போலி ஃப்ளிப்கார்ட் வேலைகள் குறித்தும், போலியான வேலைத் தரகர்கள் குறித்தும் ஜாக்கிரதை

Read this article in मराठी | English | हिन्दी | ಕನ್ನಡ | বাংলা | ગુજરાતી

பணம் கொடுத்தால் ஃப்ளிப்கார்ட்டில் வேலை வாங்கித் தருவதாக உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்கோ ஒரு ஈமெயில் அல்லது SMS குறுஞ்செய்தி வந்திருக்கிறதா? போலியான ஃப்ளிப்கார்ட் வேலை வாய்ப்புகள் மோசடியான பணி முகவர்கள் ஆகியவற்றால் ஏமாறவேண்டாம். இதோ, அதுபோன்ற குறுஞ்செய்திகள் வந்தால் என்ன செய்யவேண்டும்

Fake Jobs

தெரியாத ஒருவரிடமிருந்து ஒரு ஈமெயில் அல்லது ஒரு SMS உங்களுக்கு வந்தாலோ அல்லது யாரோ ஒருவர் தான் ஒரு பணிநியமன முகவர் என்று சொல்லி உங்களுக்கு ஃப்ளிப்கார்ட்டிலோ ஈகார்ட் லாஜிஸ்டிக்ஸ், ஜீவ்ஸ்-எஃப்1, மின்த்ரா, ஜபாங், 2GUD போன்ற ஃப்ளிப்கார்ட் குழும நிறுவனங்களில் ஏதாவது ஒன்றிலோ வேலை அல்லது பணியமர்த்துவதாக யாராவது உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா? நீங்கள் தனியாக இல்லை போலி ஃப்ளிப்கார்ட் வேலைகள் குறித்து ஜாக்கிரதை!

ஃப்ளிப்கார்ட்டில் பணி வாய்ப்பு என்பது கவர்ச்சிகரமானதும் கிராக்கியானதும் என்பதால் அவற்றை மறுவிற்பனையாளர்களிடமோ அல்லது முகவர்களிடமோ கொடுப்பதில்லை. இதுபோன்ற ஈமெயில்களுக்கு பதிலளிப்பதற்கோ அல்லது அந்த SMS-இல் குறிப்பிடப்பட்ட போன் எண்ணை அழைப்பதற்கு முன்பு, முன்னெச்சரிக்கை என்னவென்றால் : வேண்டாம். ஃப்ளிப்கார்ட் வேலைகள் (அல்லது ஏதாவது ஒரு ஃப்ளிப்கார்ட் குழும நிறுவனங்களின் வேலைகள்) விற்பனைக்கு அல்ல. மீண்டும் சொல்கிறோம், ஃப்ளிப்கார்ட் வேலைகள் விற்பனைக்கு அல்ல. இந்த வஞ்சகர்களிடம் ஏமாறவேண்டாம். இத்தகையவை சட்டவிரோத லாபத்திற்கான போலியான வேலை மோசடிகள். இவையெல்லாம் விட, பணத்திற்காக வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இந்த மோசடியான நபர்கள் அல்லது அமைப்புகள் ஃப்ளிப்கார்ட் மூலமாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல. இதுபோன்று ஏமாற்றக்கூடிய குறுஞ்செய்திகள் குறித்து தெளிவாக இருக்கும்படியும் இந்த மோசடிக்காரர்களிடம் ஏமாறக்கூடிய வாய்ப்புள்ள வேறு அப்பாவி வேலைதேடும் நபர்களை எச்சரிக்கும் படியும் உங்களிடம் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அறிந்துகொள்ள தொடர்ந்து வாசிக்கவும்.

Don't be fooled by Fake Flipkart jobs

போலி ஃப்ளிப்கார்ட் வேலைகளுக்கான வாய்ப்புகளை நீங்கள் பெற்றீர்களா? ஏமாறவேண்டாம்.

விசா மோசடிகள், பாஸ்போர்ட் மோசடிகள் மற்றும் வேலை மோசடிகள் குறித்து கட்டாயமாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வேலை மோசடி போன்றே போலியான ஃப்ளிப்கார்ட் வேலை வாய்ப்புகளையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். ஒருசில கயவர்கள் தங்களை ஃப்ளிப்கார்ட் மற்றும் ஃப்ளிப்கார்ட் குழும நிறுவனங்களின் ( ஈகார்ட் லாஜிஸ்டிக்ஸ், ஜீவ்ஸ்-எஃப்1, மின்த்ரா, ஜபாங், 2GUD போன்றவை) ஊழியர்கள் அல்லது பிரதிநிதிகள் அல்லது முகவர்கள் என்று ஆள்மாறாட்டம் செய்து, போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்கள் மற்றும் போலியான வேலை வாய்ப்புகள் போன்றவற்றை வழங்குவதாகச் சொல்லி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், இந்த நபர்கள் அல்லது முகமைகள் ஃப்ளிப்கார்ட்டிலோ அல்லது அதன் குழும நிறுவனங்களிலோ வேலை வாங்கித் தருவதாகக் கூறி வாய்ப்புள்ள வேலை தேடுபவர்களிடமிருந்து பணத்தை கேட்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ ஒரு SMS, தொலைபேசி அழைப்பு, ஈமெயில் அல்லது ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டாலோ, அல்லது உங்களுக்கு ஏதாவது கையிதழ்கள், அறிவிப்புகள் அல்லது அச்சு ஊடகம், இணைய ஊடகம் அல்லது சமூக ஊடகம் ஆகியவற்றில் வரும் விளம்பரங்கள் போன்றவற்றைக் காட்டினாலோ, அவற்றை நம்பவோ அல்லது அவற்றுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.

இதுபோன்ற சட்டவிரோதமான மற்றும் மோசடியான செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுடனோ அல்லது அமைப்புகளுடனோ எவ்வித தொடர்பும் ஃப்ளிப்கார்ட்டுக்கு இல்லை என்றுத் தெள்ளத்தெளிவாக அறிவிக்கிறோம். எங்களது வாடிக்கையாளர்கள், வாய்ப்புள்ள வேலை தேடுபவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் விழிப்புடன் இருக்கும்படியும் இதுபோன்ற குறுஞ்செய்திகளையோ அல்லது விளம்பரங்களையோ சந்தேகிக்கும்படி எச்சரிக்கிறோம். அத்துடன், தன்னுடைய பிராண்ட் பெயர் மற்றும் புகழுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இதுபோன்ற மோசடிக்காரர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஃப்ளிப்கார்ட் தீர்மானிக்கிறது.

ஃப்ளிப்கார்ட்டில் வேலைக்காக விண்ணப்பதாரர்களிடமிருந்து பணத்தைப் பெற ஃப்ளிப்கார்ட் எவ்வொரு நபர்களையோ அல்லது பணி நியமன முகமைகளையோ அங்கீகரிக்கவில்லை, மேலும் இதற்கு முன்பும் இப்படி செய்திருக்கவில்லை. ஆட்கள் அல்லது குழுக்கள்/அமைப்புகள் ஏமாற்றும் நோக்கத்துடனும் மறைமுகமாகவும் பரப்பும் போலி ஃப்ளிப்கார்ட் வேலைகள் குறித்த விளம்பரங்களில் தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். இதுபோன்ற நபர்கள் மற்றும் அமைப்புகள் அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி சட்டவிரோதமாக பயனடைய உங்களைத் திசைதிருப்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. உங்கள் பணம், ஆவணங்கள், தனிப்பட்ட மற்றும் நிதிசார்ந்த பதிவேடுகள் போன்றவை அவர்களின் கரங்களுக்கு கிடைப்பது ஆபத்து.

Fake Flipkart jobs - be cautious

போலி ஃப்ளிப்கார்ட் வேலைகளுக்கான வாய்ப்புகளை நீங்கள் பெற்றால் என்ன செய்யவேண்டும்?

முதலில், உங்களுக்கு வந்த குறுஞ்செய்தி அல்லது நீங்கள் தேடும் இணையதளம் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று சரிபாருங்கள். ஒரு அங்கீகரிக்கப்பட்ட flipkart.com அக்கவுன்ட் அல்லது ஃப்ளிப்கார்ட் சார்பாக வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஒரு ஒப்பந்த நிறுவனத்திலிருந்து ஈமெயில் அல்லது குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறதா? உண்மையான ஃப்ளிப்கார்ட் வேலைகள் நம்பிக்கையான மற்றும் நாணயமான வேலைவாய்ப்புத் தளங்களில் மட்டுமே பதிவேற்றப்படுகிறது. மேலும் அவற்றின் பட்டியல் இங்கேயும் இருக்கலாம் flipkartcareers.com and the Facebook page for Work at Flipkart.

ஃப்ளிப்கார்ட்டின் அங்கீகாரம் பெற்ற கூட்டாளிகள், உங்கள் சுயவிவரம் ஒரு பணியுடன் பொருந்தினால் உங்களைத் தொடர்பு கொள்ளலாம், ஆனால் அவர்கள் எப்போதும் ஒரு பணி குறித்த சுருக்க விவரத்தை உங்களுடன் பகிர்வார்கள். மேலும், ஃப்ளிப்கார்ட்டின் அங்கீகாரம்பெற்ற பணிநியமன கூட்டாளிகள் எப்போதும் வேலை தேடுபவர்கள் அல்லது விண்ணப்பதாரர்களிடமிருந்து பணத்தை கேட்பதில்லை என்று தயவுசெய்து தெரிந்துகொள்ளுங்கள். ஏதாவது பணி நியமனம் செய்பவர் உங்களிடமிருந்து பணத்தை எதிர்பார்த்தால் உடனடியாக எங்களது customer support channels -இல் புகார் செய்யுங்கள். அல்லது எங்களின் டிவிட்டர் அக்கவுன்டில் தொடர்புகொள்ளுங்கள் @workatflipkart.

ஃப்ளிப்கார்ட்டைச் சேர்ந்த பணிநியமனம் செய்பவர்கள் ஃப்ளிப்கார்ட் குழும நிறுவனங்களில் வேலை விளம்பரங்கள் இருப்பதாக தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பமாட்டார்கள். மிக முக்கியமாக அவர்கள் வேலைகளுக்காக பணத்தையோ அல்லது இதர கட்டணங்களையோப் பெறமாட்டார்கள். ஃப்ளிப்கார்ட்டில் அனைத்து வேலைகளும் தகுதியின் அடிப்படையிலேயே பெறப்படும்.

சந்தேகப்படும்படியான ஒரு குறுஞ்செய்தி உங்களுக்கு வந்தால் தயவுசெய்து அதுபற்றி உடனடியாக எங்களுக்குத் தெரிவிக்கவும். போலியான ஃப்ளிப்கார்ட் வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாறவேண்டாம். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், ஃப்ளிப்கார்ட் அல்லது ஃப்ளிப்கார்ட் குழும நிறுவனங்களில் பணி வாய்ப்பு என்பது கிராக்கி நிறைந்தது, ஆனால் அது தகுதியின் அடிப்படையிலேயே தான் பெறப்படும். எப்போதும் ஃப்ளிப்கார்ட்டில் வினோதமான பொருள்கள் விற்பனைக்கு டன் கணக்கில் குவிந்துகிடக்கிறது, ஆனால் வேலைகள் அப்படி இல்லை!


மேலும் வாடிக்கையாளர் விழிப்புணர்வு கட்டுரைகளை Safe Shopping section-இல் படிக்கவும்

Enjoy shopping on Flipkart