1. Home
  2. Tamil
  3. ‘விரைவு, தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியன ஹைப்பர்லோக்கலின் வலிமையான உந்து சக்திகளாக திகழ்கின்றன’ – சந்தீப் கர்வாவுடன் கேள்வி பதில்

‘விரைவு, தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியன ஹைப்பர்லோக்கலின் வலிமையான உந்து சக்திகளாக திகழ்கின்றன’ – சந்தீப் கர்வாவுடன் கேள்வி பதில்

0
Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

ஃப்ளிப்கார்ட்டின் துணைத்தலைவரான சந்தீப் கர்வா, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃப்ளிப்கார்ட் குயிக் என பெயரிடப்பட்டுள்ள ஹைப்பர்லோக்கல் சேவை வாடிக்கையாளருக்கு அளிக்கும் வாக்குறுதியை விளக்குகிறார்

‘விரைவு, தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியன ஹைப்பர்லோக்கலின் வலிமையான உந்து சக்திகளாக திகழ்கின்றன’ – சந்தீப் கர்வாவுடன் கேள்வி பதில்
0

விரைவானது. திறன்மிக்கது. நம்பகமானது. டர்போசார்ஜ் செய்யப்பட்டது போன்று மின் வர்த்தகம் செயல்படுவது குறித்து யோசித்துப் பாருங்கள். சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், ஃப்ளிப்கார்ட் குயிக்என்ற லேபிளின்கீழ் ஹைப்பர்லோக்கல் சேவைகளை வெளியிடுகையில், இதுதான் ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதியாகும். , ஜூலை 28அன்று பெங்களூரில் இதன் முதல் கட்ட அறிமுகம் மேற்கொள்ளப்பட்டது, கோவிட்-19 பெருந் தொற்று மின்வணிகத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தை அவசியமாக்கிய சரியான தருணத்தில் இது உதயமானது. ஹைப்பர்லோக்கல் பிரிவில் நுகர்வோரின் எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய ஹைப்பர்லோக்கல் சந்தையில், கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய மதிப்பீடுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் சி.ஏ.ஜி.ஆர். 2,306 கோடி ரூபாயைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருகாலத்தில் வெறும் வசதியாகக் கருதப்பட்ட ஹைப்பர்லோக்கல், இப்போது நீண்டகால அத்தியாவசிய சேவையாக உருவெடுத்துள்ளது, இது உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களுடன் ஆழ்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்துகிற அதே நேரத்தில் மின் வணிகத்தின் ஆற்றலையும் வசதியையும் மேம்படுத்துகிறது.


ஹைப்பர்லோக்கல் என்றால் என்னவென்று அறிய ஆர்வமாக இருக்கிறதா? ஃப்ளிப்கார்ட் குயிக் என்பதில் திரைக்குப் பின்னால் உள்ளவற்றை பற்றிய சிறப்பு பாட்காஸ்ட்டை பார்வையிடுங்கள்!


விரைவு என்கிற அம்சத்தை தவிரஹைப்பர்லோக்கல் திறன்களை இன்னும் சிறப்பாக மேம்படுத்துவதற்கு நிறைய விஷயங்கள்இருக்கிறது. சரக்கை பெறுதல், போதுமான இருப்பை பராமரித்தல் மற்றும் விநியோகச் சங்கிலிஆகியவற்றில் விரைவான இயக்கம் மற்றும் சக்தி வாய்ந்த தொழில்நுட்ப தளங்களை உருவாக்குவது போன்றவை பல வகையான தரமான தயாரிப்புகளை விரைவான, திறமையான மற்றும் நம்பகமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதற்கு அவசியமானதாகும்.

பெங்களூரில் ஃப்ளிப்கார்ட் குயிக் தொடங்கப் பெற்றிருக்கும் நிலையில், இந்த சந்தை தேவையை ஃப்ளிப்கார்ட் எவ்வாறு நிவர்த்தி செய்கிறது என்பது குறித்து அறிய ஃப்ளிப்கார்ட்டின் துணைத்தலைவரும் ஹைப்பர்லோகலின் தலைவருமானசந்தீப் கர்வாஉடன் பேசுகிறோம்.


பெருந்தொற்று உருவாக்கிய அசாதாரண சூழ்நிலையில் ஃப்ளிப்கார்ட் குயிக் உடைய அறிமுகம் எவ்வாறு மிகவும் பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் மாறும்?

தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்குகள் அவசியம் தேவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே அடைபட்டு இருக்க வேண்டிய அசௌகரியங்களையும் இந்த ஊரடங்கு ஏற்படுத்தியது. இந்தியாவுக்கு சேவை செய்வதில் உள்நாட்டு மின் வர்த்தக வணிகமாக, ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளை குறுகிய காலத்திற்குள் வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்திய ஹைப்பர்லோக்கல் டெலிவரி சேவையான ஃப்ளிப்கார்ட் குயிக் மூலம், இந்த இடைவெளியை சரிசெய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

வைட்ஃபீல்ட், பனத்தூர், எச்.எஸ்.ஆர். லே அவுட், பி.டி.எம். லே அவுட், பனஷங்கரி, கே.ஆர்.புரம், கோரமங்களா மற்றும் இந்திராநகர் உட்பட பெங்களூரில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் இந்த சேவையை நாங்கள் சோதனை செய்துபார்த்தோம். இந்த கவரேஜை மற்ற மாவட்டங்களுக்கும், பின்னர் நாடுமுழுவதும் உள்ள பிற மாநிலங்களுக்கும் நாங்கள் விரைவில் விரிவுபடுத்துவோம்.

ஃப்ளிப்கார்ட்டின் புதிய ஹைப்பர்லோக்கல் சேவை வாடிக்கையாளருக்கு அளிக்கும் வாக்குறுதிகள் யாவை?

