நுண்ணுயிரியல் (மைக்ரோபயாலஜி) பட்டதாரியான ஷ்ரிஸ்டி மிஸ்ரா திருமணமான பிறகு மும்பைக்குச் சென்றபோது, யூடியூப் வீடியோக்களைப் பார்க்கும்போது நகை தயாரிப்பதில் ஆர்வம் கண்டார். விரைவில் அவர் அதை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டு அதிலிருந்து சம்பாதிக்க முடிவு செய்தார். அப்போது தான் # செல்ஃப்மேட் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக பதிவுசெய்தார். அவருடைய எழுச்சியூட்டும் கதையைப் படியுங்கள்.
என் பெயர் ஷ்ரிஸ்டி மிஸ்ரா. நான் தேராதூனைச் சேர்ந்தவள், நான் வெற்றிகரமாக ஆன்லைன் வியாபாரத்தை நடத்தி வருகிறேன். நுண்ணுயிரியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன், மேலும் வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன்னர் நான் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தேன். எனக்கு திருமணம் முடிந்த மும்பைக்கு வந்தேன். ஒரு நாள், யூடியூப் வீடியோக்கள் சிலவற்றை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கையில், நகை தயாரிப்பதைக் கற்றுக்கொண்டால் என்ன என்று தோன்றியது. எனக்குத் தேவையான வீடியோக்களை நான் கண்டறிந்தேன், பொழுதுபோக்காக நகை செய்வதைக் கற்றுக்கொண்டேன்.
நான் காதணிகளும் வளையல்களும் செய்வேன். வடிவமைக்கும்போது நான் நிறைய மூலப்பொருட்களைப் பயன்படுத்துகிறேன். நான் வேகமாக இதை கற்றுக்கொண்டதுடன் நன்றாகவும் செய்ய ஆரம்பித்தேன். பிறகு ஒரு நாள், நான் நகைகள் விற்கும் மாலில் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் நான் செய்ததைப் போலவே டிசைன்களைப் பார்த்தேன். அதோடு அந்த டிசைன்கள் மற்ற வாடிக்கையாளர்களுக்குப் பிடித்திருப்பதையும் பார்த்தேன். அப்போதுதான் நான் செய்த நகைகளை ஆன்லைனில் விற்பதற்கு முடிவுசெய்தேன். ஜேபிஎன் ஃபாஷன் கேலரி என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஃப்ளிப்கார்ட்டுடன் in 2017 கைகோர்த்தேன்.
என் பகுதியில் உள்ள கடையில் என் நகைகளை விற்பதற்கு ஒருபோதும் நான் விரும்பவில்லை. ஒரு ஆன்லைன் நிறுவனம் ஒரு வணிக உரிமையாளரிடம் கொண்டு வரும் பரந்த வாடிக்கையாளர் தளத்தைப் பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். தவிர, நீங்கள் ஆன்லைனில் விற்பனை செய்கிறீர்கள் என்றால், ஒரு வணிகத்தை ஆஃப்லைனில் செய்வதுடன் ஒப்பிடுகையில் கவலைப்படவேண்டிய அவசியம் குறைவு. நான் என் வீட்டில் இருந்துகொண்டே வசதியாக என்னுடைய வியாபாரத்தைச் செய்கிறேன். இன்று எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது, அதோடு அனைவரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள். நான் கற்றுக்கொண்ட மற்றொரு விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு வெற்றிகரமான ஆன்லைன் வணிகத்தை நடத்தும்போது, வாடிக்கையாளர் தரவைப் படித்து, ட்ரெண்டுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
ஃப்ளிப்கார்ட் எனது வணிகத்தில் எனக்கு நிறைய உதவுகிறது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணித்து, உங்கள் வணிகத்தை வளர்க்க உதவும் தரவுகளுடன் உங்களிடம் அவர்கள் வருகின்றனர். என் விஷயத்தில், நான் ஆன்லைனில் பட்டியலிடும் பல்வேறு வகையான நகைகளை விரிவுபடுத்த வேண்டியிருந்தது, மேலும் நான் பட்டியலிடக்கூடிய மற்ற வகைகளை அடையாளம் காண அவர்கள் எனக்கு உதவினர்.
நான் தொழிலை ஆரம்பித்தபோது, 5,000 முதலீடு செய்தேன். இப்போது நான் ஒவ்வொரு மாதமும் ₹ 10,000 சம்பாதிக்கிறேன். எனது கடைசி பிக் பில்லியன் நாட்கள் விற்பனை ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. ஹேண்டுபேக்குகள், பர்ஸ்கள், வாலெட்டுகள் போன்ற பெண்களின் அக்சஸரிகளில் கூடுதல் வகைகளைச் சேர்ப்பதற்கு நான் யோசித்து வருகிறேன். எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக உள்ளது. முதன்முதலாக குடும்பத்தில் ஒரு தொழிலை நான் நடத்துவதால் அவர்களுக்கும் பெருமைதான்.
ஜிஷ்னு முரளியிடம் சொன்ன படி
ஷ்ரிஸ்டியினுடையது போல மேலும் கதைகளை படிக்கவேண்டுமா? Click here.