1. Home
  2. Tamil
  3. ஆந்திரப் பிரதேசத்தில், கைத்தறி நெசவாளர்கள் நூற்றாண்டு பழமையான மரபுகளைப் பாதுகாத்து, ஃப்ளிப்கார்ட் சமர்த்தால் செழித்து வளர்கின்றனர்

ஆந்திரப் பிரதேசத்தில், கைத்தறி நெசவாளர்கள் நூற்றாண்டு பழமையான மரபுகளைப் பாதுகாத்து, ஃப்ளிப்கார்ட் சமர்த்தால் செழித்து வளர்கின்றனர்

0
Read this article in ગુજરાતી | English

தலைமுறைகளாக, ஆந்திராவில் உள்ள சமூகங்கள் பழங்கால இந்திய கைத்தறி நெசவு பாரம்பரியத்தை சிரமம் எடுத்துக்கொண்டு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். ஒரு சிக்கலான செயல்முறை, இந்த ஆடைகள் உற்பத்தி செய்ய நாட்கள் ஆகும். கூடுதலாக, நெசவாளர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்று நிலையான வாழ்க்கைக்கு சம்பாதிப்பதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நெசவாளர் சங்கங்களுக்கான உச்ச அமைப்பான APCO, மாநிலத்தின் கைத்தறி தயாரிப்புகளை இ-காமர்ஸ் எல்லைக்குள் கொண்டு வர ஃப்ளிப்கார்ட் சமர்த்துடன் கைகோர்த்தது. இப்போது, நெசவாளர்களுக்கு பான்-இந்தியா வாடிக்கையாளர் தளம் மற்றும் சிறந்த வருமானம் கிடைப்பது மட்டுமல்லாமல், இந்த பார்வையாளர்களை ஈர்க்கும் தயாரிப்புகளை வடிவமைக்கவும் உருவாக்கவும் சந்தை நுண்ணறிவுகளை அதில் சேர்த்திட அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

ஆந்திரப் பிரதேசத்தில், கைத்தறி நெசவாளர்கள் நூற்றாண்டு பழமையான மரபுகளைப் பாதுகாத்து, ஃப்ளிப்கார்ட் சமர்த்தால் செழித்து வளர்கின்றனர்
0

ந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் சிறுவனாக, பொப்ப பாலாஜி தனது விடுமுறையின் பெரும்பகுதியை மிகுந்த கவனத்துடன் கழித்தார், அவரது குடும்ப உறுப்பினர்கள் கைத்தறிகளை தாள துல்லியத்துடன் வேலை செய்வதைக் கவனித்தனர், ஏனெனில் அவர்கள் எளிய சாயம் ஏற்றப்பட்ட பருத்தி நூலை நேர்த்தியான மங்களகிரி புடவைகளாக மாற்றினார்கள்.

“நான் எனது விடுமுறையை ஒருபோதும் வீணாக்கியதில்லை,” என்று அவர் இப்போது நினைவு கூர்ந்தார். 30 வயதான, திரு. பாலாஜி 15 வருடங்களாக நெசவு கலையை பயிற்சி செய்து வருகிறார். “இது என் இரத்தத்தில் உள்ளது,” என்று அவர் கூறுகிறார், “என் முன்னோர்களும் நெசவாளர்களாக இருந்தனர். நான் இந்த கைவினைப்பொருளில் ஆர்வமாக உள்ளேன், நான் வளர்ந்தவுடன், இதன் மேல் உள்ள விருப்பத்தை தொழிலாக மாற்றினேன்.

handloom

குண்டூர் மாவட்டத்தில் இருந்து மங்களகிரி பருத்தியின் நெசவுகள் மற்றும் ஊடை முதல் கடலோர மாநிலத்தில் வளமான கைத்தறி வரலாறு கொண்ட உப்பாடாவின் சிக்கல் நிறைந்து நெய்யப்பட்ட ஜம்தானி புடவைகள் வரை, திரு. பாலாஜி போன்ற ஏராளமான சூழலை தாக்குப்பிடிக்கும் நெசவாளர்களால் பாதுகாக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, கைத்தறி நெசவு கலையை தலைமுறைகளாக கடந்து சென்று, பண்டைய இந்திய பாரம்பரியத்தை கடினமாக நிலைநாட்டிய பல குடும்பங்களில் அவருடைய குடும்பமும் ஒன்று.

1976 ஆம் ஆண்டில், ஆந்திர பிரதேஷ் ஸ்டேட் ஹேண்ட்லூம் வீவர்ஸ் கோ-ஆப்பரேட்டிவ் லிமிடெட் (APCO) அத்தகைய நெசவாளர் சமூகங்களுக்கு சந்தைப்படுத்தல் ஆதரவை வழங்க நிறுவப்பட்டது. இன்று, APCO 950 நெசவாளர்களின் கூட்டுறவு சங்கங்களை 159 கிளைகளுடன் இணைத்து மாநிலத்தின் தொலைதூர கிராமங்களை கூட உள்ளடக்கியிருக்கிறது.

handloom

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தொற்று பரவலுக்கு மத்தியில், APCO ஃப்ளிப்கார்ட் சமர்த் திட்டத்துடன் கைகோர்த்தது. “நாங்கள் ஃப்ளிப்கார்ட் சமர்த் உடன் கூட்டுசேர்ந்து, சந்தை சார்ந்த வடிவமைப்புகள் மற்றும் வகைகள் பற்றிய நுண்ணறிவைப் பெற எங்கள் நெசவாளர்களின் கைத்தறி கைவினைகளை ஆன்லைனில் எடுத்தோம், அதன் மூலம் வருமானத்தை அதிகரித்து, நெசவாளர் சமூகத்திற்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தோம், ”என்று APCO இல் சந்தைப்படுத்துதல் பொது மேலாளரான எல் ரமெஷ் பாபு, விளக்குகிறார்.

ஜூலை 2019ல் தொடங்கப்பட்ட, ஃப்ளிப்கர்ட் சமர்த் சமூகத்தின் பின் தங்கிய பிரிவுகளான— நெசவாளர்கள், கைவினைஞர்கள், MSMEs, கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் பலர்— இ-காமர்ஸ் எல்லைக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு பான்-இந்தியா வாடிக்கையாளர் தளம், பல நன்மைகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட வருமான ஆதாரத்தை அணுக உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

handloom

“அரசாங்கம் வழங்கும் மானியங்கள், APCO வின் ஆதரவு மற்றும் ஃப்ளிப்கார்ட்டில் சந்தைப்படுத்தல் மற்றும் தெரிவுநிலை ஆகியவை இணைந்து நெசவாளர்களை மேம்படுத்துவதற்கும் சிறந்த வருமானத்தை ஈட்டுவதற்கும் உதவும்,” என்கிறார் APCO தலைவர் சில்லப்பள்ளி மோகன் ராவ்.

அவர்கள் பதிவுசெய்ததிலிருந்து, ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில்கைத்தறி பொருட்கள் நிறைந்த தொகுப்பை APCO கொண்டு வந்துள்ளது. மற்றவற்றுக்கு இடையில்வெங்கடகிரி, மங்களகிரி, மாதவரம், சிராலா, தர்மவரம், உப்பாடா மற்றும் ராஜமுந்திரி உள்ளிட்ட, பாரம்பரியமிக்க பருத்தி புடவைகளின் உண்மையான தேர்வு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புடவைகள் உலகப் புகழ்பெற்றவை, இவற்றுள் சில புவியியல் குறியீட்டைப் பெற்றுள்ளது.

“எங்கள் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அடைய உதவும் ஃப்ளிப்கார்ட் ஒரு சிறந்த தளமாகும். ஃப்ளிப்கார்ட் சமர்த்துடன் கூட்டு சேர்ந்து, எங்கள் நெசவாளர்களின் வருமானத்தை நான்கு மடங்காக பெருக்க முடிந்தது, ”என்று திரு ராவ் வெளிப்படுத்துகிறார்.

ஃப்ளிப்கார்ட் சமர்த் பங்காளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட மற்ற நன்மைகளில், கேட்டலாக் செய்யும் ஆதரவு, பயிற்சி அமர்வுகள், 6 மாத 0% கமிஷன் மற்றும் விளம்பர வரவுகள் ஆகியவை முதல் முறையாக இ-காமர்ஸ் பயனர்களுக்கு சிக்கலில்லாத மாற்றத்தை செயல்படுத்துகின்றன. இந்த திட்டம் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு நிலையான வருமானத்தை ஈட்ட உதவுவதன் மூலம் அதிகாரம் அளிக்கிறது, அதே நேரத்தில் ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு பாரம்பரிய, உள்ளூர், கையால் தயாரிக்கப்பட்ட மற்றும் பாரம்பரியச் சந்தைகளில் இருந்து பாரம்பரியம் நிறைந்த தயாரிப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் 750,000 க்கும் மேற்பட்ட வாழ்வாதாரங்களை ஆதரிக்கிறது.

வெற்றிக் கதையை நெய்வது

குறைந்தபட்ச மற்றும் லேசான மங்களகிரி சேலைக்கான நெசவு செயல்முறை ஒரு விரிவான ஒன்றாகும். தறிக்கு முந்தைய செயல்முறை முதல் இறுதி தயாரிப்பு வரை, நேர்த்தியான ஆடைகளை வடிவமைக்க பல நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் தனித்துவமான நிபுணத்துவம் தேவை.

handloom

“ஒரு புடவையை முடிக்க இரண்டு நாட்கள் ஆகும்” என்று திரு பாலாஜி விளக்குகிறார். “நாங்கள் காஞ்சி பார்டர்களுடன் பருத்தி பட்டு மங்கல்கிரி புடவைகளை நெசவு செய்கிறோம். எங்கள் கைவினைஞர்கள் பார்டர்களில் யானைகள் மற்றும் மயில்கள் போன்ற பல்வேறு வடிவமைப்புகளை கையால் சேர்த்து, பல்லுவில் ஜாகார்ட் வேலையில் சேலையை முடிக்கிறார்கள்.

“முன்பு, எங்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மிகக் குறைவாக இருந்தனர், எங்கள் தயாரிப்புகளின் விற்பனையானது அருகிலுள்ள சில இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது,” என்று அவர் மேலும் கூறுகையில், நாட்டில் நெசவாளர் சமூகங்கள் எதிர்கொள்ளும் கூட்டு சவால்களைப் பற்றியும் பேசினார்.
“எங்கள் தயாரிப்புகள் எங்கள் ஆஃப்லைன் கடைகளில் பிரத்தியேகமாக விற்கப்பட்டன, இது எங்கள் விற்பனையை கட்டுப்படுத்தியது,” என்று திரு பாபு கூறுகிறார்.

handloom

இப்போது, நெசவாளர்களின் சமூகம் நூற்றாண்டு பழமையான பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும் வகையில் இ-காமர்ஸ் ஒரு பான்-இந்தியா வாடிக்கையாளர் தளத்தைத் திறந்துள்ள அதே நேரத்தில் அத்தகைய சந்தையை ஈர்க்க நவீன சந்தை சார்ந்த வடிவமைப்புகளை இணைத்துள்ளது.

“இ-காமர்ஸ் மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து வருவது மட்டுமல்லாமல், எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எங்கள் தயாரிப்புகளை வடிவமைக்க புதிய யோசனைகளையும் பெறுகிறோம். எங்கள் அசல் வடிவமைப்புகளும் கைத்தறி தயாரிப்புகளும் நாடு முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைகின்றன, ”என்று திரு பாலாஜி குறிப்பிடுகிறார்,“ குறிப்பாக தொற்றுநோய் சூழ்நிலையில், இ-காமர்ஸ் எங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்று எங்கள் வாழ்வாதாரத்தைப் பெற உதவியது.”

இப்போதைக்கு, நெசவாளர்கள் – இந்தத் துறையின் வளமான கலாச்சார வரலாற்றைக் கொண்டாடுவதற்காகவும், கையால் செய்யப்பட்ட மற்றும் கையால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட நாளான ஆகஸ்ட் 7, 2021 அன்று தேசிய கைத்தறி தின கொண்டாட்டங்களுக்கு உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

இந்த நாள் மாநில நெசவாளர்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்புடன் “தேசிய கைத்தறி தினத்தன்று, இந்தியாவின் நெசவாளர் சமூகத்திற்கு மாதத்திற்கு இரண்டு முறையாவது கைத்தறி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்போம் “என்று திரு ராவ் வலியுறுத்துகிறார்.

திரு. பாலாஜியைப் பொறுத்தவரை, அவரது சமூகத்தின் படைப்புகளில் மிகவும் தகுதியான, கவனத்தை பிரகாசிக்க வைக்கும் நாள். “என் நெசவாளர் சகோதர சகோதரிகள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும், எங்கள் சிறகுகளை விரித்து, இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

APCO இலிருந்து நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட கைத்தறி பொருட்களைஇங்கே க்ளிக் செய்யவும்.

Enjoy shopping on Flipkart

About the Author

Jishnu Murali

ஜிஷ்ணு முரளி பிளிப்கார்ட் கதைகளைக் கொண்ட எழுத்தாளர். உணவு, வரலாறு மற்றும் பாரம்பரியம் மூலம் வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிக்க அவர் விரும்புகிறார். இசையும் இருண்ட நகைச்சுவையும் அவரை உயிரோடு வைத்திருக்கின்றன.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });