ஒடிஷாவில், ஒரு நெசவாளர் சமூகத்தின் 100 ஆண்டு பழமையான கைத்தொழில் ஃப்ளிப்கார்ட் உடன் செழிக்கிறது

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

ஃப்ளிப்கார்ட் மற்றும் இ-வணிகத்துடன், ஒடிஷாவைச் சேர்ந்த இந்த நெசவாளர் சமூகத்தினர், அவர்களது புகழ்பெற்ற ஜவுளி கைவினைப் பொருட்களையும் கைத்தறி திறன்களையும் நாடு முழுவதும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கதையில், சித்ரங்கன் பால் என்னும் இளைஞர் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக அவரது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மாறிவரும் காலங்களுடன், அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியான இந்த வேலை, மரபுகளுடன் சேர்ந்து மிகச் சிறந்தவையாக எவ்வாறு உருவாகியுள்ளன என்பதைப் பற்றி பேசுகிறார்.

handloom sarees

என் பெயர் சித்ரங்கன் பால், எனக்கு 22 வயதாகிறது. நான் 2019ல் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளரானேன். நான் ஒடிஷாவின் கட்டக்கைச் சார்ந்தவன்.

நான் நெசவாளர் சமுகத்தைச் சார்ந்தவன். நாங்கள் கைகளால் நெய்து சம்பல்புரி சேலைகளை விற்கிறோம், இவை கட்டன் மற்றும் இகாட் பட்டினால் ஆனது. இதுவே 100 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது வேலையாகவும் பாரம்பரியமாகவும் உள்ளது. ஹேன்லூம் (கைத்தறி) சேலைகள், ட்ரெஸ் மெட்டீரியல்கள், ஸ்டோல்கள், துப்பட்டாக்கள், டேபிள் லைனின் மற்றும் கிச்சன் லைனின் ஆகியவற்றை விற்கிறோம். அனைத்து வயதினருக்குமான கைத்தறி துணி வரம்புகள் எங்களிடம் உள்ளது.

நான் ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கியபோது எங்கள் 200 புடவைகளை பட்டியலிடுவதற்குஃப்ளிப்கார்ட் எங்களுக்கு உதவியது. ஒடிசா மாநிலத்தில் இருந்து தயாரிப்புகள் தெரிவுநிலையைப் பெறுகின்றன என்பதில் நான் பெருமைப்படுகிறேன். எங்கள் தயாரிப்புகளை நாடு முழுவதும் சந்தைப்படுத்த ஃப்ளிப்கார்ட் எங்களுக்கு உதவியது. ஃப்ளிப்கார்ட்டில் சேருவதற்கு முன்பு, நாங்கள் எங்கள் தயாரிப்புகளை எங்கள் கிராமத்தில் அல்லது மாநிலத்தில் விற்பனை செய்தோம், ஆனால் இப்போது எங்கள் தயாரிப்புகள் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன.

1,000 நெசவாளர்கள் மற்றும் 200 வடிவமைப்பாளர்கள் கொண்ட சமூகம் எங்களுடையது. இந்த கைத்தறி புடவைகளை தயாரிக்க 1,000 குடும்பங்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதே இதன் பொருள். பட்டு, பருத்தி போன்ற மூலப்பொருட்களை வாங்கிய பிறகு, அவற்றை எங்கள் நெசவாளர் சமூகத்தில் உள்ள குடும்பங்களுக்கு விநியோகிக்கிறோம். வடிவமைப்பு தேவைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டவுடன், அவர்கள் தங்கள் வீடுகளில் கைத்தறி புடவைகளை உருவாக்குகிறார்கள்

handloom sarees

ஃப்ளிப்கார்ட்டுக்கு முன்பு, நாங்கள் சுமார் 40 ஆண்டுகளாக பாரம்பரிய சேலை விற்பனையாளர்களாக இருந்தோம், மேலும் அதே டிசைன்களைக் கொண்டு நாங்கள் பணியாற்றினோம். எங்கள் வாடிக்கையாளர்கள் ஒடிஷா மற்றும் கொல்கத்தா வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர், அதோடு மட்டுமல்லாமல் எங்கள் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் திறன்களைப் பற்றி பல மாநிலங்களுக்குத் தெரியாது. எங்கள் இலாப அளவு பெரிதாக இல்லை மற்றும் டிசைன்கள் பழமையானவையாக இருந்தன.

ஆன்லைனில் விற்பனை செய்வதனால் சந்தைப்போக்குகள் மற்றும் இருப்பிடம் அடிப்படையிலான விற்பனையை தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் எங்களுக்கு உதவியது. வெவ்வேறு சேலைகள் மற்றும் டிசைன்களில் எதற்கு தேவை அதிகம் என்பதை இப்போது நாங்கள் அறிந்துகொண்டோம். எங்கள் தயாரிப்புகளில் பல பெங்களூருக்கும் மற்ற தென்னிந்திய நகரங்களுக்கும் செல்கின்றன. மெட்ரோ நகரங்களில் பட்டு துணிகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் எங்களிடம் நிறையபேர் உள்ளனர், அண்டை நகரங்களில் பருத்திக்கு அதிகத் தேவை உள்ளது.

ஃப்ளிப்கார்ட்டில் விற்பதனால், எங்கள லாபங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. எங்கள் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்திருப்பது எனது மக்களுக்கு கண்ணியத்துடன் வாழ்க்கையை நடத்துவதற்கு மேலும் பல வேலைகளையும் வாய்ப்புக்களையும் அளித்துள்ளது என்பதாகும்.

பல்லவி சுதாகரின் கூடுதல் உள்ளீடுகளுடன் ஜிஷ்னு முரளியிடம் சொன்ன படி.


இதையும் படிக்கவும்: தடங்கல் இல்லாத கனவுகள்: சூரத்தைச் சார்ந்த ஒரு குடும்ப வியாபாரம் நிச்சயமற்ற தன்மையை இ-வணிகம் மூலம் கடந்து வருகிறது

தடங்கல் இல்லாத கனவுகள்: சூரத்தைச் சார்ந்த ஒரு குடும்ப வியாபாரம் நிச்சயமற்ற தன்மையை இ-வணிகம் மூலம் கடந்து வருகிறது

 

Enjoy shopping on Flipkart