வாழ்த்துக்கள்! நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்… : இது போன்ற மோசடியான செய்திகளிடம் ஏமாறாதீர்கள்

Read this article in বাংলা | English | ગુજરાતી | ಕನ್ನಡ | मराठी | हिन्दी

போலியான செய்தி அல்லது அழைப்பின் ஒரே இலக்கு: நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தைத் திருடுவதும் உங்கள் இரகசியத் தகவல்களைக் கைப்பற்றுவதும் தான். அதுபோன்ற செய்திகள் வைரலாகலாம், அதுபோன்ற அழைப்புகள் உண்மை போன்று தெரியலாம். ஆனால் அதன் வலையில் விழுவதைக் காட்டிலும் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்னவென்றால் நீங்கள் அவற்றைப் புறக்கணித்துவிட்டு அவற்றைப்பற்றி புகார் அளிப்பதாகும். ஓர் வல்லுநரைப் போல் போலியான செய்தி அல்லது அழைப்பைக் கையாளுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Fake Message

“அன்புள்ள ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களே, வாழ்த்துக்கள்! நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்…” – இது போன்ற போலியான செய்தி கவர்ச்சியானதாகத் தெரியலாம், ஆனால் இது முற்றிலும் ஒரு பொறியாகும். மின்-வணிகத்தின் பிரபலம் அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களின் கவனம் தப்பும்போது ஃப்ளிப்கார்ட் போன்ற நம்பகமான பெயரைப் பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பார்க்கும் வாய்ப்புக்கு மோசடிக்காரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கவலை வேண்டாம்! அவற்றை கிளிக் செய்வதைத் தவிருங்கள். விவரங்களைக் கொடுப்பதைத் தவிருங்கள். மற்றவர்களுக்கு அனுப்புவதைத் தவிருங்கள். போலியான செய்தி அல்லது அழைப்பின் வழியே விரிக்கப்படும் பொறியில் மாட்டிக்கொள்வதைத் தவிர்த்தாலே, மோசடிக்காரர்களால் ஒருபோதும் உங்களைப் பிடிக்க முடியாது.

கேட்க எளிதாக உள்ளது? ஆம் அது எளிதுதான். நீங்கள் ஒரு போலியான செய்தி அல்லது அழைப்பைப் பெற்றால் பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகளில் சிலவற்றைப் பட்டியலிடும் விரைவான வழிகாட்டி இதோ.

போலியான செய்தியை அனுப்பும்போது மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் தந்திரங்கள்

கவனம் தவறும் வாடிக்கையாளர்களைத் தங்கள் வலையில் விழ வைக்க மோசடிக்காரர்கள் முடிந்த வரை முயற்சிக்கிறார்கள். அவர்கள் பின்பற்றும் சில பொதுவான தந்திரங்கள் இதோ.

அவர்களின் உரைச் செய்தி கவருவதாக இருக்கும்:வாடிக்கையாளர் தங்களின் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டும் அல்லது கேட்கும் தகவல்களைத் தர வேண்டும் என்பதற்காக நம்பவியலாச் சலுகைகளுடன் கூடிய செய்திகளை மோசடிக்காரர்கள் அனுப்புகிறார்கள். போலியான செய்தியில் நீங்கள் பார்க்கக்கூடிய உரைச் செய்தியின் எடுத்துக்காட்டுகள் இதோ:

  • “இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் இலவச பரிசை இப்போதே பெறுங்கள்!”
  • “இங்கு கிளிக் செய்து உங்கள் ரூ.10,000 கிஃப்ட் கார்டைப் பெறுங்கள்”

அவர்கள் உண்மை போல் உருவாக்க முயற்சிக்கிறார்கள்:அதிகாரப்பூர்வ ஃப்ளிப்கார்ட் பிரதிநிதிகளைப் போல் தோன்ற மோசடிக்காரர்கள் முயற்சிக்கிறார்கள். எனவே ஒரு போலியான எஸ்.எம்.எஸ்-ஸில் ‘வாடிக்கையாளர் ஆதரவு’ எண் இருக்கலாம், அழைப்பின் மறுபுறம் இருக்கும் மோசடியாள் தன்னை ‘ஃப்ளிப்கார்ட் அக்கவுண்ட் மேனேஜர்’ என அடையாளப் படுத்திக்கொள்ளலாம். நீங்கள் வென்ற இலவசப் பரிசை அனுப்புவதற்காக ஒரு சிறு தொகையைப் பரிமாற்றம் செய்யுமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.

அவர்களுக்கு உங்கள் இரகசியத் தகவல்கள் தேவை:ஏமாற்றுக்காரர்கள் தங்களின் போலியான செய்தி மூலமாக தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களை முடிந்தவரை உங்களிடமிருந்து கறக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் இணைப்புகள் உங்களை போலியான ஃப்ளிப்கார்ட் இணையத்தளத்திற்கு வழிநடத்தலாம், அதிலுள்ள படிவங்கள் மூலம் உங்கள் தரவுகளைக் கைப்பற்றலாம். நீங்கள் தவறான பரிவர்த்தனைகள் செய்வதற்கு வழிகாட்டப்படலாம், மேலும் அவர்களின் இணைப்புகள் உங்கள் சாதனத்தைப் பாதிக்கும் வாயில்களாக இருக்கலாம்.

மோசடியான செய்திகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாளுவது குறித்த முறைகளும்

Fake Message

நீங்கள் எஸ்.எம்.எஸ் வழியாகவும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசஞ்சர், டெலிகிராம், அல்லது பிற சமூக ஊடக செய்தித் தளங்கள் வழியாகவும் போலியான செய்தியைப் பெறக் கூடும். வாட்ஸ்அப் அல்லது சமூக ஊடகத் தளம் எனில், மோசடியாள் போலியான இன்வாய்சின் நகலைப் பதிவேற்றலாம் அல்லது உண்மை போல் தோன்றும் பிராண்டிங் உடன் செய்தி அனுப்பலாம், இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாகத் தோன்றுவதற்காகும். அவர்கள் மோசடியான ஃப்ளிப்கார்ட் ஐடியையும் சான்றாக வழங்கக்கூடும்.

நீங்கள் போலியான செய்தியைப் பெற்றாலோ அதன் உண்மைத்தன்மையில் சந்தேகம் ஏற்பட்டாலோ, கீழ்க்காணும் குறிப்புகளைப் பின்பற்றுக:

  • எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யாதீர்கள்
  • தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களை வழங்காதீர்கள்
  • அந்த எண்ணைத் திரும்ப அழைக்காதீர்கள்
  • அந்தச் செய்தியை மற்றவர்களுக்கு முன்னனுப்பாதீர்கள்

நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த மோசடியைக்குறித்து ஃப்ளிப்கார்ட்டுக்கு எச்சரியுங்கள் அல்லது உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள் இலவச வாடிக்கையாளர் சேவை எண் (1800 208 9898) -ஐ அழையுங்கள் அல்லது டிவிட்டரில் Flipkart Support (@flipkartsupport) என்ற முகவரிக்கு நேரடிச் செய்தி (டி.எம்) அனுப்புங்கள். அவ்வாறு செய்யும் ஏமாற்றுக்காரனின் தொலைபேசி, பெறப்பட்ட சந்தேகிக்கும் செய்தியின் திரைப்பிடிப்பு போன்றவற்றைக் குறிப்பிடுங்கள்.

நீங்கள் ஃப்ளிப்கார்ட்டைத் தொடர்பு கொள்வதற்கான வழிகள் இதோ.

போலியான அழைப்புகளும் அவற்றைப் பெறும்போது செய்ய வேண்டியவையும்

மோசடிக்காரர்கள் அறியாத, உண்மைபோல் தோன்றும் எண்ணிலிருந்து உங்களை அழைத்து ஃப்ளிப்கார்ட் அல்லது அதன் குழும நிறுவனங்களான மிந்திரா, ஜபங், ஜீவ்ஸ் அல்லது போன்பே-ஐ பிரதிநிதித்துவப்படுத்துவதாக நடிக்கலாம். அவர்கள் ஆங்கிலத்திலோ, இந்தியிலோ அல்லது உங்கள் விருப்பமான பிராந்திய மொழியிலோ பேசலாம். அவர்களின் உரையாடல் பெரும்பாலும் நீங்கள் தகுதிபெற்றுள்ள அற்புதமான சலுகை அல்லது உடனடியாக கணக்கில் செய்ய வேண்டிய சில நடவடிக்கைகள் என்பதாகவே இருக்கக்கூடும்.

இவை பற்றி பேசும் அழைப்புகளிடம் கவனமாக இருங்கள்:

  • நீங்கள் வென்றுள்ள இலவசப் பரிசுகள்
  • பரிசுக் குலுக்கலில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள்
  • உங்கள் ஃப்ளிப்கார்ட் கணக்கில் கவனிக்க வேண்டியவை தொடர்பாக

இதுபோன்ற அழைப்புகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி:

  • அவற்றைத் துண்டிப்பது
  • எந்தத் தகவல்களையும் கொடுக்காமல் இருப்பது (சி.வி.வி, பின், ஓ.டி.பி, ஈ-வாலட் விவரங்கள், வங்கிக் கணக்கு எண்)
  • தெளிவுபடுத்திக் கொள்ள அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் உதவி எண் 1800 208 9898 -ஐ அழையுங்கள்

போலியான மின்னஞ்சல்களும் அவற்றை எதிர்கொள்ளும் முறையும்

Fake Message

நீங்கள் மின்னஞ்சல் வழியாக போலியான செய்தியைப் பெறலாம். இந்த நுட்பத்தை பிஷ்ஷிங் என்று அழைப்பார்கள். மின்னஞ்சலின் பின்னணியில் உள்ள மோசடியாட்களின் இலக்கு, முன்பைப் போல, தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் திருடுவது, ஒருவேளை உங்களைப் பணம் செலுத்தச் செய்வது. அவ்வாறு செய்வதற்காக அம்மின்னஞ்சலில் கவர்ச்சியான கூப்பன் அல்லது உங்கள் கவனத்தைக் கவரும் சலுகை (எ.கா. 32 ஜி.பி பென் டிரைவ் ரூ 25-க்கு) வழங்கப்பட்டிருக்கலாம்.

Fake Message

மின்னஞ்சலில் நம்பகத்தன்மையை நீங்கள் சந்தேகித்தால் அல்லது அது அதிகாரப்பூர்வமில்லாத டொமைனிலிருந்து வந்திருப்பதைக் கவனித்தால் (Flipkart.com அல்லாதவை) இந்த நடைமுறையைப் பின்பற்றுங்கள்:

  • மின்னஞ்சலுக்குப் பதிலளிக்காதீர்கள்
  • எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யாதீர்கள்
  • மின்னஞ்சலில் இருக்கும் இணைப்பின் வழியே பணம் செலுத்தாதீர்கள்

போலியான செய்தியைப் பெற்றதாக நீங்கள் உணர்ந்தால், எப்போதும் போல, இலவச எண் அல்லது டிவிட்டர் வழியாக ஃப்ளிப்கார்ட் டைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சுருக்கமாக, ஓர் போலியான செய்தியைப் பெற்றால் நீங்கள் செய்யக்கூடிய இரண்டு சிறந்த விஷயங்கள்தவிர்த்தல்மற்றும்புகார் செய்தல்ஆகும்.

தற்போதைய சலுகைகளைத் தவறவிடும் கவலையை விடுங்கள்! உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் இவற்றின் மூலம் பெறலாம்:

அதே போல் போலியானச் செய்தியில் பெறும் இணைப்பின் மூலம் வாங்குவதற்குப் பதிலாக,, இவற்றின் மூலம் ஷாப்பிங் செய்யுங்கள்:

எனவே பாதுகாப்பாக ஷாப்பிங் செய்யுங்கள் #பைட்பிராட்வித்ஃப்ளிப்கார்ட் .

கூடுதலான சைபர் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளுக்கு, எங்களின் முதன்மை வழிகாட்டியைப் படியுங்கள்.

Enjoy shopping on Flipkart