உங்கள் பிரியமானவர் ஒரு ஃப்ளிப்கார்ட் எலக்ட்ரானிக் கிஃப்ட் வவுச்சரைப் பரிசளித்தாலோ அல்லது நீங்கள் பல போட்டிகளில் கலந்துகொண்டு அவற்றை வெற்றிபெற்றிருந்தாலோ, அதை வைத்துப் பொருள்களை வாங்கலாம்! உங்கள் பரிசினைப் பயன்படுத்துவதில் பிரச்சனை இருக்கிறதா? அப்படியென்றால் ஃப்ளிப்கார்ட் EGV-ஐப் பயன்படுத்துவது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் பலவித ஃப்ளிப்கார்ட் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது உங்கள் அன்பிற்குரியவர் தாராள மனப்பான்மையுடன் இருந்தாலோ, உங்களிடம் ஒரு ஃப்ளிப்கார்ட் எலக்ட்ரானிக் கிஃப்ட் வவுச்சர் (அல்லது இரண்டு!) இருக்கும், அதை பொருள் வாங்க வைத்திருப்பீர்கள். இதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து வியப்பாக இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் ஃப்ளிப்கார்ட் EGV-ஐப் பயன்படுத்துவது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
எது ஃப்ளிப்கார்ட் EGVகளை ஆச்சர்யம் கொண்டதாக மாற்றுகிறது?
EGVகள் அல்லது ஃப்ளிப்கார்ட் கிஃப்ட் கார்டுகள் போன்றவை ஒரு கடையில் நீங்கள் பயன்படுத்தும் வவுச்சர்கள் மாதிரி தான். உதாரணமாக, நீங்கள் ₹500 மதிப்புள்ள ஒரு கிஃப்ட் கார்டை வென்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், ₹500 மதிப்புள்ள பொருள்களை நீங்கள் வாங்கி EGVகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
அனைத்தும் வெற்றியாளருக்கே — ஃப்ளிப்கார்ட் கிஃப்ட் கார்டுகளை எப்படி பயன்படுத்துவது
உங்களிடம் ஃப்ளிப்கார்ட் EGVகள் இருந்தால், அதை எப்படி பயன்படுத்தலாம் என்று ஆச்சர்யமாக இருக்கிறாதா, அது ரொம்ப சுலபம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஃப்ளிப்கார்ட்டில் லாகின் செய்து நீங்கள் வாங்க விரும்பும் பொருள்களைத் தேர்வு செய்து, உங்கள் கார்டில் (cart) அவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு, நீங்கள் வழக்கமாகச் செய்வது போல ‘Proceed to Pay’ என்பதை கிளிக் செய்யுங்கள். உங்கள் கட்டண வாய்ப்பான Cash on Delivery அல்லது Net Banking என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ‘Pay by Gift Card’ என்ற வாய்ப்பினைப் பயன்படுத்துங்கள். உங்கள் டெபிட்/கிரெடிட் கார்டு போன்றே ஃப்ளிப்கார்ட் EGVகளில் 16-இலக்க கார்டு எண் மற்றும் 6 இலக்க எண் இருக்கும். இந்த இரண்டு எண்களையும் EGV விவரங்களுடன் உங்களுக்கு வந்த ஒரு ஈமெயிலில் நீங்கள் பார்க்கலாம். அவற்றை உங்கள் ஆர்டருக்கான கட்டணத்தில் உள்ளிடுங்கள்.
ஒருவேளை மொத்தத் தொகை ஃப்ளிப்கார்ட் EGVகளின் மதிப்பை விட அதிகமாக இருந்தால், மீதமுள்ள தொகையை உங்களுக்கு விருப்பமான கட்டண முறை வழியாக செலுத்துங்கள், அவ்வளவு தான். வெகு சுலபமானது.
எக்கச்சக்கமான ஃப்ளிப்கார்ட் EGVகள் உங்களிடம் இருக்கிறதா? இதோ, அவற்றை டிராக் செய்வதற்கான வழிகள்
நிறைய ஃப்ளிப்கார்ட் EGVகள் உள்ள ஒரு அதிர்ஷ்டசாலியாக நீங்கள் இருக்கிறீர்கள் சந்தோஷமான செய்தி. நிறைய வவுச்சர்களைப் பயன்படுத்தி ஒரு மிகப்பெரிய அளவில் பொருள்களை வாங்க நீங்கள் விரும்புகிறீர்களா, சரிதான் உங்களால் வாங்க முடியும்.
நீங்கள் உங்களுடைய அனைத்து EGVகளைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், திரையின் மேற்புற இடதுபக்கத்தில் உள்ள டிராப் டவுன் மெனு பட்டனைக் கிளிக் செய்யுங்கள் -> அதிலுள்ள கிப்ட் கார்டு -> என்பதைக் கிளிக் செய்த பின், ஸ்க்ரோல் டவுன் செய்து Add Gift Card To Wallet என்பதைக் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வந்திருக்கும் ஃப்ளிப்கார்ட் EGVகள் மெயிலில் உள்ள Gift Card Number மற்றும் Gift Card PIN -> போன்ற விவரங்களை நிரப்பி-> Apply என்பதை கிளிக் செய்யுங்கள், அவ்வளவுதான் வேலை முடிந்தது!
இப்போது உங்கள் கிப்ட் கார்டை உங்கள் வாலட்டுடன் இணைத்துள்ளீர்கள், ஃப்ளிப்கார்ட்டில் அடுத்தமுறை நீங்கள் பொருள்களை வாங்கும்போது இந்தக் கட்டண முறையைப் பயன்படுத்துங்கள்.
பலப் பொருள்களை வாங்குவதற்கு ஃப்ளிப்கார்ட் EGVகளைப் பயன்படுத்துங்கள்
உதாரணமாக, உங்களிடம்₹500 மதிப்புள்ள ஃப்ளிப்கார்ட் EGV உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ₹300 விலையுள்ள ஒரு பெர்ஃபியூம் மட்டும் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், பதற்றமடைய வேண்டாம். ஒரே வேளையில் அனைத்தையும் நீங்கள் செலவழிக்கத் தேவையில்லை. மீதமுள்ள உங்கள் பணம் ₹200 பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கிறது. அதேபோல், நீங்கள் ஒரு ஆர்டரை செய்துவிட்டு அதைக் கேன்சல் செய்கிறீர்கள் என்றால், அந்தப் பணம் நேரடியாக உங்கள் ஃப்ளிப்கார்ட் கிப்ட் கார்டுக்குச் சென்றுவிடும்.
உங்கள் ஃப்ளிப்கார்ட் EGV இருப்புத் தொகையை சரிபாருங்கள்
உங்கள் கிஃப்ட் கார்டின் இருப்புத் தொகையை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஃப்ளிப்கார்ட்டில் உங்கள் அக்கவுன்டில் லாக்இன் செய்து சரிபார்க்கலாம். திரையின் மேற்புற இடதுபக்கத்தில் உள்ள டிராப் டவுன் மெனு பட்டனில் உள்ள ‘Gift Cards’ என்பதைக் கிளிக் செய்யுங்கள். பிறகு, ‘Check Gift Card Balance’ என்பதை கிளிக் செய்யுங்கள். உங்கள் ஃப்ளிப்கார்ட் கிப்ட் கார்டு எண் மற்றும் PIN போன்றவற்றை உள்ளிடுங்கள், அவ்வளவு தான்! நீங்கள் செலவழித்த தொகையின் இருப்பை உங்களால் பார்க்கமுடியும்.
ஃப்ளிப்கார்ட் கிஃப்ட் கார்டுகள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்களுக்குள் நீங்கள் உங்கள் கார்டிலும் (cart) பொருள்களை வாங்கவும் பயன்படுத்தலாம். எனவே ஃப்ளிப்கார்ட்டில் லாகின் செய்து உங்களுக்குப் பிடித்தமானதைத் தாராளமாக வாங்கலாம்!
ஃப்ளிப்கார்ட் எலக்ட்ரானிக் கிஃப்ட் வவுச்சர்களைப் பற்றிய மேம்படுத்திய FAQ -ஐ படித்துக்கொள்ளுங்கள்