கோவிட்-19 ஊறடங்குக்கு மத்தியில், இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் வாடிக்கையாளரின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் தேவையில் உள்ளவர்களுக்கும் உதவுகிறார்

Read this article in বাংলা | English | हिन्दी | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான அணுகலுக்காக இ-வணிகம் பக்கம் திரும்பியுள்ளனர். ஒவ்வொரு நாளும் எங்கள் விஷ்மாஸ்டர்கள் நுகர்வோருக்கு அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்து வருகையில், எங்களது விற்பனையாளர்கள் போதுமான சப்ளை இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அயராமல் உழைக்கிறார்கள். ஃப்ளிப்கார்ட் விற்பனையாளரான மோஹித் அரோரா, ஹாண்ட் சானிடைசர்கலையும் ஃபேஸ் மாஸ்குகளையும் விற்பனை செய்து வருகிறார். அவர் தனது வியாபாரத்தை எவ்வாறு நடத்தி வருகிறார், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும், அதே சமயத்தில் இந்தியாவுக்காக தனது பங்கைச் செய்கிறார் என்பதைப் படியுங்கள்.

selling essentials

ன் பெயர் மோஹித் அரோரா. நான் ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்தவன். நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்புஃப்ளிப்கார்ட்டில் ஆன்லைனில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினேன், அதிலிருந்து எனது நிறுவனமான ஸ்ரீ ராதே டிரேடிங் கம்பெனி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களை விற்கும் நேரடி சில்லறை விற்பனைக் கடைகளையும் நான் வைத்திருக்கிறேன்.

கோவிட்-19 தொற்று தாக்கியபோது, எங்களுக்கு எல்லாமே சவாலாக இருந்தது. வழக்கமான ஒரு நாளில், எனது 15 ஊழியர்கள் நுகர்வோர் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதை கவனித்துக்கொள்கிறார்கள், ஆனால் தற்போதைய சூழ்நிலையில், நான் அந்த எண்ணிக்கையை மூன்றாகக் குறைக்க வேண்டியிருந்தது. இதுவும் உடல்ரீதியான இடைவெளியை கடைபிடிக்க எங்களுக்கு உதவியது. ரெட் க்ராஸ் குழு வழக்கமாக எங்கள் பகுதியை சானிடைஸ் செய்ய வருவதால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.

எங்களையும் எங்கள் ஊழியர்களையும் பாதுகாப்பதை நான் உறுதிசெய்கிறேன் – எங்களையும் எங்கள் பணியிடத்தையும் நாங்கள் வழக்கமாக சானிடைஸ் செய்து கொள்கிறோம். மாஸ்குகள் மற்றும் கையுறைகள் போன்ற பாதுகாப்பு சாதனங்களையும் பயன்படுத்துவதோடு எங்கள் கிடங்கிற்கு வரும் சரக்குகளைக் கூட சானிடைஸ் செய்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் ஃப்ளிப்கார்ட் எங்களுடன் நன்றாகத் தொடர்புகொண்டிருந்தது. எங்களுக்கு தினமும் புதுப்பிப்புகளும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.

தொற்று பரவலுக்கு முன்பு கூட சானிடைசர்கள், சோப்புகள் மற்றும் ஷாம்பூ போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்றுக்கொண்டிருந்தேன். ஆனால் எங்களுடைய தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தச் சொல்லி, அதில் மாஸ்குகள் போன்ற மேலும் சில அத்தியாவசிய பொருட்களை சேர்க்கச் சொல்லி ஃப்ளிப்கார்ட் அறிவுறுத்தியது. இந்த சமயத்தில், இந்த அத்தியாவசிய பொருட்களுக்கு நுகர்வோரின் தேவை அதிகரித்திருந்தது. வழக்கத்தை விட நிறைய ஆர்டர்களை நான் பெற்றதுடன் என் வியாபாரமும் வளர்ந்தது. நான் என் சேவைகளை 2020, ஏப்ரல் 10 அன்று மீண்டும் தொடங்கினேன், ஃப்ளிப்கார்ட்டில் உள்ள எனது கணக்கு மேலாளர் சீரான மாற்றத்தையும் என் வியாபாரத்தின் தொடர்ச்சியையும் உறுதிசெய்தார்.

ஃப்ளிப்கார்ட்டின் தரநிலைகள் உயர்ந்தவை என்பதுடன் அவர்களது விதிகள் முறையானவை என்பதால் நான் எப்போதும் அவர்களை நம்புகிறேன். தயாரிப்பின் புகைப்படம் மற்றும் அதன் விளக்கங்கள் தெளிவாக இருப்பதுடன் அவர்களது வழிகாட்டுதல்களும் மிகவும் உதவியாக இருக்கும். எங்களுடைய நலனைப் பற்றி விசாரிப்பதும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்கும் அவர்களின் தினசரி மின்னஞ்சல்கள் எங்கள் மேல் உள்ள அக்கறையை உணரவைக்கிறது!

வீட்டில், என் குடும்பத்தினரும் நானும் கூட நோயெதிர்ப்பு சக்தியை விட்டுக்கொடுக்காமல், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். யோகப் பயிற்சி செய்து எங்கள் நாளை நாங்கள் தொடங்குவதுடன் ஃப்ளிப்கார்ட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடன வகுப்புகளிலும் கலந்து கொள்கிறோம். எங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சில மூலிகை பானங்களை என் தந்தை எங்களுக்காக செய்து தருகிறார்!

முதன்முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, நுகர்வோரின் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் தயாராகும் வரை என் நிறுவனத்தில் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. அதனால் அந்த நேரத்தில், என் குடும்பத்தினரும் நானும் எங்கள் பகுதியில் தேவையிலுள்ள மக்களுக்கு சானிடைசர்களையும் உணவு பொட்டலங்களையும் வழங்கிவந்தோம்.

selling essentials

என்னுடைய சக இந்தியர்களுக்கு சிறிய செய்தி ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களது பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு சாத்தியமான ஒவ்வொரு முன்னெச்சரிக்கையையும் நாங்கள் எடுத்து வருகிறோம். உங்கள் தரப்பில், நீங்கள் எதை வாங்கினாலும், அதை நன்றாக சானிடைஸ் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள். இந்த தொற்றுநோயிலிருந்தும் நாம் எப்போதும் போல ஆரோக்கியமாக விடுபட்டு வருவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்!

பல்லவி சுதாகரின் கூடுதல் உள்ளீடுகளுடன் ஜிஷ்னு முரளியிடம் சொன்ன படி

Enjoy shopping on Flipkart