மோசடி அறிவுரை: ஃப்ளிப்கார்ட் பெயரை தவறாக பயன்படுத்தும் ஏமாற்று வலைதளங்கள் மற்றும் போலி ஊக்கப் பரிசுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

நம்ப முடியாத அளவு ஊக்கத் திட்டங்களையும் தள்ளுபடிகளையும் வழங்குகிறோம் என்று கூறும் அதிகாரபூர்வமற்ற வலைதளங்கள் மற்றும் தகவல்களிடமிருந்து தள்ளி இருங்கள். நீங்கள் ஷாப்பிங் செய்வது பாதுகாப்பாக அமைய இதோ ஒரு உதவிக் குறிப்பேடு.

fraudulent

ம்பமுடியாத அளவு தள்ளுபடிகளையும் ஊக்கத் திட்டங்களையும் தருகிறோம் என்று அண்மைக் காலத்தில் உங்களுக்கு ஏதேனும் ஈமெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் தகவல் அல்லது வேறு சமூக ஊடகம் மூலமாக ஃப்ளிப்கார்ட்டிலிருந்து தகவல் வந்ததா? எச்சரிக்கையாக இருங்கள் இவை அதிகாரபூர்வ ஃப்ளிப்கார்ட் அனுப்பியவை அல்ல, உங்களை ஏமாற்றும் நோக்கில் ஏமாற்றுக்காரர்களும் மோசடிக்காரர்களும் அனுப்பியவை. நீங்கள் கவனத்துடன் இல்லாவிடில் நீங்கள் அவர்களின் ஏமாற்றுக்கு ஆளாக நேரிடும். ஏமாற்றுக்காரர்கள், பிரபலமான மற்றும் நம்பத்தகுந்த ஃப்ளிப்கார்ட் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனர். இதுபோன்ற ஏமாற்று நபர்களை அல்லது மையங்களை உங்கள் பணம் அல்லது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்கள் மூலம் நம்பிவிடாதீர்கள் என உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். எப்பொழுதும் முதலில் சரியான மற்றும் அசலான ஃப்ளிப்கார்டின் ஆதாரங்களை பாருங்கள்.


#FightFraudWithFlipkart - Fake Offers/phishing on fake websites

சரி, சந்தேகிக்கத்தக்க ஒரு ஏமாற்று ஊக்கத் திட்டம் பற்றி உங்களுக்குத் தகவல் வந்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? தயங்காமல், உடனடியாக அவை குறித்து ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் கேர் சப்போர்ட் கட்டணமில்லா தொலைபேசி 1800 208 9898 என்ற எண்ணுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள். ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் கேர் பிரதிநிதிக்கு எவ்வளவு கூடுதல் தகவல் தெரிவிக்கமுடியுமோ கொடுத்து உதவுங்கள், அப்பொழுதுதான் உங்களைப் போன்ற வாடிக்கையாளரைப் பாதுகாக்க எங்களால் தீவிர விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

ஏமாற்றுக்காரர்கள் மற்றும் மோசடிக்காரர்களுக்கு இரையாகாமல் பாதுகாப்பாக ஃப்ளிப்கார்ட் மூலம் சிறப்பான விற்பனை திட்டங்களுடன் எப்படி வாங்குவது என்பதைக் குறித்த தகவலை இக்கட்டுரை மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறது. சாத்தியமான மோசடிகளைத் தடுத்து எப்படி தகவல் அளிக்கலாம் என்பது பற்றி புரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.


ஃப்ளிப்கார்ட் மோசடி விளம்பரம் மற்றும் போலி விற்பனைத் திட்டங்களை எப்படி நான் அடையாளம் காண்பது?

fraudulent

ஃப்ளிப்கார்ட், 100 மில்லியன் பதிவு செய்த உறுப்பினர்கள் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய ஈ-காமர்ஸ் விற்பனைக் கூடமாகும். எங்களுக்கு வாடிக்கையாளரின் தகவல் குறித்த பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை அதிமுக்கியமானது. PCI:DSS போன்ற சர்வதேச பாதுகாப்பு தரநிலைகளுக்கு எமது தகவல் மையம் உட்பட்டு இயங்குகிறது. தகவல் பாதுகாப்பு கட்டுப்பாட்டின் அதிகபட்ச மட்டத்தில் இருப்பு வைக்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு எந்த வகையிலும் பங்கம், சேதம் இல்லாமலும் அவை அதிகாரபூர்வமற்ற எவருக்கும் அல்லது அமைப்புகளுக்கும் கிடைக்காத வகையிலும் எமது தகவல் முறைகள் உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குட்பட்டுள்ளன. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் அவர்களின் தகவலை பாதுகாத்துக் கொள்வது மற்றும் அவை வேறு நபர்கள் கையில் கிடைக்காமல் பார்த்துக் கொள்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நாம் அறிவுறுத்தியும் தகவல் வழங்கியும் வருகிறோம்.

ஆன்லைனில் வாங்குவோரை திசை திருப்பவும் அவர்களை ஏமாற்றும் நோக்கில் சில மோசடிக்காரர்களும் ஏமாற்றுவோரும் ஃப்ளிப்கார்ட் பெயரை தவறாக பிரயோகித்து வருகின்றனர். இவர்கள் ஃப்ளிப்கார்ட் அமைப்பின் நற்பெயரையும் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங்கையும் இழிவுபடுத்தி வருகின்றனர். இது போன்ற நபர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என உங்களை அறிவுறுத்துகிறோம்.

இதுபோன்ற தனிநபர்கள் அனுப்பும் தகவல்களில் / அழைப்புகளில் தூண்டச் செய்கின்ற திட்டங்கள், தள்ளுபடிகள் மற்றும் ஃப்ளிப்கார்ட் இன் சிறப்பு திட்டங்களை குறிப்பிட்டும் இருக்கக் கூடும். இதுபோன்ற தகவல்கள் ஃப்ளிப்கார்ட் இன் அதிகாரபூர்வ டிரேட்மார்க்குகள் போன்ற லோகோ, பிராண்ட் கலர்கள் மற்றும் எழுத்துக்களையும் கூட கொண்டிருக்கலாம். சில போலி வலைதளங்களின் URL அல்லது லோகோவில் ‘ஃப்ளிப்கார்ட் ‘ என்ற பதமும் இருக்கக்கூடும்.

ஏமாற்றுக்காரர்கள் உங்களை எவ்வழிகளிலெல்லாம் தொடர்பு கொள்வார்கள் என்பதைப் பற்றி இதோ பார்ப்போம்.

fraudulent

போலி வலைதளங்கள்: இவ்வலைதளங்களில் இது போன்ற பெயர்களும் இன்டர்நெட் முகவரிகளும் இருக்கும் (URLs) flipkart.dhamaka-offers.com, flipkart-bigbillion-sale.com போன்ற பல. இதுபோன்ற வலைதளங்கள், ஃப்ளிப்கார்ட் உடன் இணைந்திருப்பது போல் கபடமாக அதே தோற்றத்துடனும் அதே தொனி பெயர்களுடனும் இருக்கும். ஆனால் இவை அனைத்தும் ஃப்ளிப்கார்டில் அங்கீகரிக்கப்படாதவை.

fraudulent

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மெஸஞ்சர் மற்றும்/அல்லது இதர சமூக தகவலனுப்பும் ஊடகங்கள் :ஏமாற்றுக்காரர்கள் இதுபோன்ற தகவல் தளங்கள் மூலம் தகவல்களை அனுப்பலாம். பல ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் இதே போன்ற தகவல்களை பெற்றிருப்பதாகக் கூறியுள்ளனர்:

  • உங்கள் பெயர், மொபைல் எண், முகவரி, வங்கித் தகவல்கள் போன்ற உங்களுடைய சுய தகவல்களை கேட்பது.
  • இதுபோன்ற போலி தகவல்களை உங்கள் தொடர்பிலுள்ள பிற தனிநபர் அல்லது குழுக்களுடன் பகிர்ந்துகொண்டு பிரமாண்ட பரிசுகள் வெல்லுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்வது.
  • பொருட்களை மிகவும் ஈர்க்கக்கூடிய, நம்பமுடியாத விலையில் வழங்குவது (உதாரணமாக ஒரு 32 GB பென் டிரைவ் ரூ.25 மட்டுமே).
  • பார்ப்பதற்கு ஃப்ளிப்கார்ட் போன்றே இருக்கும் ஒரு வலைதளத்துக்குச் செல்ல உங்களைத் தூண்டுவது.
  • ஒரு இலவச பரிசு பெற, சேவைகளுக்கோ வரிகளுக்கோ ஆன்லைன் வாலெட்டுகள், பாங்க் ட்ரான்ஸ்ஃபர் அல்லது இதர வசதிகள் மூலம் கட்டணம் செலுத்தச் செய்வது

இச்சலுகைகள் எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தாலும், ஃப்ளிப்கார்ட் உடன் அதன் உண்மைத்தன்மையை கண்டறியாமல், இத்தகவல்களுக்கு பதில் அளிப்பதோ ஏதேனும் தரப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவோ வேண்டாம். இதுபோன்ற தகவல்களை அனுப்புவோருடன் ஃப்ளிப்கார்ட் -க்கு எவ்விதத் தொடர்பும் இல்லை, மேலும் நீங்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஃப்ளிப்கார்ட் போன்ற தோற்றமளிக்கின்ற, ஆனால் போலியாகச் செயல்படுகின்ற இத்தகையவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்களானது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதிசார்ந்த தகவல்களின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கலாம். இவர்களிடம் செலுத்தப்படும் எவ்வொரு கட்டணத்தையும் திரும்பப்பெற இயலாது என்பது மட்டுமல்லாமல் நீங்கள் உழைத்துச் சேமித்த பணத்தையும் இழக்க நேரிடலாம்.


fraudulent

 

வாடிக்கையாளர்களுக்கு போலி அழைப்புகள் அல்லது SMS அனுப்புவது சில நேரம், அடையாளம் தெரியாத எண்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு வரலாம். அழைப்பவர்கள் ஆங்கிலம், இந்தி அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியில் பேசலாம். நீங்கள் இலவசப் பரிசு வென்றுள்ளீர்கள் அல்லது உங்கள் மொபைல் எண் ஒரு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்களுடன் உங்களைத் தூண்டுவார்கள். இப்பரிசுகளை பெறுவதற்காக, உங்கள் பாங்கு கணக்கு எண், எலக்ட்ரானிக் வாலெட் தகவல்கள், கிரெடிட்/டெபிட் கார்டு குறித்த தகவல், CVV, PIN அல்லது OTP போன்ற உங்கள் ரகசிய அல்லது அந்தரங்கமான தனிப்பட்ட நிதி சார்ந்த தகவல்களை அளிக்குமாறு உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும். பார்ப்பதற்கு ஃப்ளிப்கார்ட் போன்றே தோற்றமளிக்கும் ஒரு வலைதளத்துக்கு வரச் சொல்வார்கள் அல்லது ஒரு போலியாக தயாரிக்கப்பட்ட சான்றிதழ் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இவர்கள் ஃப்ளிப்கார்ட் ஊழியர்கள் அல்லது ஃப்ளிப்கார்ட் கூட்டாளிகள் என்றும் தம்மை கூறிக்கொண்டு அதனை ஊர்ஜிதப்படுத்தும் நோக்கில் போலி அடையாள அட்டைகளையும் காண்பிக்கலாம். இவை உண்மையாக தோற்றமளிக்கும் வகையில் நீங்கள் நம்பும் வகையில் இவைகளை போலியாக தயாரிப்பது வெகு சுலபம். பரிசுகளை அல்லது ஊக்கப் பொருட்களை பெற, குறிப்பிட்ட டிஜிட்டல் வாலெட்டுகளுக்குப் பணத்தை அனுப்புமாறு உங்களிடம் கேட்டுக் கொள்ளப்படலாம். இதுபோன்ற கணக்குகளை ஃப்ளிப்கார்ட் நிர்வகிப்பதில்லை, உங்களை ஏமாற்ற நினைப்பவர்களால் நிர்வகிப்படுபவை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

 

fraudulent

 

ஃபிஷிங் (போலி ஈமெயில்கள்) : ஒரு எலக்ட்ரானிக் தொடர்பில், நம்பத்தகுந்தவர் என்ற போலித் தோற்றத்துடன், ஏமாற்றும் நோக்கில், வெகு முக்கியத் தகவல்களான யூஸர்நேம்கள், பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்ட் தகவல்கள் போன்றவற்றைப் பெற முயற்சி செய்வதே பிஷிங் என்பது. பிஷிங் ஈமெயில்கள் ஏமாற்றுக்காரர்களால் அனுப்பப்படுபவை. போலியான வலைதளங்களுக்கு வருமாறு இந்த ஈமெயில்களில் கேட்கப்படும், இதன்மூலம் உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களைப் பெற்று, அவற்றை கொண்டு உங்கள் அனுமதி இல்லாமலே போலி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவார்கள். பணம் மற்றும் முக்கிய தனிப்பட்ட தகவல்களை இழக்கலாம், மேலும் அத்தகைய ஈமெயில்களில் உள்ள இணைப்புகளை க்ளிக் செய்யும்போது, உங்கள் கணினிகள், லேப்டாப்கள் அல்லது மொபைல் கருவிகள் போன்றவை மால்வேர்/வைரஸ்கள் ஆகியவற்றால் தாக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க சாத்தியமுள்ளது.

 

fraudulent

ஆன்லைன் கேம்ஸ்/வலைதளங்கள் (தள்ளுபடி கூப்பன்கள்/பரிசு வவுச்சர்கள்/விற்பனை திட்டங்கள்/ஆன்லைன் கேம்ஸ்): இது போன்ற ஆன்லைன் முறைகேடுகள் வாடிக்கையாளர்களை அணுகி, இலவச பரிசுகள், பரிசுத் தொகைகள் மற்றும் தூண்டும் வலைகளை விரிக்க “ஸ்பின் த வீல்” போன்ற கேம்ஸ்களில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்படுவார்கள். இதுபோன்ற பரிசுகளைப் பெற விளையாடுபவர்களிடம் அந்த கேம்ஸை அவர்களது தொடர்பில் உள்ளவர்களுக்கும் அனுப்புமாறு அடிக்கடி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்; ஆனால் இது நடக்காது. பயன்பாட்டாளர்களின் ஈமெயில், முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற அவர்களின் தனிநபர் விவரங்களை அளிக்கச் செய்வார்கள். இவற்றில் பங்கு பெறுவதன் மூலம், நீங்கள் ஏமாற்றப்படக்கூடிய ஆபத்துக்கு உள்ளாவீர்கள். இக்கட்டுரை குறித்து போலி ஆன்லைன் விளையாட்டுகள் என்பதில் தயவுசெய்து படிக்கவும் கூடுதல் விவரங்களுக்கு.

 

fraudulent

விற்பனைக் கூடத்தின் விற்பனையாளர்களிடமிருந்து: ஃப்ளிப்கார்ட் –இலிருந்து ஆர்டரை கொடுத்து பெறும்போது, கூடுதல் தள்ளுபடி பெற வருங்காலத்தில் வாங்குவதற்கு வேறு குறிப்பிட்ட வலைதளங்களில் செல்லும்படி உங்களைத் தூண்டும் சில கையேடுகளும் அதனுடன் உங்களுக்கு அனுப்பப்படலாம். அதேபோல், விற்பனையாளர்கள் இனி இப்பொருளை நேரடியாகப் பணம் செலுத்தி அவர்களிடமே வாங்குமாறு விற்பனையாளர்/அழைப்பாளர் கபடமாக விற்பனையாளரைப் போன்றுக் கூறலாம். அடிக்கடி, இவர்கள் உங்கள் ஃப்ளிப்கார்ட் ஆர்டரை ரத்து செய்யும்படியும் கூறலாம். இதுபோன்ற தகவலுக்கு நீங்களும் ஒப்புதல் தந்து அதற்காக அவர்களுடன் பகிரப்படும் உங்கள் சுய விவரங்கள் மீது ஃப்ளிப்கார்ட்டுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. இதுபோன்றவற்றை ஒப்புக் கொண்டால் நீங்கள் ஏமாற்றப்படுவதற்கான அபாயம் உள்ளது.

 

fraudulent

ஆஃப்லைன் மீடியா: இதுபோன்ற முறைகேடுகள் குறிப்பிட்ட கட்டணம்/கமிஷன்தொகைக்காக வேலைவாய்ப்பு தருவதை உள்ளடங்கலாம். இவைகள் செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வலைதளங்களில் வெளியிடப்படுபவை. ஃப்ளிப்கார்ட் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை மற்றும் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் இது குறித்து வேலை வாய்ப்புக்கோ ஒப்பந்தத்துக்கோ பணம் பெறும் அதிகாரம் வழங்கப்படவுமில்லை. (கூடுதல் விவரத்துக்கு, இங்கே படிக்கவும் Fake Flipkart job offers).

ஏமாற்றுக்காரர்களின் இதர மோசடி வழிகள்

ஏமாற்றுக்காரர்களிடமிருந்து அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப் செய்திகள் அல்லது போலி எஸ் எம் எஸ் கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் சில குறிப்பிட்ட முறைகேடு வகைகளை நாம் கவனித்துள்ளோம். இவர்கள், தங்களை ஃப்ளிப்கார்ட் அமைப்பு அல்லது அதன் குழும அமைப்புகளான மிந்த்ரா, ஜபாங், ஜீவ்ஸ் அல்லது ஃபோன் பே ஆகியவையின் பிரதிநிதிகள் என்றும் கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றக் கூடும். ஒரு ஏமாற்றுக்காரர், உங்களின் அண்மைக்கால ஆர்டர் எண்களை (நீங்கள் அப்புறப்படுத்திய பேக்கேஜிங் லேபல்கள் அல்லது கவர்களிலிருந்து பெறப்பட்டவை) குறிப்பிட்டு பாங்கு டிரான்ஸ்ஃபர்/வாலெட் மூலம் முன்பணம் செலுத்துமாறு கூறுவார் அல்லது உங்கள் வங்கி அல்லது டெபிட்/கிரெடிட் கார்ட் விவரங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்பார்கள். சில நிகழ்வுகளில், வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் சில மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்களை (எனிடெஸ்க் போன்றவை) இன்ஸ்டால் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். இதுபோன்ற அப்ளிகேஷன்ஸ் உங்கள் மொபைலை மட்டுமல்ல அதனுள் இருக்கும் தனிப்பட்ட தகவல் மற்றும் இருப்பு செய்யப்பட்ட தகவலும் அவர்கள் கட்டுக்குள் வந்து விடும் என்பதை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். . ஃப்ளிப்கார்ட் அமைப்போ அதன் அதிகாரபூர்வ பிரதிநிதிகளோ இதுபோன்ற தகவல்களை எப்போதும் கேட்கவோ மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன்ஸ்களை இன்ஸ்டால் செய்யவோ கூறமாட்டார்கள் என்பதை தயவுசெய்து உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஒருவேளை அத்தகைய அழைப்போ செய்தியோ வந்தால், இணைப்பை உடனடியாக துண்டித்து எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவேண்டாம். இது பற்றிய தகவலை எங்களது கஸ்டமர் கேர் எண் (1800 208 9898) ணில் தொடர்பு கொண்டோ ட்விட்டரில் ஃப்ளிப்கார்ட் சப்போர்ட் (@flipkartsupport) க்கு ஒரு நேரடி தகவல் (DM) அனுப்பியோ எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். ஏமாற்றுக்காரர்களின் தொலைபேசி எண்களை அல்லது சந்தேகத்துக்குட்பட்ட செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டையோ எங்களது கஸ்டமர் கேர் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஃப்ளிப்கார்ட்டில் எப்படி பாதுகாப்பாக வாங்குவது மற்றும் ஏமாறும் அபாயத்தை தவிர்ப்பது

fraudulent

ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் இதில் மட்டுமே ஷாப்பிங் செய்ய முடியும் ஃப்ளிப்கார்ட்டின் அதிகாரபூர்வ டெஸ்க்டாப் வலைதளம், ஃப்ளிப்கார்ட் மொபைல் ஷாப்பிங் ஆப் (iOS மற்றும் ஆன்ட்ராய்டு), மற்றும் ஃப்ளிப்கார்ட் மொபைல் தளம். ஃப்ளிப்கார்ட்டில் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் ஷாப்பிங், இவற்றைத் தவிர வேறு எந்த வலைதளத்தில் அல்லது ஆன்லைன் மேடையிலும் மேற்கொள்ள முடியாது..

ஃப்ளிப்கார்ட் அல்லது அதன் குழும அமைப்புகள், எந்த மூன்றாம் தரப்பு வலைதளத்துக்கும் தள்ளுபடி அளிக்கவும் அல்லது அதன் சார்பில் (ஃப்ளிப்கார்ட் குழுக்களில் உள்ளடங்குபவை Myntra, Jabong, PhonePe, Jeeves, F1 Infosystems and 2GUD.com) விற்பனையில் ஈடுபடவும் பிரதிநிதித்துவம் அதிகாரம் வழங்கவில்லை. எங்களது எச்சரிக்கையையும் மீறி, நீங்கள் உங்கள் சுய/நிதி விவரங்களை பகிர்ந்து கொண்டாலோ பணம் அளித்தாலோ அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீங்களேதான் பொறுப்பாவீர்கள் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.


ஃப்ளிப்கார்ட் வழங்கும் சலுகைகள், விற்பனைத் திட்டங்கள் மற்றும் தள்ளுபடி ஆகியவை குறித்து நம்பத்தகுந்த தகவல் எனக்கு எங்கு கிடைக்கும்?

fraudulent

இது ஒரு நல்ல கேள்வி. ஆம், எங்களுக்குத் தெரியும் விற்பனைத் திட்டங்கள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள் என்று, ஆனால் முதலில் அது அசல்தானா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும். இதில் வருகை தருவதன் மூலம் https://www.flipkart.com/ and https://stories.flipkart.com அதிகாரபூர்வ விற்பனைத் திட்டங்கள், விற்பனைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய சமீபத்திய செய்தி மற்றும் அறிவிப்புகளை அறிந்து கொள்ளுங்கள். சரியான நம்பத்தகுந்த தகவலுக்கு இவையே முக்கிய ஆதாரமாகும்.

உங்கள் அறிவிப்புகளை சாத்தியப்படுத்துங்கள் ஃப்ளிப்கார்ட் மொபைல் ஷாப்பிங் ஆப்-இல், உங்கள் ஆப் தற்போதைய பதிப்புக்கு அப்டேட் ஆகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஃப்ளிப்கார்ட் குறித்த சமீபத்திய தகவலை அறிய கீழ்காணும் ஆன்லைன் ஆதாரங்களை அணுகுங்கள்:
Official Facebook page for Flipkart
Official Facebook page for Flipkart Stories
Official Twitter account of Flipkart
Official Twitter account of Flipkart Stories

உங்கள் பாஸ்வேர்டுகள், OTP மற்றும் PIN நம்பர்கள் போன்ற ரகசிய விவரங்களை தெரிவிக்குமாறு ஃப்ளிப்கார்ட் அல்லது அதன் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் உங்களை எப்பொழுதும் கேட்கமாட்டார்கள். அதிகாரபூர்வமற்ற நபர்களுக்கு அத்தகைய தகவலை தெரிவிப்பதன் மூலம் நிதி மோசடி மற்றும் சட்டத்துக்கு புறம்பான வகையில் சுய விவரத்தை பெறும் மோசடிக்கு நீங்கள் ஆளாகும் ஆபத்திற்கு உள்ளாவீர்கள். போலியான ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் நீங்கள் தூண்டப்படுவீர்கள் அல்லது ஏமாற்றுக்காரர்கள் உங்களுடைய வங்கி விவரத்தை பயன்படுத்தி எங்களது தளத்தில் மோசடி நடவடிக்கையில் ஈடுபடலாம்.

இதுபோன்ற மோசடி நடவடிக்கை மூலம் நீங்கள் பணம் இழந்திருந்தால், உடனடியாக ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் சப்போர்ட் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் 1800 208 9898 . ஃப்ளிப்கார்ட் கட்டுப்பாட்டிற்குள் முடிந்தவரை ஆர்டரை ரத்து செய்து அனுப்பியவருக்கு பணத்தை திரும்ப அனுப்புவதற்கு முயற்சி செய்வோம். இதர நிலைமைகளில், உங்கள் வங்கிகள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையங்களுக்கு சென்று நீங்கள் புகார் அளிக்கலாம். சந்தேகத்துக்குட்பட்ட வாங்குவோர் விவரங்களை உங்களிடம் நேரடியாக அளிக்கமாட்டோம். வழக்கின் அடிப்படையில் சட்ட அமைப்புகளுடன் மட்டுமே இதனை பகிர்ந்து கொள்வோம்.

உங்கள் ஆதரவு உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் முறைகேடுகளிலிருந்து காப்பாற்றும். சந்தேகத்திற்குரிய எந்த நடவடிக்கையையும் ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் சப்போர்ட்டுக்குத் தெரிவியுங்கள் 1800 208 9898. ஃப்ளிப்கார்ட் ஆப் உள்ளிருந்தே நீங்கள் ஒரு ஈமெயில் அல்லது சாட் எங்களுக்கு அனுப்பலாம். (ஸ்க்ரீன் ஷாட்டைப் பாருங்கள்):

fraudulent

தகவல் பாதுகாப்பு அம்சத்தை ஃப்ளிப்கார்ட் தீவிரமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த காலங்களிலும், இதுபோன்ற நிகழ்வுகளை நாம் விசாரித்து ஏமாற்றுக்காரர்கள், மோசடிக்காரர்கள் மற்றும் போலிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாமல் எமது சிஸ்டம்களையும் நடைமுறைகளையும் வலுப்படுத்தி வருகிறோம். இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங்கின்போது வாடிக்கையாளரின் தகவல் பாதுகாப்பை அதிகரிக்கும் எமது நோக்கத்துக்கு தயவு செய்து உதவுங்கள்.


மேலும் படிக்கவும்

ஃப்ளிப்கார்டின் போலி மற்றும் மோசடி வேலைவாய்ப்பு ஏஜெண்டுகளிடம் ஜாக்கிரதை

ஃப்ளிப்கார்டில் போலி மதிப்பீடுகளா? அவற்றை நம்புவதற்கு முன் இதைப் படியுங்கள்

Enjoy shopping on Flipkart