ஃப்ளிப்கார்ட் குயிக் மூலம், வாடிக்கையாளர்கள் மளிகை சாமான்களை ‘எளிதாக தேர்வு செய்து, ஆர்டர்’ செய்யக்கூடிய அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் அடுத்த 90 நிமிடங்களில் ஆர்டர் செய்ய தேர்வு செய்யலாம் அல்லது அவர்களின் வசதிக்கு ஏற்ப 2 மணிநேர ஸ்லாட்டை முன்பதிவு செய்யலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து, மொபைல்கள் மற்றும் மின்னணு பாகங்கள் வரை பல்வேறு விதமான 2000 –க்கும் மேற்பட்ட தயாரிப்புகளின் பிரிவுகளில் இருந்து அவர்கள் தேர்வு செய்யலாம். அவர்கள் நாளின் எந்த நேரத்திலும் பொருட்களை ஆர்டர் செய்யலாம், மேலும் அவர்களின் ஆர்டர்கள் காலை 6 மணிமுதல் நள்ளிரவு வரை விநியோகம் செய்யப்படும். அனைத்து ஃப்ளிப்கார்ட் சேவைகளைப் போலவே, செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை நாங்கள் செயல்படுத்துவோம்.

ஃப்ளிப்கார்ட் குயிக் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன விதமான தயாரிப்புகள் வழங்கப்படுகின்றன?

இந்திய வாடிக்கையாளரின் தினசரி ஷாப்பிங் அனுபவத்தை தயாரிப்புக்கானஅணுகல், கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு விலை ஆகியவற்றின்அடிப்படையில் நவீனமயமாக்குவதே ஃப்ளிப்கார்ட் குயிக் ஆகும். முதல்கட்டமாக, வாடிக்கையாளர்கள் மளிகை சாமான்கள், ஃப்ரெஷ்பால் பொருட்கள், இறைச்சி, மொபைல்கள், எலெக்ட்ரானிக்ஸ் பாகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் என பல்வேறு விதமான பிரிவுகளில் 2,000 –க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை ஆர்டர் செய்யலாம்.

ஃப்ளிப்கார்ட் குயிக்கை இயக்கும் தொழில்நுட்பத்தைப்பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

வரைவு, தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியன ஹைப்பர்லோக்கலின் வலிமையான உந்துசக்திகள். அமைவிட மேப்பிங் புதுமையான மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் ஃப்ளிப்கார்ட் குயிக் இயக்கப்படுகிறது. அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை அணுகுமுறையை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம், இது இருப்பிடத்தை மிக துல்லியமாகக் குறிப்பது மட்டுமல்லாமல், மையப்படுத்திய விநியோக நேரத்திற்கும் வழிவகுக்கிறது. இதன்மூலம், விநியோக இடத்தை அடையாளம் காண அஞ்சல் குறியீட்டு முறையைப் பயன்படுத்திய பாரம்பரிய முறையிலிருந்து வேறுபட்டு வேறு முறையை கையாளுகிறோம், இது ஒரு பெரிய புவியியல் பகுதியை உள்ளடக்கியது ஆகும். கடைசி மைல் செயல்முறையை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், இந்த தொழில்நுட்பம் முகவரி-அமைவிட மேப்பிங்குக்கு கூடுதல் துல்லியத்தை தருகிறது.

ஹைப்பர்லோக்கல் அருகில் இருக்கும் கடைகளை சார்ந்திருக்கும் நிலையை குறைக்கிறதா?

மாறாக, ஹைப்பர் லோக்கல் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு இடையிலும், உள்ளூரில் கிடைக்கும் தயாரிப்புகளுக்கு இடையேயும் ஆழமான தொடர்புகளை உருவாக்குவதேயாகும். இது இந்தியாவுக்கு சிறந்த பொருத்தமான மாதிரியாக இருக்கும், ஏனெனில் எல்லா அளவிலான குடும்பங்களும் ஏற்கனவே தங்கள் பக்கத்து கடைகளில் பொருட்கள் வாங்க பழக்கப்பட்டுள்ளனர். உண்மையில் சொல்லப்போனால், நாங்கள் ‘ஹைப்பர்லோக்கல் சூழல்’ என்று அழைப்பவற்றில் இந்திய குடும்பங்கள் மிகவும் வசதியாக இருக்கின்றனர், அதாவது, விற்பனையாளர்கள், கடைக்காரர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் நெருக்கமான, குடும்ப உறவுகளை வளர்ப்பதற்கான சாத்தியம் உள்ளது. இப்போது, இதே உறவு மின் வணிகத்தின் வசதியால் செயலூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. டார்க் ஸ்டோர் (நோ-வாக்கின்) மாதிரியை நாங்கள் தொடங்குகிற போது, விற்பனையாளர்களை நுகர்வோருக்கு அருகாமையில் சரக்குகளை சேமிக்க நாங்கள் உதவுகிறோம், இந்த மாதிரியானது உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மற்றும் புதிய வணிகஉத்திகள் மற்றும் கூட்டாண்மைகளை செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இன்று, ஃப்ளிப்கார்ட் குயிக் மூலம், ஒரே கிளிக்கில்அக்கம் பக்கத்தில் இருக்கும் கடைகளின் முழு நெட்வொர்க்கையும் எங்கள் தளத்திற்கு கொண்டு வர முடியும்.

Enjoy shopping on Flipkart

About the Author

Team Flipkart Stories

இந்த கட்டுரையை பிளிப்கார்ட் கதைகள் ஆசிரியர் குழு எழுதி திருத்தியது. எங்களுடன் தொடர்பு கொள்ள, தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });