வருமுன் காப்பதே சிறந்தது – எப்படி உங்கள் ஃபிளிப்கார்ட் அக்கவுன்டைப் பாதுகாப்பது

Read this article in हिन्दी | English | ಕನ್ನಡ | বাংলা | ગુજરાતી | मराठी

நீங்கள் ஆன்லைனில் பொருள்கள் வாங்கும்போது உங்கள் தனிப்பட்டத் தகவல்களையும் வங்கி விவரங்கள், அக்கவுன்ட் நம்பர்கள், பாஸ்வேர்டுகள் போன்ற தரவுகளையும் பாதுகாப்பாக வைப்பது மிகவும் அவசியம். மோசடிக்காரர்களின் கைகளில் இந்தத் தரவுகள் கிடைத்தால் அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள். ஆனால் கவலைப்பட வேண்டாம்! மோசடிக்காரர்களிடமிருந்து உங்கள் அக்கவுன்டைப் பாதுகாப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஃப்ளிப்கார்ட் அக்கவுன்டின் பாஸ்வேர்டை யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி வைத்திருக்கிறீர்களா? இதோ, உங்கள் அக்கவுன்டைப் பாதுகாப்பது எப்படி என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.

How to Secure Your Flipkart Account

நீங்கள் அடிக்கடி Flipkart-இல் ஆன்லைன் மூலமாக பொருள்கள் வாங்குபவர் என்றால், எளிதாக இருப்பதற்கும் சௌகரியமான பரிவர்த்தனைகளுக்கும் உங்கள் வங்கி விவரங்களை உள்ளீடு செய்திருக்கலாம் மற்றும் பாஸ்வேர்டுகளைச் சேமித்து வைத்திருக்கலாம். இப்படி செய்வது முழுக்க முழுக்க பாதுகாப்பானது தான். எனினும், சில சூழ்நிலைகளில், உங்கள் இரகசியமான வங்கி விவரங்களும் பாஸ்வேர்டுகளும் மோசடிக்காரர்களிடம் சிக்காமல் இருக்க அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வது மிகவும் அவசியம். நீங்கள் ஃப்ளிப்கார்ட்டில் லாகின் செய்து ஆன்லைனில் பாதுகாப்பாகவும் சிரமமில்லாமலும் பொருள்கள் வாங்கும்போது, உங்கள் அக்கவுன்ட்டைப் பாதுகாப்பாக வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகள் குறித்த முழுமையான வழிகாட்டல்கள் இங்கே உள்ளது:

 1. உங்கள் ஃப்ளிப்கார்ட் மொபைல் ஆப்-ஐ iOS-இல் புதிய வெர்ஷனுக்கு ஏற்ற வகையில் அப்டேட் செய்யுங்கள் அல்லது Android
 2. ஒரு பாஸ்வேர்டு உடன் உங்களுடைய பதிவுசெய்த ஈமெயில் மற்றும்/அல்லது உங்கள் பதிவு செய்த மொபைல் எண் மூலம் டெஸ்க்டாப், ஆப் அல்லது m-site வழியாக உங்கள் ஃப்ளிப்கார்ட் அக்கவுன்டை நீங்கள் லாகின் செய்யலாம்.
 3. நீங்கள் சரியான ஃப்ளிப்கார்ட் தளத்தில் தான் லாகின் செய்துள்ளீர்களா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். உங்கள் டெஸ்க்டாப்/லேப்டாப் மூலம் ஒரு இணைய பிரவுசர் வழியாகவோ அல்லது ஒரு ஸ்மார்ட்போன் அல்லது ஒரு டேப்லெட் போன்ற ஒரு மொபைல் சாதனம் மூலம் ஃப்ளிப்கார்ட் m-site வழியாகவோ நீங்கள் உங்கள் ஃப்ளிப்கார்ட் அக்கவுன்டுக்குச் செல்லும்போது, URL ஆனது https://www.flipkart.com என்று உறுதி செய்துகொள்ளுங்கள். உங்கள் URL-இல் “https” இருக்கவேண்டும், அப்படி இருந்தால் அந்த இணையதளம் பாதுகாப்பு சான்றிதழைக் கொண்டுள்ளது என்று அர்த்தம், மேலும் அது நம்பிக்கையானது. சில பிரவுசர்களில் அட்ரஸ் பாரில் “பூட்டு” போன்ற குறியீடு இருக்கும், அப்படியென்றால் அந்தத் தளம் பத்திரமானது. நிறைய போலி இணையதளங்கள் ஃப்ளிப்கார்ட்டின் அதிகாரப்பூர்வ லோகோவை எங்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்திக் கொண்டு பயனாளர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களின் தரவுகளைத் திருடுகிறார்கள், எனவே உங்கள் ஃப்ளிப்கார்ட் அக்கவுன்டுக்குள் செல்வதற்கு முன்பு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த மோசடிக்காரர்களைப் பிடிக்க சட்ட வல்லுனர்களுடன் இணைந்து நாங்கள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதேவேளையில், நீங்களும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் உங்கள் ஷாப்பிங் அனுபவம் இனிமையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
 4. வலுவான பாஸ்வேர்டை அமைக்கவும். உங்கள் பாஸ்வேர்டை மோசடிக்காரர்கள் கண்டுபிடிக்கவும் கணிக்கவும் முடியாத வகையில் வைக்க வேண்டும். இதோ, அதைச் செய்வதற்கான வழிகள்:

How to secure your Flipkart account - follow these tips

 • பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் விஷேசக் குறியீடுகள் போன்றவை உள்ளபடி ஒரு வலிமையானப் பாஸ்வேர்டைத் தேர்ந்தெடுங்கள்
 • உங்கள் ஃப்ளிப்கார்ட் பாஸ்வேர்டை வேறு எந்தவொரு அக்கவுன்டுக்கும் பயன்படுத்த வேண்டாம்
 • உங்கள் பாஸ்வேர்டை வேறு யாருடனும் பகிர வேண்டாம்
 • அதை வேறெங்கிலும் எழுதி வைக்க வேண்டாம்
 • பாஸ்வேர்டுகளை ஈமெயில்/வாட்ஸ்அப்/SMS மூலம் பகிர வேண்டாம்
 • ஒவ்வொரு மாதமும் உங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றுங்கள். பழைய பாஸ்வேர்டுகளைத் திரும்பவும் பயன்படுத்தக்கூடாது.
 • உங்கள் பெயர், மொபைல் எண் அல்லது பிறந்த தேதி போன்றவற்றை உங்கள் பாஸ்வேர்டாக வைக்க வேண்டாம்
 • உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டால், “Forgot Password” என்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி ஃப்ளிப்கார்ட் இணையதளம் அல்லது ஆப் மூலம் அதை மீட்கலாம். இதுதான் உங்கள் அக்கவுன்டை மீட்பதற்கான மிகவும் பாதுகாப்பான வழி.
 • நீங்கள் பொதுக் கணினி அல்லது வேறு ஒருவரின் மொபைலில் இருந்து ஃப்ளிப்கார்ட்டில் லாகின் செய்கிற போது, “Remember Me” என்ற கட்டத்தை அன்செக் செய்யுங்கள்
 • உங்கள் அக்கவுன்டை மீட்கும்போது எவ்வொரு OTP-ஐ (ஒன் டைம் பாஸ்வேர்டுகள்) யாருடனும் பகிரவேண்டாம்
 • சைபர்-கஃபே அல்லது பொது இன்டர்நெட் பிரவுசிங் சென்டரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மூலம் ஃப்ளிப்கார்ட்டில் லாகின் செய்கிற போது, உங்கள் அக்கவுன்டை லாக்-அவுட் (log out) செய்து, பிரவுசர் கேச்சியை (cache) அழித்துவிட்டு பிரவுசர் விண்டோவை மூடிவிட்டுச் செல்லுங்கள். உங்கள் இடத்தை விட்டுச் செல்லும்போது உங்கள் கம்ப்யூட்டரை லாக் செய்துவிடுங்கள்.
 • PIN கோடு லாக்குகள், கைரேகை லாக்குகள் அல்லது டச்ஐடி (ஐபோன் பயனாளர்கள்) போன்றவை மூலம் உங்கள் மொபைலை எப்போதும் லாக் செய்யவும், இது மோசடிக்காரர்கள் ஃப்ளிப்கார்ட் போன்ற முக்கியமான ஆப்களைப் பார்ப்பதிலிருந்து தடுக்கும்.
 • வேறு யாருடனும் உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் எண் அல்லது CVV (கார்டு வெரிஃபிகேஷன் வேல்யூ) போன்றவற்றைப் பகிர வேண்டாம். ஃப்ளிப்கார்ட்டின் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் இத்தகைய விவரங்களை கேட்டு எப்போதும் தொடர்புகொள்ள மாட்டார்கள்.

உங்கள் ஃப்ளிப்கார்ட் அக்கவுன்டில் லாகின் செய்ய முடியவில்லையா? பதற்றமடைய வேண்டாம்! இதோ, அதைச் செய்வதற்கான வழிகள்

உங்கள் தரவுகளையும் பயன்படுத்தும் விவரங்களையும் பாதுகாப்பதுதான் எங்களுடைய தலையாயக் கடமை. நீங்கள் உங்கள் பாஸ்வேர்டை புதுப்பிக்க மறந்தாலும் கூட நாங்கள் உங்களுக்கு ஞாபகப்படுத்துவோம். எனவே, உங்கள் ஃப்ளிப்கார்ட் அக்கவுன்டை பத்திரமாக வைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் பாஸ்வேர்டை புதுப்பிக்க உங்களிடம் கேட்டுக் கொள்ளப்படலாம்.

 • உங்கள் பழைய பாஸ்வேர்டை வைத்து உங்களால் உங்கள் அக்கவுன்டுக்குள் லாகின் செய்யமுடியவில்லை என்றால், “Forgot Password” என்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி உங்கள் பாஸ்வேர்டை ரீசெட் செய்யுங்கள்.
 • அக்கவுன்ட் பாதுகாப்பு மற்றும் உங்களின் அனைத்து ஆர்டர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு உங்கள் ஃப்ளிப்கார்ட் லாகின் விவரங்களை யாருடனும் பகிரவேண்டாம்.

குறிப்பு: உங்களுக்கு பலவித OTPகள் அல்லது “Forgot Password” கோரிக்கைகள் வந்தால், யாரோ உங்கள் அக்கவுன்டுக்குள் செல்ல முயற்சிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வலிமையான பாஸ்வேர்டை அமைத்து அதைப் பத்திரப்படுத்துங்கள்.


உங்கள் அக்கவுன்டில் பிரச்சனை இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டாலும் உங்கள் அக்கவுன்டை லாகின் செய்ய முடியவில்லை என்றாலும், தயவுசெய்து Flipkart Help Centre-ஐ தொடர்பு கொள்ளுங்கள் அல்லது Flipkart Customer Care -இல் பிரச்சனையைப் புகார் செய்யுங்கள்.

உங்கள் வங்கித் தரவுகளுக்கு (அதாவது கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தகவல்கள்) பங்கம் விளைந்ததைப் புகார் செய்ய, தயவுசெய்து உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் உதவி ஹெல்ப் லைனைத் தொடர்பு கொள்ளுங்கள்.

எனவே, மனநிம்மதியுடன் இருக்க உங்கள் ஃப்ளிப்கார்ட் அக்கவுன்டைப் பத்திரமாக வைப்பது அவசியமான ஒன்று. இந்தக் கட்டுரையை உங்கள் அன்பிற்குரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து பாதுகாப்பாக ஷாப்பிங் செய்ய வழிசெய்யுங்கள்.

இதையும் படித்து விடுங்கள்: மோசடி குறித்த அறிவுரை – மோசடிக்காரர்களின் இணையதளங்கள் மற்றும் போலி சலுகைகள் ஃப்ளிப்கார்ட்டின் பெயரினை தவறாகப் பயன்படுத்துகிறது என்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

Enjoy shopping on Flipkart