1. Home
  2. Tamil
  3. ஸ்டோன்ஸூப் கதை: இந்த ஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னர், நிலையான வாழ்க்கைக்கான அணுகலை எளிதாக்குகிறது மேலும் பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்கிறது!

ஸ்டோன்ஸூப் கதை: இந்த ஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னர், நிலையான வாழ்க்கைக்கான அணுகலை எளிதாக்குகிறது மேலும் பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்கிறது!

0
Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

அனைவருக்கும் நிலையான வாழ்க்கை எளிதாக கிடைப்பதற்கு வழிவகை செய்யும் நோக்கத்துடன் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட ஸ்டோன்ஸூப் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் பெருமைப்படும் விதமாக’ இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை’ மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல்மீது அக்கறை கொண்ட தொழில் முனைவோர் தென்னிந்தியா முழுவதும் உள்ள கிராம சுயஉதவிக்குழுக்களில் உள்ள பெண்களை மேம்படுத்தும் வழியைக் கண்டுபிடித்தனர். இந்த ஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னர் இதை எவ்வாறு செய்தார் என்பதை அறிய தொடர்ந்து வாசித்திடுங்கள்!

ஸ்டோன்ஸூப் கதை: இந்த ஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னர், நிலையான வாழ்க்கைக்கான அணுகலை எளிதாக்குகிறது மேலும் பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு வழிவகை செய்கிறது!
0

இந்தக் கதையில்: ஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னர் ஸ்டோன்ஸூப் பற்றியும் சுற்றுச்சூழல் நெடுகிலும் தாக்கத்தை ஏற்படுத்திய அதன் பணியைப் பற்றியும் பார்ப்போம்.


“நான் ஓட்டு போட்டு எனது கழிவுகளை ஒதுக்கி வைத்து விட்டால், ஒரு குடிமகனாக எனது வேலை முடிந்துவிட்டது, மீதமுள்ள பணி அரசாங்கத்தினுடையது என்று நான் எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தேன்!” என்று ஸ்மிதா குல்கர்னி நகைச்சுவையாக கூறினார்.

“ஆனால் நம்மைப்போன்ற படித்தவர்கள் இப்போது களத்தில் இறங்காவிட்டால், நாம் நமது குழந்தைகளுக்கு பெரும் பிரச்சினையை விட்டுச் செல்வோம்,” என்று அடுத்து கடுமையாக பேசத் தொடங்கினார் அவர்.

பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட ஸ்டோன்ஸூப் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்மிதா ஆவார்; இந்நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்க விரும்பும் எவருக்கும் வசதியான தீர்வுகளை வழங்குகிறது. ஸ்டோன்ஸூப் சமீபத்தில் ஃப்ளிப்கார்ட்டுடன் ஒரு சமர்த் பார்ட்னராகக் கைகோர்த்து, உரக்கருவிகள், மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் கப்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி மூலம் தயாரிக்கப்பட்ட சானிட்டரி பேட்கள் போன்ற தயாரிப்புகளை ஃப்ளிப்கார்ட் இயங்குதளத்தில் பட்டியலிடுகிறது.

பயிற்சியின் மூலம் கணினி அறிவியல் பொறியாளரான ஸ்மிதாவும், ஐ.ஐ.எம். கொல்கத்தாவின் முன்னாள் மாணவரான இணை நிறுவனர்மாலினி பர்மாரும்சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படும் தொழில் முனைவோராக மாறுவதற்கு முன்பே சுற்றுச்சூழலை காக்கும் போராளியாகத் திகழ்ந்தனர்.

“கழிவுப் பொருட்கள் பிரிப்பிற்கான அண்டைச் செயல்பாட்டு இயக்கத்தின் அங்கத்தினராக நாங்கள் இருந்தபோது, கழிவினை பிரித்த பிறகும்கூட, கழிவுகளின் அளவு மிகப்பெரியதாக இருப்பதையும் மேலும் அதை கையாளுவதற்கான உள்கட்டமைப்பு எதுவும் இல்லை என்பதையும் நாங்கள்உணர்ந்தோம்,” என்று அவர் கூறுகிறார். விரைவிலேயே, அவரும் அவருடைய குழுவும் சுயமாக செயல்பட முடிவு செய்தார்கள், எவ்வாறு நிலையான முறையில் வாழவேண்டும், எப்படி வீட்டிலேயே உரம் தயாரிக்க வேண்டும் என்று மக்களுக்கு கற்பிப்பதற்கு முடிவு செய்தார்கள்.

ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் பெங்களூரு இந்திராநகரில் ஒரே ஒரு கடை மட்டுமே இருந்தது. மக்களுக்கு விஷயங்கள் எளிதாக கிடைப்பதற்கு ஒரு நிலைத்தன்மை தேவை. ஒரு நிலையான வாழ்க்கை முறையை வாழ நீங்கள் ஒருவரிடம் சொல்லலாம் ஆனால், அவ்வாறு வாழ்வதற்கு உதவும் தயாரிப்புகள் மற்ற தயாரிப்புகளைப் போலவே எளிதாக அணுகக்கூடியதாக இருக்கவேண்டும்,” என்று அவர் வலியுறுத்துகிறார்.

 

stonesoup

 

ஆகவே, சற்றேறக்குறைய 5 ஆண்டுகளுக்குமுன்பு, ‘நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்கள்’ ஒரு நன்னோக்குடைய இயக்கத்தில் ஆர்வலர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தொழில் முனைவோரை சாதாரண குடிமக்களுக்கு எளிதான நிலைத்தன்மை உடைய வாழ்க்கையை வாழ்வதற்கான தீர்வுகளை வழங்கக் கூடியவர்களாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த தருணம் தான் ஸ்டோன்ஸூப் உதயமாவதற்குக் காரணமாக அமைந்தது.

இயற்கைக்கு தீங்கிழைக்காத வகையில் எளிதாக வாழ்வதற்கு இந்த நிலைத் தன்மையானது மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த நிலைத்தன்மை பெருமளவிலான மக்களை சென்றடைவதற்கும் மேலும் இவை மக்களின் வீடு தேடி சென்றடைவதற்கும் ஃப்ளிப்கார்ட் போன்ற ஒரு இயங்குதளத்தில் விற்பதைவிட சிறந்த வழி எதுவாக இருக்க முடியும்?” என்று Flipkart Samarthஃப்ளிப்கார்ட் சமர்த் பார்ட்னராக மாறுவதற்காக அவர்கள் எடுத்த முடிவைப்பற்றி அவர் கூறுகிறார், மேலும் இவற்றின் மூலம் இந்த இயங்குதளத்தில் ஷாப்பிங் செய்யும் 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு அவருடைய தயாரிப்புகளை வழங்குகிறார்.

அவர்களின்அனைத்துதயாரிப்புகளும்,உரக் கருவிகள் முதல் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் கப்கள் வரை , – அடிப்படையில் முற்றிலும் மாறுபட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தாலும், இவர்கள் விற்பனை செய்யும் அனைத்து தயாரிப்புகளும் கழிவு/குப்பை கதைகளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.

”தனது தயாரிப்புகள் காரணமாக12 மில்லியன் பேட்கள் நிலத்தில் புதைவதிலிருந்து மாற்று வழியைக் கண்டுள்ளன, தினமும் 10 டன் ஈரமான கழிவுகள் எங்கள் கம்போஸ்டர்களில் உரமாக தயாரிக்கப்படுகின்றன, எங்களது துணிப் பைகள் காரணமாக பிளாஸ்டிக் பைகள் உலகளவில் 5 மில்லியன் அளவு குறைந்துள்ளன”, என்று ஸ்டோன்ஸூப் கூறுகிறது.

அவர்களின் தயாரிப்புகள் அனைத்தும் பெருமைப்படும் விதமாக’ இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை’ என்றாலும், இவர்களின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேட்கள் நாட்டின் கிராமங்கள் மற்றும் சிற்றூர்களில் உள்ள சுயஉதவிக் குழுக்களின் (எஸ்.ஹெச்.ஜி-க்கள்) அங்கத்தினராக இருக்கும் பெண்களால் கையால் தயாரிக்கப்படுகின்றன.

stonesoup

 

“நாங்கள் 20 சுய உதவிக்குழு சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்,” என்று ஸ்மிதா விளக்குகிறார். அவற்றில் 5 குழுக்கள் பெங்களூரு கிராமப்புறத்திலும் மீதமுள்ளவை திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் (தமிழ்நாட்டில்) மற்றும் பத்ரா, தர்வாட் மற்றும் மண்டியா (கர்நாடகாவில்) போன்ற பகுதிகளிலும் அமைந்துள்ளன.

இன்று, 110 –க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டாண்மை மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்பிலிருந்து பயனடைகிறார்கள். “குழந்தைகளை பராமரிக்க வேண்டியிருப்பதால், வேலைக்குச் செல்ல முடியாமல், ஆனால் அதே சமயம் அவர்களது குடும்பங்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கான வருமானம் தேவையாக இருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை இது உறுதிசெய்கிறது. அவர்கள் வீட்டில் இயந்திரங்களை வைத்திருக்கிறார்கள், எனவே அவர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொண்டு, மற்ற வீட்டு கடமைகளை நிறைவேற்றும் அதே வேளையில் தங்கள் வீடுகளில் இருந்தபடியேவேலைகளையும் செய்கிறார்கள்.”

டெலிவரி காலக்கெடு பெண்களைப் பொறுத்தது மற்றும் அவர்கள் எவ்வளவு நேரம் இந்த வேலையில் ஈடுபடமுடியும் என்பதைப் பொறுத்தது. அவர்களின் கூட்டாளர் மையங்களில் சில மாற்றுத்திறன் உள்ள பெண்களும் பணியாற்றுகிறார்கள். “உதாரணமாக, திண்டுக்கல்லில் உள்ள மையங்களில் ஒன்று மாற்றுத்திறன் உடைய விளையாட்டு வீரரால்நடத்தப்படுகிறது, மேலும் மாற்றுத்திறன் உடைய பெண்கள் இந்த மையத்தில் பேக்கிங் துறையில் பணியாற்றுகிறார்கள்.”

ஊரடங்கின்போது, துணிபேட்களின் கிராக்கி சரிவை சந்தித்தன, இதன் மூலம் கூட்டாளர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறைந்தன. எனவே அதே பொருளைப் பயன்படுத்தி முகக் கவசங்களை நம்மால் தயார் செய்யமுடியுமா? என்று அவர்கள் குழுவாக ஒன்றுகூடி சிந்தித்தனர். “அளவீடுகள் மற்றும் ஸ்டைல்கள் குறித்து இறுதி முடிவெடுக்க நாங்கள் வீடியோ அழைப்பில் கலந்தாலோசித்தோம். அவர்கள் அவ்வாறே தயார் செய்தார்கள். முக கவசங்கள் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மாதங்களில் அவர்களுக்கு கைகொடுத்தது,” என்று ஸ்மிதா உறுதியாகக் கூறுகிறார்.

stonesoup

 

உரக் கருவிகளைப் பொறுத்தவரை, பல இடங்களில் குப்பை சேகரிப்பு தடைபட்டபோதும், ஊரடங்கின்போது ஸ்டோன்ஸூப் உரக் கருவிகளின் தேவை அதிகரித்தது. “ஈரமான கழிவுதான் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது என்பதை மக்கள் உணர்ந்தார்கள்!” அவர் சிரித்தவாறு கூறுகிறார்.

மே மாதத்தில், மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் தயாரிப்புகளின் விற்பனை கோவிட்-19 க்குமுந்தைய நிலைக்குதிரும்பியது.</ span>

மும்பையிலிருந்து வந்தவர் என்றாலும், இப்போது பெங்களூரில் வசித்து வரும் ஸ்மிதா, தொழில்நுட்ப வல்லுநராக இருந்து பின்பு நன்னோக்குடைய அமைப்பின் ஆர்வலராக மாறி, பிறகு சமூகத்திற்கு நன்மை பயக்கும் தொழில் முனைவோராக மாறியதாகக் கூறுகிறார். அவர் தனக்கு ஆர்வமுள்ள விஷயத்தில் முழுநேரமாகப் பணியாற்றுவதற்கு முன்பு தொழில்நுட்ப துறையில் 10 ஆண்டுகள் செலவிட்டார்.

பெங்களூரு சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் குழுவின் ஸ்தாபக உறுப்பினரான இவர், நகரத்தில் ஒரு முறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடைசெய்ய நகர அளவிலான ஒரு இயக்கத்தை வழிநடத்தினார். இந்த தடை பிறப்பிக்கப்பட்ட பிறகு, அதைச் செயல்படுத்த அரசாங்கத்துடன் இணைந்தும்பணியாற்றினார்.

சமீபத்தில், ஸ்டோன்ஸூப்பில் உள்ள அனைத்து பெண்கள் குழுவும் ஃப்ளிப்கார்ட்டின் சிறந்த மற்றும் வரவிருக்கும் விற்பனையாளர்களை கௌரவிக்கும் ஆண்டு விழாவானஃபிளிப்ஸ்டார்ஸ் விருதுகளில் இரண்டு முறை விருதுகளை வென்றது. “இது எங்களுக்கு மிகவும் தெரிவுநிலையைக் கொடுத்தது என்றும், அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்களிடையேயும் எங்களை வெளிப்படுத்திக் காட்டியது என்றும் அவர் கூறுகிறார்.

பூமிக்கு நல்லதுஎன்பதால் மட்டும் நிலையான வாழ்க்கை முறைக்கு மாறும்படி மக்களிடம் சொல்லாமல், அவர்களது ஆரோக்கியத்திற்காகவும் மாற வேண்டும் என்று மக்களிடம் சொல்ல வேண்டும் என்பதே அவர் கூறும் தத்துவம். நமது ஆரோக்கியத்தை நாம் கவனித்துக்கொள்வதற்கு நேரம் ஒதுக்கினால், சுற்றுச்சூழலும், பாக்கெட்டும் தானாக சரியான முறையில் பராமரிக்கப்படுவதற்கு நாம் வித்தாக அமைகிறோம் என்று தான் நினைப்பதாக அவர் விளக்குகிறார்.

“நமது கழிவுகள் எங்கும் செல்வதில்லை. நாம் அப்புறப்படுத்தும் கழிவுகள்/குப்பைகள் ஒவ்வொன்றையும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றலாம், நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வாறு மாற்றுவதற்கு சிறிய முயற்சி தான்,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

Enjoy shopping on Flipkart

About the Author

Team Flipkart Stories

இந்த கட்டுரையை பிளிப்கார்ட் கதைகள் ஆசிரியர் குழு எழுதி திருத்தியது. எங்களுடன் தொடர்பு கொள்ள, தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });