிருந்து வந்த சமயத்தில் 20-30 ஆர்டர்கள் ட்ரை ஃப்ரூட்ஸுக்கு வந்தது. ஆனால் கோவிட்-19 க்குப் பிறகு அது மாறியது – எங்களது காலணி வியாபாரத்தை எப்படி மேற்கொண்டு நடத்திச் செல்வது என்று கவலைப்பட்டோம். ஆனால் ஃப்ளிப்கார்ட் உலர் பழங்கள் மற்றும் ரேஷன் பிரிவின் முக்கியத்துவத்தை எங்களுக்கு வழங்கியது. லாக்டவுனுக்குப் பிறகு முதல் நாளில், எங்களுக்கு 400-500 ஆர்டர்கள் உலர் பழங்களுக்கு வந்தது!

இப்போது நாங்கள் பேக்கேஜிங்கும் செய்து, சாஃப்ட்ஆர்ட் என்றழைக்கப்படும் உலர் பழங்களின் எங்களுடைய சொந்த பிராண்டை தொடங்கியிருக்கிறோம். ஃப்ளிப்கார்ட் எங்களுக்கு அளித்த பல வாய்ப்புகளில் இதுவும் ஒரு எடுத்துக்காட்டாகும். லாக்டவுன் கட்டுப்பாடுகளினால் ஃப்ளிப்கார்ட் லாஜிஸ்டிக்ஸில் தயாரிப்புகளை ஒப்படைப்பதைத் தடுத்த சமயத்தில் கூட, அவர்களே வந்து வீட்டிலிருந்து எடுத்துச் சென்றனர்.

entrepreneur

கடந்த 6 மாதங்களில், இதுவரை ஆன்லைனில் பொருட்கள் வாங்காத என் குடும்ப உறுப்பினர்கள் கூட, இ-வணிகத்தின் உதவியுடன் தேவையானவற்றையும் மற்ற பொருட்களையும் வாங்கத் தொடங்கிவிட்டனர். வணிகம் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்குமே இப்போது ஆன்லைன் ஷாப்பிங் தான் சிறந்த பாதுகாப்பான தீர்வாக உள்ளது.

வளர்ந்து வரும் எந்தவொரு தொழில்முனைவோருக்கும் இது போன்ற சமயத்தில், ஆன்லைன் விற்பனையாளராக நீங்கள் செழித்து வளர்வதற்கு ஃப்ளிப்கார்ட்டிலிருந்து எங்களுக்குக் கிடைத்தது போன்ற சரியான வழிகாட்டுதலே உங்களுக்குத் தேவை என்று நான் கூறுவேன்!

வெற்றிகரமான தொழில்முனைவோராக நான் ஆவேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இரண்டு வருடங்கள் முன்னர் ஃப்ளிப்கார்ட்டின் பெண் விற்பனையாளர்களிடையே “சிறந்த தொழில்முனைவோர்” ஆகawarded நான் இருந்தேன். ஐந்து ஆர்டர்களுடன் தொடங்கி இப்போது தினமும் 700 ஆர்டர்களைப் பெறும்போது நல்ல உணர்வைத் தருகிறது. நாங்கள் சிறிய அளவில் தொடங்கி, இப்போது எங்களுக்கென மொத்தமாக அலுவலகம் உள்ளது. இந்த பயணத்தை இப்போதும் நாங்கள் அனுபவிக்கின்றோம்.

பல்லவி சுதாகரின் கூடுதல் உள்ளீடுகளுடன் ஜிஷ்னு முரளியிடம் சொன்ன படி.

Enjoy shopping on Flipkart