எளிமையான, வசதியான மற்றும் இயல்பான ஃப்ளிப்கார்ட்டின் வாய்ஸ் அசிஸ்டெண்ட் முன்னெப்போதையும் விட இணைய ஷாப்பிங்கை மிகவும் எளிதாக்குகிறது. இதைப் பயன்படுத்தி உங்கள் பக்கத்துக் கடைக்காரருடன் பேசுவதைப் போல—அத்தியாவசியப் பொருட்களை எளிமையாகவும் விரைவாகவும் வாங்கலாம்! உங்கள் ஒவ்வொரு கட்டளையையும் கண்டறியும் உள்ளுணர்வுமிக்க ஏ.ஐ தளத்தின் மூலம், ஆங்கிலத்திலோ இந்தியிலோ அல்லது இருமொழிகளையும் கலந்து பயன்படுத்தி பேசியோ எளிதாக ஷாப்பிங்க்கைத் துவங்கலாம். இந்தப் புதுமையான அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி என அறிய தொடர்ந்து படியுங்கள்.
ஃப்ளிப்கார்ட்டின் புதிய வாய்ஸ் அசிஸ்டெண்ட் மற்றும் தேடல் அம்சத்துடன், நீங்கள் எளிமையான குரல் கட்டளைகளுடன் செயலியில் மளிகைப் பொருட்களை வாங்க முடியும். உங்களுக்கு அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று “1 கிலோ வெங்காயம்” வாங்குவதாகக் கற்பனை செய்யுங்கள். எளிமையாக இருக்கிறது இல்லையா? புதிய வாய்ஸ் அசிஸ்டெண்ட் திறனுடன், நீங்கள் ஃப்ளிப்கார்ட் செயலியிலும் இயல்பாக உரையாடி பொருட்களை வாங்கலாம். மளிகைப் பொருட்கள் பிரிவிற்குச் சென்று வாய்ஸ் அசிஸ்டெண்டுடன் பேசுங்கள், அது உங்கள் மொழியையும் கட்டளைகளையும் கண்டறியும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடங்க, ஆங்கிலத்தில், இந்தியில் அல்லது இரண்டிலும் கலந்தோ பேசுங்கள் உதாரணமாக “கெல்லாக்ஸ் சாகோஸ்”, “ஆரோக்கியமான சமையல் எண்ணெய்”, அல்லது “எனக்கு மாவு வேண்டும்,” எனக் கூறுங்கள், பின் வாய்ஸ் அசிஸ்டெண்ட் உங்களுக்கு வழங்கும் வாய்ப்புகள், தயாரிப்பு விவரங்கள், ஏன் ஆர்டர் செய்ய உதவுவதைக் கூட பாருங்கள். இது உள்ளூர் பேச்சு வழக்கு மொழி, மாறுபாடுகள், பேச்சுவழக்குச் சொற்கள், மற்றும் கலப்பு மொழிக் கட்டளைகளைக் கூட புரிந்துகொள்வதால், நிஜ வாழ்க்கையில் பேசுவதைப் போல் நீங்கள் இயல்பாகப் பேச முடியும்.
மேலும் அறிய ஆங்கிலத்திலும் இந்தியிலும் இக்காணொளிகளைப் பாருங்கள்.
ஆங்கிலம்:
இந்தி:
உங்கள் மளிகைப் பொருட்கள் கார்ட்டை பல அத்தியாவசியப் பொருட்களுடன் எளிமையாகவும் திறம்படவும் நிரப்புவது எப்படி என்பதை அறிந்து கொள்ள, அண்மைய வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கான எளிய வழிகாட்டி இதோ.
படி 1: ஃப்ளிப்கார்ட் செயலியின் மளிகைப் பொருள் பிரிவிற்குச் செல்லுங்கள்
மளிகைப் பொருள் அல்லதுசூப்பர் மார்க்கெட்பிரிவிற்குச் செல்ல, உங்கள் கைபேசியில் ஃப்ளிப்கார்ட் செயலியைத் திறங்கள். ஃப்ளிப்கார்ட் செயலியைத் திறந்ததும் தொடங்க “மளிகை/மளிகை” என்பதைத் தேர்ந்தெடுங்கள். தற்போது இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, படிப்படியாக இது ஐ.ஓ.எஸ் பயனர்கள் சேவைக்கும் வலைத்தளத்திலும் கிடைக்கும்.
படி 2: உங்களுக்குத் தேவையான பொருளைத் தேட பேசுங்கள்
வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சத்தைப் பயன்படுத்த, தேடல் பட்டையின் ஓரத்திலுள்ள ஒலிவாங்கி சின்னத்தைத் தட்டுங்கள். வாய்ஸ் அசிஸ்டெண்ட் உங்களைச் சூப்பர் மார்க்கெட்டிற்கு வரவேற்கும், இப்போது நீங்கள் ஷாப்பிங்கைத் தொடங்கலாம். மளிகைப் பொருட்களைப் பார்க்க, வாய்ஸ் அசிஸ்டெண்டைச் செயல்படுத்த ஒலிவாங்கி பொத்தானைத் தட்டி, நீங்கள் பார்க்கவோ அல்லது வாங்கவோ விரும்புவதை அசிஸ்டெண்டிடம் கூறுங்கள்.
உங்கள் மனத்தில் குறிப்பிட்ட பொருட்கள் இருந்தால், இதுபோன்ற கட்டளைகள் கொடுக்கலாம்:
“எனக்கு 1கிலோ டாடா உப்பு வேண்டும்” அல்லது “டெட்டால் லிக்விட் ஹேண்ட்வாஷைக் காட்டு”. இவ்வாறு செய்தால், வாய்ஸ் அசிஸ்டெண்ட் பல்வேறு விருப்பங்களை உங்களுக்குக் காண்பிக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் பல்வேறு வகை உப்பு அல்லது பல்வேறு அளவிலான ஹேண்ட்வாஷிலிருந்து தேர்வு செய்ய முடியும்.
நீங்கள் என்ன வாங்க விரும்புகிறீர்கள் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், நீங்கள் பல்வேறு மளிகைப் பொருள் வகைகளைப் பார்வையிடலாம். இதைச் செய்வதற்கு, நீங்கள் “பேக்கேஜ்ட் உணவு” அல்லது “ஸ்னாக்குகள் மற்றும் குளிர்பானங்களைக் காட்டு” அல்லது “வீட்டுப் பராமரிப்புப் பொருட்கள்”எனக் கூறுவதன் மூலம் குறித்த வகையைப் பார்க்கக் கோரலாம்.
இனிப்பு சாப்பிடும் மனநிலையில் இருக்கிறீர்களா? நீங்கள் இதுபோல் கூறலாம்“எனக்கு இனிப்பு சாப்பிடணும் போலத் தோன்றுகிறது ” (நான் இனிப்புச் சாப்பிட விரும்புகிறேன்) மேலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப காட்டும் பரிந்துரைகளைப் பாருங்கள்!
- குறிப்பு: சமீபத்திய சலுகைகளைக் கேளுங்கள். மிகக் குறைந்த விலை பிராண்டுகளையும் பொருட்களையும் கண்டறிய,“1 ரூபாய் டீல்கள்” அல்லது “சமீபத்திய சலுகைகள்” போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துங்கள்.
படி 3: பொருட்களை உங்கள் கூடையில் சேர்க்குமாறு வாய்ஸ் அசிஸ்டெண்டிடம் கூறுங்கள்
நீங்கள் “பிரேக்பாஸ்ட் செரல்களைக்” கேட்பதாகக் கருதுவோம். அவ்வாறு செய்யும்போது நீங்கள் ஒவ்வொரு பொருளின் அருகிலும் எண்கள் குறிப்பிடப்பட்ட தயாரிப்புகளின் பட்டியலைப் பார்ப்பீர்கள். உங்கள் கூடையில் ஒரு பொருளைச் சேர்ப்பதற்கு இவ்வாறு கூறலாம், “விருப்பம் ஒன்றை எனது கூடையில் சேர்” அல்லது “விருப்பம் மூன்றை எனது கூடையில் சேர்”. இதற்காக நீங்கள் ‘கூடையில் சேர்’ பொத்தானையும் கிளிக் செய்யலாம்.
ஒரே பொருள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வேண்டுமா? எடுத்துக்காட்டாக நீங்கள் மேரிகோல்டு பிஸ்கட் வாங்குகிறீர்கள் என்றால், இவ்வாறு முயற்சியுங்கள்: “ஆறு மேரி கோல்டு பிஸ்கட்டைச் சேர்”.
உங்கள் கூடையில் உள்ள எல்லாப் பொருட்களையும் பார்க்க, ஒலிவாங்கியைத் தட்டி இவ்வாறு கட்டளையிடுங்கள்: “எனது கூடையைக் காட்டு” அல்லது “எனது கூடையைத் திற”.
படி 4: மேலும் மளிகைப் பொருட்களை வாங்க
உங்கள் கூடையில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் அதே நேரம், நீங்கள் வாய்ஸ் அசிஸ்டெண்டுடன் தொடர்ந்து பொருள் வாங்க முடியும். அதற்கு ஒலிவாங்கி பொத்தானைத் தட்டி கட்டளையிட்டால் போதுமானது!
படி 5: உங்கள் ஆர்டரை நிறைவு செய்யுங்கள்
நீங்கள் ஷாப்பிங்கை முடித்ததும், ‘ஆர்டர் செய்’ என்ற பொத்தானை கிளிக் செய்யுங்கள் அல்லது “என்னுடைய ஆர்டர் செய்” அல்லது “இப்போது செக் அவுட் செய்” அல்லது “என்னுடைய பில்லைப் போடு” போன்ற கட்டளைகளை வாய்ஸ் அசிஸ்டெண்டிற்குக் கொடுங்கள். பின்னர் நீங்கள் உங்கள் ஆர்டர் சுருக்கத்தைப் பார்த்துப் பணம் செலுத்தலுக்குச் செல்லலாம்.
ஃப்ளிப்கார்ட்டின் வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சம் உங்கள் மளிகைப் பொருள் வாங்குதலைத் தடங்கலற்றதாக்குகிறது, எளிய கட்டளைகளுடன் இது உங்கள் ஆர்டரை டிராக் செய்யவும் அல்லது இரத்து செய்யவும் அனுமதிக்கிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் மளிகைப் பொருள் வாங்க விரும்பும்போது, உங்கள் ஸ்மார்ட்ஃபோனை எடுத்து, ஃப்ளிப்கார்ட் செயலியைத் திறந்து, வசதியான வாய்ஸ் அசிஸ்டெண்டுடன் ஆர்டர் செய்யுங்கள்!
இதையும் படியுங்கள் : ஃப்ளிப்கார்ட் சூப்பர் காயின்ஸ்: பல-பிராண்ட் வெகுமதி சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும்