உத்தரப்பிரதேசத்தில், தொற்றுநோய்ப் பரவலின் போது சிறிய குடும்ப வணிகமானது ஒரு கிராமத்திற்கே உயிர்நாடியாக மாறியது

Read this article in বাংলা | English | हिन्दी | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

லக்னோவுக்கு அருகிலுள்ள தொலைதூர கிராமம் ஒன்றில் 35 ஆண்டுகளுக்கு முன்பாக மேக்தூத் ஹெர்பல் நிறுவப்பட்டபோது, அருகில் வசிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே அதன் நோக்கமாகும். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலகளாவிய தொற்றுநோய் அதன் நோக்கத்தையே அச்சுறுத்திய போது, பரம்பரையாக பார்த்து வந்த குடும்ப வியாபாரம் இப்போது ஃப்ளிப்கார்ட் சமர்த்தின் கூட்டாளராக, நெருக்கடிக்கு ஏற்றவாறு கடினமான நேரத்தில் எதிர்நீச்சல் போட இ-வணிகத்தைப் பயன்படுத்தினர். உத்திரபிரதேச அரசுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஃப்ளிப்கார்ட் சமர்த் திட்டத்தால் ஆதரிக்கப்பட்டு, விபுல் சுக்லாவின் குடும்ப வியாபாரமானது இதேபோன்ற நிறுவனங்கள் வீழ்ந்தெழுந்து வெற்றியை உணர வழிவகுத்துள்ளது. அவர்களது வியக்கத்தக்கக் கதையைப் படியுங்கள்.

Flipkart Samarth

In 1985, விபுல் சுக்லாவின் தாத்தா, உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரத்தின் அருகிலுள்ள அப்போதைய தொலைதூர கிராமத்தில் ஆயுர்வேத பொருட்களை தயாரிக்கும் சிறு வியாபாரத்தை தொடங்குவதற்கு தனது சேமிப்பு அனைத்தையும் பயன்படுத்தினார். அந்த நேரத்தில் மேக்தூத் ஹெர்பல் சாதாரண அமைப்பாக இருந்தது – அதில் ஒரு அலுவலகமும் அருகில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒரு உற்பத்தி ஆலையும் அடங்கும். விரைவிலேயே இது யூபி காதி அண்ட் வில்லேஜ் இண்டஸ்ட்ரீஸ் போர்டு (யூபிகேவிஐபி) உடன் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிறுவனமும் அதன் மூலிகைக் கலவைகள் பலவும், கிராமத்தின் ஒரு பகுதியாகவும் பாட்டனார் முதல் தந்தை வரையில் மூன்று தலைமுறைகள் கடந்து, அன்றாட வணிகத்தை விபுல் மற்றும் அவரது சகோதரர் விஷ்வாஸ் இப்போது நடத்திவருகின்றனர்.

இ-வணிகத்தின் மீது தடைகளாக அவர் எண்ணக்கூடிய பலவற்றைத் தாண்டி, மூலிகை மற்றும் பிற இயற்கை பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்கும் பாரம்பரிய குடும்ப வணிகத்தை இறுதியாக ஆன்லைனில் கொண்டு வந்தார். ஓர் ஆண்டுக்கு முன்பாக மேக்தூத் ஹெர்பல் ஃப்ளிப்கார்ட் சமர்த்தின் கூட்டாளியாக ஆனது.

இந்தியாவின் கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பவர்களை இ-வணிகத்தில் கொண்டு வருவதற்கு, ஆன்லைன் வணிகத்தை அமைப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் ஆகும் செலவைக் குறைத்து பலன்களை இலக்காக்கி அவர்கள் உள்நுழைவதை எளிதாக்குவதன் மூலம் ஃப்ளிப்கார்ட் அதன்சமர்த் திட்டத்தினை 2019 ஜூலையில் தொடங்கியது. அன்றிலிருந்து, கிராமப்புற தொழில்முனைவோர்கள், பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள், மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர்கள், கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் உள்ளிட்ட குழுக்களை அடையாளம் கண்டு பெருமைப்படுத்துவதற்காக புகழ்பெற்ற என்.ஜி.ஓக்கள், அரசு அமைப்புகள் மற்றும் வாழ்வாதார தூதுக்குழுவினர் ஆகியவற்றுடன் ஃப்ளிப்கார்ட் சமர்த் தொடர்ந்து பணியாற்றி வருகின்றது.

நாட்டின் கிராமப்புறம் மற்றும் குறைவாக பராமரிக்கப்படும் சமூகத்தில் உள்ள திறமைகளை வளர்க்கும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கும் ஃப்ளிப்கார்ட் சமர்த் ஆனது, இன்று இந்தியா முழுவதும் உள்ள 500,000 க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் நெசவாளர்கள் மற்றும் நுண் நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கின்றது.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று, வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தின் நெசவாளர்கள் மற்றும் கிராமப்புற தொழில்துறைகளை செயல்படுத்துவதற்கு ஃப்ளிப்கார்ட் குழுமமானது உத்திரபிரதேச காதி கிராம தொழில் வாரியத்துடன் உத்திரபிரதேச முதலமைச்சரில் முன்னிலையில் ஒரு எம்.ஓ.யூ(புரிந்துணர்வு ஒப்பந்தம்) வில்& கையெழுத்திட்டது.

ஆன்லைனில் சுயமாக நிபுணத்துவம் பெற்ற கத்துக்குட்டியான விபுல் “எங்கள் ஆன்லைன் கேம்பெயினை நாங்கள் தாமதமாக தொடங்கியிருக்கிறோம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று கூறுவதுடன் “நேர்மையாக இருப்பதற்கு, எங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவு அனைத்தும் தேவை. நாங்கள் அடிப்படைகளையே கற்றுக்கொண்டிருக்கிறோம்.” என்றும் கூறினார்.

Surviving a pandemic

2020 ஜனவரியின் பிற்பகுதியில் தான் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தைப் பற்றிய செய்தியை கேள்விப்பட்டதாகவிபுல் விளக்கினார். வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்நோக்க இருக்கும் சவாலான நேரத்தை உணர்ந்த குழுவானது, அதுவரை தொடங்குவதற்கான எந்த திட்டமும் இல்லாத ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்த முடிவு செய்தது.

“பிப்ரவரியின் பிற்பகுதியில் சானிடைசரை ஒரு தயாரிப்பாக நாங்கள் சேர்த்தோம். அந்த சமயத்தில், அங்குமிங்குமாக சில ஆர்டர்கள் கிடைத்தன, ஆனால் மார்ச் மாதத் தொடக்கத்தில் அதற்கான தேவை ஆன்லைனில் பூதாகரமாக இருந்தது,” என்று நினைவுகூறியவர், “சானிடைசர் சந்தையில் இடைவெளியும் இருந்தது, அதை நாங்கள் கைப்பற்றினோம்.” என்றார்.

“மார்ச் மாதத்தில் ஒரு கட்டத்தில், ஒரு மாதம் முழுவதும் நாங்கள் பார்க்கும் விற்பனை ஒரே நாளில் ஆனது,” என்று கூறும் அவர், குறைந்த செயல்பாடுள்ள வணிகங்களும் இ-வணிகமும் பெரிய அளவிலான வாடிக்கையாளர் தளத்தில் சேவை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கியதுடன், அவர்களின் பிராண்டையும் பிரபலமாக்கியது என்பதை ஒப்புக்கொள்கிறார்.

எந்த ஒரு வியாபாரம் ஆனாலும், விற்பனையே அதன் முன்னுரிமையாக இருக்கும் வேளையில், அருகிலுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதும் மேக்தூத் ஹெர்பலின் நோக்கமாகும். அதன் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களில் பெரும்பாலோர் 10-கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளேயே வாழ்கின்றனர். உற்பத்தி ஆலையில் அக்கம் பக்கத்திலிருந்து 300 பேர் பணியாற்றுகின்றனர், அவர்களில் கிட்டத்தட்ட 40% பெண்கள், பெரும்பாலும் பேக்கேஜிங் பிரிவில் வேலை செய்கிறார்கள். எம் எஸ்.சி அல்லது பிற முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஆய்வகத்தில் அல்லது உற்பத்திப் பிரிவில் வேலை செய்கிறார்கள்.

“எங்கள் தயாரிப்புகள் கையால் செய்யப்பட்டவை மற்றும் கையால் பேக் செய்யப்பட்டவை” என்று விபுல் விளக்குகிறார்.

முதன்முதலில் ஊறடங்கு அறிவித்தபோது, உற்பத்தி ஆலைக்கு ஊழியர்களால் வரமுடியாமல் போனது. “அது எங்களுக்குக் கவலையாக இருந்தது. ஆனால் உள்ளூர் அதிகாரிகளை நாங்கள் தொடர்பு கொண்டு அவர்களுக்கு அத்தியாவசிய பாஸைப் பெற முடிந்தது. எங்கள் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு வரும்போது அவர்களுக்கு கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் நாங்கள் உறுதி செய்தோம்,” என்று விபுல் வலியுறுத்துகிறார்.

தொற்றுநோய்க்கு நடுவே புதிய இயல்புக்கு ஏற்றவாறு, ஊழியர்கள் அனைவரும் இடத்திற்கு வருவதற்கு முன்பாக வெப்பப் பரிசோதனை செய்யப்படுவர், மேலும் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் அவர்கள் கையை சானிடைஸ் செய்து கழுவவேண்டும் என்பது இப்போது கட்டாயமாகியது. “வாடிக்கையாளர்கள் எங்களது தயாரிப்பு 100% பாதுகப்பானது என்று உறுதியாக நம்பலாம்,” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

ஊறடங்கின் போது இயங்குவதற்குத் தடை இருந்ததால், மேக்தூத் ஹெர்பலின் தயாரிப்புகள் அனைத்தும் லக்னோ ஆலையில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பேக் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. “எங்களுடன் பணிபுரியும் அனைவரும் இ-காமர்ஸின் விளைவுகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்” என்று விபுல் கூறுகிறார்.

பாரம்பரியமான ஒரு குடும்ப வணிகத்திற்கு மறுவடிவம் கொடுப்பது

தனது மூலிகை தயாரிப்புக்களின் புகழை விளக்கிக்கொண்டிருந்த விபுல், சளி அல்லது முடி உதிர்வு போன்ற பொதுவான பிரச்சனைகளுக்கு இந்திய வீடுகளில் உள்ள பழம்பெரும் வீட்டு வைத்திய பொருட்களைக் கொண்டு இயற்கையான பாரம்பரிய வைத்தியத்திற்கு மாற வேண்டும் என சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த பாரம்பரியமிக்க நம்பிக்கையே வாடிக்கையாளர்களை எங்கள் பக்கம் திரும்பவைக்கிறது. மேலும் விளைவுகளைக் கண்டவுடன் அவர்களுக்கு நம்பிக்கை வருகிறது,” என்பதை கண்ட அவர், இயற்கை பொருட்கள் சந்தையின் புதிய பகுதியை அடைவதற்கு இ-வணிகம் உதவியதாகவும் கூறுகிறார்.

“முன்னதாக, ஆஃப்லைனில் எங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்கையில் உத்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச சுற்றுப்புறத்தில் வாழும் ஹிந்தி பேசுபவர்களிடமே பெரும்பாலும் விற்கப்பட்டது,” என்று அவர் விளக்கினார். ஆன்லைனில் குடும்ப வணிகம் வந்ததும், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் காஷ்மீரில் இருந்து கூட வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் குவிவதை மேக்தூத் ஹெர்பல் கண்டது. “அது மிகவும் நன்றாக இருந்தது!” அவர் ஆச்சர்யப்படுகிறார். “எங்கள் தயாரிப்புகள் பற்றிய மின்னஞ்சல்களை இப்போது இந்தியா முழுவதிலுமிருந்து பெறுகிறோம்.”

ஐ.ஐ.டி (பி.ஹெச்.யூ) பட்டதாரியான விபுல், அவர் பட்டம் பெற்றவுடன் தனது குடும்ப வணிகத்தைத் தொடர வந்தவரிடம் அதற்கான பெரிய திட்டங்கள் இருந்தன. “தரமான கல்வியைப் பெறுவதற்காக மட்டுமே நான் ஐ.ஐ.டிக்குச் சென்றேன். 9-5 வேலை எனக்கானதல்ல,” என்று கூறும் அவர், நாட்டின் முதன்மையான கல்விக்கூடங்களில் கால்பதிப்பதைவிட அவர் மனம் விரும்பியபடி வீட்டில் இருப்பதை அவர் விரும்பினார்.

வளர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் இ-வணிகத்தின் ஊடுருவலுடன், எதிர்வரும் ஆண்டுகளில் மேக்தூத் ஹெர்பல் இன்னும் சிறப்பாகச் செயல்படும் என்று அவர் நம்புகிறார். “முன்னதாக, பெரும்பாலும் 40 வயது அதற்கு மேற்பட்டவர்கள் தான் எங்களது தயாரிப்புகளால் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது, இயற்கை பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகையில், 20 வயது இளைஞர்கள் கூட வாங்குகின்றனர். இது நல்ல ஒரு அறிகுறியாகும் – ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறி.”

ஊறடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, வழக்கமான வணிகம் அதற்கேற்ற சவாலை எதிர்கொள்ளவேண்டியிருந்தது, ஆனால் உடனடியாக தீர்வையும், லாஜிஸ்டிக்கல் ஆதரவையும் வழங்கியதற்கு விபுல், ஃப்ளிப்கார்ட்டில் உள்ள அவரது கூட்டாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறார்.

“ஃப்ளிப்கார்ட் ஒவ்வொரு வழியிலும் ஆதரவளித்து வருகிறது, ”என்று அவர் கூறுகிறார். “எந்தவொரு குறையோ வேதனையோ இல்லை. என்ன நடந்தாலும் நன்றாக நடக்கும்.

உத்தரபிரதேச அரசின் ஆதரவுடன், ஃப்ளிப்கார்ட்டின் சம்ர்த் திட்டம் ஆனது தளத்தின் பலம் மற்றும் இந்தியா முழுவதும் சந்தைகளை அடைவதற்கான ஆதரவை வழங்குவதன் மூலமாக விபுல் போன்ற சிறு வணிகங்களை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

“உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காதி தொழில்முனைவோருக்கு அதிகரித்த உள்ளடக்கம் மற்றும் சந்தை அனுகல் ஆகியவற்றின் மூலமாக யூ.பி.கே.வி.ஐ.பீ மற்றும் ஃப்ளிப்கார்ட் இடையேயான எம்.ஓ.யூ (புரிந்துணர்வு ஒப்பந்தம்) ஆனது மண்ணில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று டாக்டர் நவநீத் சேகல், ஐ.ஏ.எஸ், உத்தரபிரதேச அரசின் காதி & கிராமத் தொழில்கள், ஏற்றுமதி மேம்பாடு, எம்.எஸ்.எம்.இ.யின் கூடுதல் தலைமைச் செயலாளர் கூறினார். “இவ்வளவு குறுகிய காலத்தில் லகனோவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஃப்ளிப்கார்ட் சமர்த் திட்டத்தின் சிறந்த விற்பனையாளராக மாறுவது மனதைக் கவருவதாக உள்ளது. அவரது வெற்றிக் கதை உ.பி. அரசாங்கத்தின் பல்வேறு முன்முயற்சிகளின் கீழ் இ-வணிக தளங்களுடன் கூட்டாளர்களாக மேலும் பலரை ஊக்குவிக்கும் என்பது உறுதி. மாநிலத்தின் வணிகங்கள் மற்றும் தனித்துவமான பொருட்களில் பெரும் பகுதியை ஆன்லைனில் கொண்டு செல்ல முயற்சிப்பதால் ஃப்ளிப்கார்ட்டுடன் கூட்டுசேர்வதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

ஃப்ளிப்கார்ட் சமர்த் திட்டத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அல்லது கூட்டாளராக ஆவதற்கு, தயவுசெய்துஇங்கே க்ளிக் செய்யவும்.


இதையும் வாசியுங்கள்: ஃப்ளிப்கார்ட் சமர்துடன் இ-காமர்ஸைத் தழுவி, இந்தியாவின் பாரம்பரிய கைவினைஞர்கள் பிரகாசமான எதிர்காலத்தை வரவேற்கிறார்கள்

Enjoy shopping on Flipkart