தடங்கல் இல்லாத கனவுகள்: சூரத்தைச் சார்ந்த ஒரு குடும்ப வியாபாரம் நிச்சயமற்ற தன்மையை இ-வணிகம் மூலம் கடந்து வருகிறது

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

குடும்பத்தில் பல தலைமுறைகளாக நடத்தி வந்த ஜவுளி வியாபாரத்தை அவரது தந்தை ஒப்படைத்தபோது அங்கூர் துல்சியன் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். வியாபாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற பெரிய கனவுகளுடன், அங்கூர் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக மாற ஒப்பந்தம் செய்தார். புதிய கூட்டாட்சியின் பலன்கள் சவாலான காலங்களில் கூட வருவாய் ஓட்டத்தை பராமரிக்க அவருக்கு உதவியது. இதோ அவரது கதை, அவரது சொந்த வார்த்தைகளில்.

selling online

இந்த கதையில்: ஆன்லைனில் விற்பனை செய்கையில், இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளருக்குத் தனது குடும்ப வணிகத்தை விரிவுபடுத்த உதவியதுடன், நிச்சயமற்ற நிலையினைக் கடந்து வந்து அவரது மற்றும் அவரது முன்னோர்களின் கனவுகளை தெளிவாகப் புரிந்துகொண்டார்!

வுளித் தொழில் என்பது குஜராத்தில் உள்ள சூரத்தில் மிகப் பழமையான பரவலாகக் காணப்படும் ஒன்றாகும், இந்த நகரம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் பட்டு நகரமாக புகழ் பெற்றது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. நகரத்தின் மக்கள்தொகையில் ஒரு முக்கிய பகுதி ஜவுளித் தொழிலுடன் தொடர்புடையது மற்றும் நாட்டில் ஜவுளி வணிகத்திற்கான மையமாக இந்நகரம் உள்ளது.

சூரத்தில் உள்ள பல ஜவுளி வணிக உரிமையாளர்களில், ஒருஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் ஒரு குடும்ப வணிகத்தை தலைமுறைகளாக நடத்திக் கொண்டு வருகிறார். இ-வணிக உலகில் நுழைந்து ஆன்லைனில் விற்பனை செய்ததனால், இந்த விற்பனையாளருக்கு அவரது முன்னோர்கள் கற்பனை மட்டுமே செய்த உயரத்திற்கு இவரது வணிகத்தைக் கொண்டு செல்ல முடிந்தது. இதுவேஅங்கூர் துல்சியானின் கதை அவரது வார்தைகளில்.


என் பெயர் அங்கூர் துல்சியான், ஆனந்த் சாரீஸ் என்பது எனது பிராண்ட் ஆகும். பல தலைமுறைகளாக, சூரத்தின் ஜவுளித் துறையில் நல்ல பெயரை உருவாக்கி வருகிறது, இப்போது நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை வளப்படுத்துகிறோம். எனது தந்தை டெல்லியில் பிறந்து வளர்ந்தார். அவர் சூரத்துக்கு மாறுவதற்கு முன்பாக சிறிது காலம் அங்கு பணியாற்றினார். நான் இங்கே பிறந்தேன், என் வாழ்நாள் முழுவதும் நான் இங்கு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.


மதிப்புமிக்க விற்பனையாளரும் கூட்டாளருமான ஆனந்த் சாரிஸின் அங்கூர், இந்த சவாலான காலகட்டத்தில் ஃப்ளிப்கார்ட் தனக்கு அளித்த ஆதவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர்களுக்கு தனது வணிகத்தில் இருக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து கண்ணோட்டத்தை வழங்கவும், மனதைக்கவரும் ஒரு வீடியோவை உருவாக்கினார். மேலும் அறிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள்:

YouTube player

நாங்கள் உள்ளக உற்பத்தி அல்லது உள்ளமைந்த தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். நூலைத் தயாரிப்பதில் இருந்து சேலையாக முடிக்கப்படும் வரை அனைத்துமே உள்ளமைப்பில் செய்யப்படுகின்றன. எங்களிடம் ஒரு நெசவு ஆலையும் செயலாக்க இடமும் உள்ளது. சூரத்தில் எங்களுக்கு சில்லறை விற்பனைக் கடை கிடையாது, ஆனால் மொத்த விற்பனைக் கடை உள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்வதில், குறிப்பாக ஜவுளித் துறையில் அப்பட்டமான வித்தியாசத்தை நான் கவனித்தேன். ஆஃப்லைனில் விற்கும்போது, எங்கள் வடிவமைப்புகள் மற்றும் துணிகளை எந்தளவிற்கு வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர் என்பது குறித்த எந்தத் தரவும் கிடைப்பதற்கு ஏறக்குறைய ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சில்லறை விற்பனைக் கடைகளில் நாங்கள் வழங்குவதை வாடிக்கையாளர்கள் பார்க்கத் தொடங்கும் வரை காத்திருந்து, பின் அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப எதிலெல்லாம் மேம்படுத்த வேண்டுமோ அதைச் செய்கிறோம். ஆன்லைனில், இந்த செயல்முறை மிகவும் எளிதாகவும் விரைவாகவும் உள்ளது. எங்கள் தயாரிப்புகளை பட்டியலிட்ட ஒரு வாரத்திற்குள், வடிவமைப்புகளை எவ்வாறு மாற்றியமைக்கலாம் மற்றும் ஜவுளிகளில் மேலும் பல வகைகளை எப்படி விரிவாக்கலாம் என்பதற்கான பயன்படுத்தக்கூடிய தரவு எங்களிடம் உள்ளது. மாறிவரும் போக்குகளுக்கு ஏற்ப தரவானது நம்மை புதுப்பித்த நிலையில் வைத்திருக்கிறது. வாடிக்கையாளர் கருத்தை நாங்கள் உடனடியாகப் பெற்று அதற்கேற்ப நடந்துகொள்ள உதவுகிறது.

“வாடிக்கையாளர் கருத்தைப் பொறுத்து ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்வது என்பது திரையரங்கிற்கும் சினிமாவிற்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது.” – அங்கூர் துல்சியான், ஆனந்த் சாரீஸ், ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்

கோவிட்-19 ஊறடங்கினால் எங்களது ஜவுளி வியாபாரம் குறைந்தது. அத்தியாவசியம் இல்லாத பொருட்களின் மேல் அரசு விதித்திருந்த தடையை நீக்குவதற்காக நான் காத்திருந்தேன், அந்த நேரம் வந்தவுடன், ஊழியர்களுக்கான பாஸ் வாங்கினேன், பாதுகாப்பாக இருக்க ஒவ்வொரு அறியப்பட்ட முன்னெச்சரிக்கையையும் விதித்தேன். ஃப்ளிப்கார்ட்டுடனான எங்கள் கூட்டு மிகவும் பலனளித்தது. நான் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளரான பிறகு, வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான அதிக வாய்ப்புகளை நான் பார்த்தேன்.

ஃப்ளிப்கார்ட்டுடன் பணிபுரிவது எனது வணிகத்திற்கு நிறைய உதவியுள்ளது. கனவு நனவாகியுள்ளது!

பல்லவி சுதாகரின் கூடுதல் உள்ளீடுகளுடன் ஜிஷ்னு முரளியிடம் சொன்ன படி.

இதையும் வாசிக்கவும்: ஃப்ளிப்கார்ட்டில் ஆன்லைனில் விற்பனை செய்வது, வீட்டுநினைப்பில் இருக்கும் இந்த தொழில்முனைபவரை வீட்டிற்குச் செல்ல வழிகாட்டியது!

Enjoy shopping on Flipkart