1. Home
  2. Tamil
  3. ‘ஃப்ளிப்கார்ட்டில், எங்கள் மார்கெட்பிளேஸ் விற்பனையாளர்களின் நலன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்’

‘ஃப்ளிப்கார்ட்டில், எங்கள் மார்கெட்பிளேஸ் விற்பனையாளர்களின் நலன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்’

0
Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

கோவிட்-19 பெருந்தொற்று பரவியிருக்கும் இச்சூழலில் விற்பனையாளர் சமூகத்திற்கு உதவவும், அவர்கள் சுயமாக மேம்படவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மார்கெட்பிளேஸ் செயல்பாடுகளுக்கு தலைமை தாங்கும் ஃப்ளிப்கார்ட்டின் மூத்த இயக்குனர் ஜக்ஜீத் ஹரோட் சுட்டிக் காட்டுகிறார்.

‘ஃப்ளிப்கார்ட்டில், எங்கள் மார்கெட்பிளேஸ் விற்பனையாளர்களின் நலன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்’
0

கோவிட்-19 தேசத்திற்கு ஏற்படுத்திய அவசரநிலை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் உண்டானதால், இ-காமர்ஸ் வர்த்தகச் செயல்பாடுகள் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டன. வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்த அதே நேரத்தில்,அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான கோரிக்கையை பூர்த்தி செய்வதை ஃப்ளிப்கார்ட் முன்னுரிமையாக எடுத்துக் கொண்டுள்ளது.ஃப்ளிப்கார்ட் மார்க்கெட்பிளேஸில்உள்ள 200,000 –க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களில், பல பிரிவினர்களால் ஊரடங்கின்போது வணிகத்தை மேற்கொள்ள இயலவில்லை. இந்த சோதனை காலக்கட்டத்தில், ஃப்ளிப்கார்ட்டின் விற்பனையாளர் உதவிக் குழு ஆலோசனைக்காகவும், அடிப்படை ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காகவும் எப்பொழுதும் இயங்கியது. கூடுதலாக, சுகாதாரக்காப்பீடு உள்ளிட்ட ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் சலுகைகள் ஏராளமானவை எங்கள் மார்கெட்பிளேஸ் விற்பனையாளர் சமூகத்திற்கு விரிவுபடுத்தப்பட்டன.
சந்தை செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கும் ஃப்ளிப்கார்ட்டின் மூத்த இயக்குனர்ஜக்ஜீத் ஹரோட், இந்த நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.


ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது, வாடிக்கையாளர்களின் தேவைகளை ஃப்ளிப்கார்ட் எவ்வாறு பூர்த்தி செய்கிறது?

இந்தியாவின் உள்நாட்டு இ-காமர்ஸ் நிறுவனமாக, நம் அனைவருக்கும் சவாலாக இருக்கும் நேரத்தில் நாட்டை ஆதரிக்கும் பொறுப்பு ஃப்ளிப்கார்ட்டுக்கு உள்ளது. எங்களைப்பொறுத்தவரை, நமது சக இந்தியர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மனதில் வைத்துக்கொண்டு, வாடிக்கையாளரின் அத்தியாவசிய வகைகளின் தேவையை பூர்த்தி செய்வதே முக்கியமான குறிக்கோளாக இருந்தது. எங்கள்மார்க்கெட்பிளேஸ் விற்பனையாளர்கள்கடினமாக உழைத்து, அத்தியாவசிய பொருட்கள் எங்கள் தளத்தில் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்கின்றனர். எங்கள் வழங்கல் சங்கிலி செயல்பாடுகள் செயல்பட்டு வருகின்றன, இவை எங்கள் ஃபுல்ஃபில்மெண்ட் மையங்கள், கிடங்குகள் மற்றும் ஹப்ஸ் ஆகியவற்றுடன் தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுகின்றன. எங்கள்தளத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர், மேலும் இந்த வணிகங்கள் இணையம் வாயிலாக மீண்டும் செயல்படுவதற்கு காத்திருப்பதால் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க எங்கள் விற்பனையாளர் சமூகத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். செயல்பாட்டு ரீதியாக, மீதமுள்ள வகைகளுக்கு தேவையான அனுமதியை அரசாங்கம் வழங்கியவுடன் மீண்டும் தொடங்க நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். தங்களுக்குப் பிடித்த தயாரிப்புகளை இணையம் மூலம் மீண்டும் ஷாப்பிங் தொடங்குவதற்கு நீண்டகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்று ஆர்வமுடன் காத்திருக்கும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.

கோவிட்-19 காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மின் வர்த்தக சந்தை விற்பனையாளர்களுக்கான வணிகத்தை குறைத்துவிட்டது. இந்த நேரத்தில் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் சமூகத்தை எவ்வாறு ஆதரிக்கிறது?

அத்தியாவசிய பொருட்களை வழங்கும் விற்பனையாளர்கள் ஏற்கனவே அதிகரித்திருக்கும் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்கையில், மற்ற விற்பனையாளர்களையும், மீதமுள்ள வகைகளையும் மீண்டும் தொடங்குவதற்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்களை மேற்கொண்டு வருகிறோம். இந்த சோதனையான காலக்கட்டத்தில், செயல்பாட்டை உறுதி செய்வதற்காக சுகாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்த சிறந்த நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல் உட்பட, எங்கள் விற்பனையாளர் உதவி குழு இந்த விற்பனையாளர்கள் அனைவருக்கும் பொருத்தமான ஆலோசனை மற்றும் அடிப்படை ஆதரவை வழங்கிவருகிறது. இவைதவிர, சரக்குகளை அதிகரிப்பதற்கான உள்ளீடுகளும், நடைமுறை முதலீட்டுக்கான தீர்வுகளும் உள்ளன. மேலும்,விநியோகசங்கிலி குழு அனைத்து ஃப்ளிப்கார்ட் வளாகங்களிலும் மற்றும் விற்பனையாளர்களுக்கான பொருட்களின் இயக்கத்தை ஆதரிக்கும் ஊழியர்களிடமும் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்து தீவிர கவனம் செலுத்துகிறது.

ஊரடங்கு தடைகள் காரணமாக பல விற்பனையாளர்களால் செயல்படமுடியவில்லை; இது அவர்களின் போட்டித்தன்மையில் ஏதேனும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஃப்ளிப்கார்ட்டில், எங்கள் மார்கெட்பிளேஸ் விற்பனையாளர்களின் நலன்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஃப்ளிப்கார்ட் மார்க்கெட்பிளேஸில் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும், அவற்றின் செயல்திறன் அளவீடுகள் தடைபடுவதில் எந்த பிரச்சினையும் இல்லாமல், ஊரடங்கு காலத்தில் வேலை செய்யவோ அல்லது வேலை செய்யாமல் இருக்கவோ தேர்வு செய்யும் விருப்பத்தை அவர்களுக்கு நாங்கள்வழங்கியுள்ளோம். அத்தியாவசிய பொருட்கள் பிரிவில் சேவை செய்யும் விற்பனையாளர்களுக்கு தயாரிப்பின் கிராக்கி மற்றும் ஆரோக்கியமான சரக்கை பராமரிக்க அவர்கள் சரக்கு பட்டியல்களில் என்னென்ன சேர்க்கவேண்டும் என்பது குறித்து தொடர்ந்து வழக்கமான முறையில் புதுப்பிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தநேரத்தில்விற்பனையாளர்களின்நிதிதேவை பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?

தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு, ஊரடங்கு காலத்தில் ரத்துசெய்யப்பட்ட ஆர்டர்கள் தொடர்பான அனைத்து கொடுப்பனவுகளையும் திருப்பிச் செலுத்தும் பணி நடந்துக் கொண்டிருக்கிறது, மேலும் அவை வரவிருக்கும் கட்டண சுழற்சிகளில் செட்டில் செய்யப்படும்

இந்தக் காலக்கட்டங்களில், விற்பனையாளர் சமூகத்தின் மிக முக்கியமான தேவை, முதலீடே. இதை நிவர்த்தி செய்ய, இணையத்தில் செயல்படும் எம்.எஸ்.எம்.ஈ-க்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஃப்ளிப்கார்ட்டின் வளர்ச்சி மூலதன திட்டத்தின் மூலம் கடன்களுக்கான சிறப்பு சலுகையை நாங்கள் வழங்கி வருகிறோம். இந்தத் திட்டத்தின் மூலம், எங்களிடம் பரிவர்த்தனை செய்யும் விற்பனையாளர்களில் பெரும்பாலோர் போட்டித்தன்மை வாய்ந்த வட்டிவிகிதத்தில் ஒருநாள் ஒப்புதல் நேரத்துடன் கடன் பெறலாம் மற்றும் கடன் தொகை 48 மணிநேரத்திற்குள் பட்டுவாடா செய்யப்படும். வரவிருக்கும் மாதத்திற்கு மட்டும் விதிவிலக்காக, செயலாக்கக் கட்டணத்தை 100% தள்ளுபடி செய்துள்ளோம். தற்போதுள்ள கடன்களுக்கு 3 மாதகால அவகாசம் செயல்படுத்தப்பட்டுள்ளது; இதன் பொருள் விற்பனையாளர்கள் இந்த காலகட்டத்தில் பணம் கட்ட தேவையில்லை. மேலும், இந்த காலகட்டத்தில் சாங்க்ஷன் செய்யப்பட்ட விற்பனையாளர்களின் எந்தவொரு கூடுதல் தொகை 6 மாதகால அவகாசத்திற்கு நீட்டிக்கப்பட்ட கடன் தள்ளுபடியை பெற்றிருக்கும்.

ஃப்ளிப்கார்ட்டின்விற்பனையாளர்பாதுகாப்புநிதி (எஸ்.பி.எஃப்) ஆன்லைன் விற்பனையாளர்களுக்கு நியாயமற்ற இழப்புகளுக்கான இழப்பீடாக ஒரு குறிப்பிட்ட தொகையை கோருவதற்கு இது உதவுகிறது. அத்தகைய எஸ்.பி.எஃப் உரிமை கோரல்களுக்கு, விற்பனையாளர்களுக்கு மார்ச் 7-23, 2020 க்கு இடையில் பெறப்பட்ட அனைத்து வருமானங்களுக்கும் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், விற்பனையாளர்கள் ஒரு எஸ்.பி.எஃப் உரிமைகோரலை எழுப்ப 60 நாட்களுக்கு வழக்கமாக காத்திருக்க வேண்டியதை போல இருக்க அவசியமில்லை, மேலும் நிறுவனம் அதன் முழுநடவடிக்கைகளையும் முழுமையாகத் தொடங்கியவுடன் விற்பனையாளர்கள் உரிமைக் கோரலாம்.

இது மட்டுமல்ல. ஃபுல் ஃபில்ட் பை ஃப்ளிப்கார்ட் சேவையின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான சேமிப்பக கட்டணத்தையும் நாங்கள் தள்ளுபடி செய்துள்ளோம், இது விற்பனையாளர்களை விரைவான விநியோகங்களுக்காக ஃப்ளிப்கார்ட் . ஃபுல்ஃபில்மெண்ட் மையங்களில் சரக்குகளை சேமிக்க அனுமதிக்கிறது.

இந்த காலகட்டத்தில் விற்பனையாளர்களுக்கு என்ன வகையான சேவை ஆதரவு வழங்கப்படுகிறது?

ஊரடங்கு காலத்தை அவர்களின் சந்தா விதிமுறைகளில் சேர்க்க விற்பனையாளர்கள் பெறும் சில பிரீமியம் சேவைகளை நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம், இதனால் அவர்களின் முதலீடு தடைபடாது. இந்த சிறப்பு சேவைகளில் ஃப்ளிப்கார்ட் கேர் டச்செலக்ட் என்பதும் அடங்கும், இது பிரீமியம் சேவையாகும், இது விற்பனையாளர்களின் வணிக தொடர்பான கேள்விகளுக்கு விரைவான தீர்வுகளை பெற அனுமதிக்கிறது. கூடுதலாக, விற்பனையாளர்கள் கட்டண கணக்கு மேலாளர்களின் சேவைகளை தொடர்ந்து அனுபவிப்பார்கள்–இந்த அர்ப்பணிப்பு மிக்க மேலாளர்கள் விற்பனையாளர்களின் வணிகத்தை வளர்ப்பதற்கு அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள்.

மேலும், ஊழியர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய விற்பனையாளர்களுக்கு, தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக ஃப்ளிப்கார்ட் ஃபுல்ஃபில்மெண்ட் சேவைகள் மூலம் கூடுதல் திறன்களை உருவாக்குகிறோம்.

மார்க்கெட் பிளேஸ் விற்பனையாளர்களுக்கு ஃப்ளிப்கார்ட் ஏதேனும் சுகாதார நன்மைகளை அளிக்கிறதா?

இந்த முக்கியமான காலக்கட்டத்தில் ஆரோக்கியம் என்பது செல்வமாக திகழ்கிறது. எங்கள் விற்பனையாளர்கள் அனைவருக்கும் கோவிட்-19 -க்காக குறிப்பிட்ட ஒரு சுகாதார காப்பீட்டு திட்டத்தை நாங்கள் வழங்கியுள்ளோம், இது விற்பனையாளர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்பங்கள் மற்றும் பணியாளர்களையும் உள்ளடக்கும். இந்த காப்பீட்டுத்திட்டம், டிஜிட் இன்சூரன்ஸ் உடன் இணைந்து, சிறப்பு கட்டணத்தில் வழங்கப்படுகிறது, தனிநபருக்கு₹ 50,000 முதல்₹ 3,00,000 வரை என கவரேஜை வழங்குகிறது, மேலும் இதன் வருடாந்திர பிரீமியம் ₹369 முதல் தொடங்குகிறது.

Enjoy shopping on Flipkart

About the Author

Team Flipkart Stories

இந்த கட்டுரையை பிளிப்கார்ட் கதைகள் ஆசிரியர் குழு எழுதி திருத்தியது. எங்களுடன் தொடர்பு கொள்ள, தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });