தரம்? சோதித்துப் பாருங்கள்! ஃப்ளிப்கார்ட்டின் 2GUD, புதுப்பித்த பொருட்களுக்கான ஷாப்பிங்கில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

அடிக்கடி ஒரு புதிய மாடல் ஸ்மார்ட்போனுக்கு மாற விரும்புகிறீர்களா, அடிக்கடி லேப்டாபை மாற்ற விரும்புகிறீர்களா, அல்லது ஒரு நல்ல சலுகையை தவிர்க்க முடியவில்லையா, 2GUD என்ற ஃப்ளிப்கார்ட்டின் புதிய ஈ-காமர்ஸ் தளம் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறது. 2GUD-இன் புதுப்பித்த பொருட்கள், புதிய பொருட்களைப் போன்றே அருமையாக இருக்கிறது. ஆம், அவை தீரச் சோதிக்கப்பட்டு, உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? 2GUD வலைத்தளத்தை பாருங்கள், அதை உடனே உங்கள் போனில் புக்மார்க் செய்ய விரும்புவீர்கள்.

2gud

புதுப்பித்த பொருட்களுக்கு ஷாப்பிங் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும்: தரம் எப்படிப்பட்டது, இதற்கு விலை ரொம்ப அதிகமோ, இந்தப் பொருளை வாங்குவது உண்மையிலேயே நல்ல பேரமா போன்ற எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றும். இதுவெல்லாம் உறுதியாகத் தெரிந்தால் இந்தச் சந்தேகங்களை மறந்துவிட்டு பிடித்தமான பொருட்களை வாங்கும், அதுவும் நம்பமுடியாத விலைகளில் வாங்கும், சந்தோஷத்தில் திளைப்பீர்கள், அல்லவா! என்ன, 2GUD நம்பமுடியாத அளவுக்கு உள்ளதா?

2gud

ஆமாம், ஃப்ளிப்கார்ட் 2GUD புதுப்பித்த பொருட்களுக்கான ஷாப்பிங்கை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது. பொருட்களை வலைத்தளத்தில் காட்சிப்படுத்தும் முன்பு கவனமாகப் புதுப்பித்து அதன் அசல் தன்மையை மீட்கிறது, எனவே புதிய பொருட்களைப் போன்றே அவற்றை ரசிப்பீர்கள். ஏமாற்றங்கள் இல்லை, குறைகள் இல்லை. கட்டுபடியான, கைக்கெட்டும் விலையில் உயர்தரப் பொருட்களைத் தேர்வு செய்யுங்கள். அதுமட்டுமா, 2GUD ஒரு ஃப்ளிப்கார்ட்டின் வணிகத் திட்டம், அப்படியென்றால் கண்டிப்பாக நீங்கள் அதை நம்பலாம், கண்டிப்பாக உங்களுக்கு சௌகரியம் கிடைக்கும்.

என்ன, இதற்குமேல் காத்திருக்க முடியவில்லையா, இதோ விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

 

2GUD -இல் என்னென்ன வாங்கலாம்?

தொடக்கமாக, 2GUD பல்வேறு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், இன்னபிற எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்குகிறது. விரைவில் தொலைக்காட்சிகள், டேப்லட்கள், இதர வீட்டுபயோகப் பொருட்களும் வழங்கப்படும். ஒட்டுமொத்தத்தில், 400க்கும் மேற்பட்ட பிரிவுகளில் புதுப்பித்த பொருட்களை நீங்கள் தேடலாம்.

2gud

சிறந்த விலையில் சரியான தரம்

புழங்கிய பொருட்களை வாங்கும்போது, அதில் பணத்துக்கேற்ற மதிப்பு கிடைக்குமா என்ற கவலையா, இனி கவலையை விடுங்கள். 2GUD-இல் ஒவ்வொரு பொருளும் மிக நன்றாக வேலைசெய்யக்கூடியது, அதிலுள்ள பாகங்களும் கூட சோதிக்கப்பட்டவை. ஃப்ளிப்கார்ட்டின் இன்-ஹவுஸ் F1 இன்ஃபோ சொல்யூஷன்ஸ் பொருட்களைப் புதுப்பித்து, ஒவ்வொரு பொருளும் கறாரான தரச் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது, அதில் பிரமிக்கவைக்கும் அளவுக்கு 40 வெவ்வேறு அம்சங்கள் கவனிக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 2GUD-க்கு வருகிறீர்கள். உங்களுக்குப் பிடித்த மாடல் கிடைத்துவிட்டது, ஆனால் அதை ஆட்-டு-கார்ட்டில் சேர்க்க வேண்டுமா வேண்டாமா என்று இரண்டு யோசனையாக இருக்கிறதா? இந்தத் தயக்கத்தைப் போக்க நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்: கேமரா, ஸ்கிரீன், பேட்டரி செயல்திறன் மற்றும் ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் முதற்கொண்டு ஸ்மார்ட்போனின் 40 அம்சங்களை ஃப்ளிப்கார்ட்டின் நிபுணர்கள் சோதிக்கிறார்கள், இவர்கள் மிக உயர்ந்த தரங்களை மட்டுமே ஏற்பவர்கள்!

எனவே, எல்லா கட்டங்களுக்கும் டிக் அடித்த பொருட்கள் மட்டுமே திரையில் தோன்றும். அதைவிட முக்கியமாக, 2GUD-இல் ஷாப்பிங் செய்வது பணத்துக்கேற்ற மதிப்புக்கு உறுதியளிக்கிறது. உங்களுக்கு கணிசமான சலுகைகள் கிடைக்கும், பெட்டியிலிருந்து மட்டுமே எடுக்கப்பட்ட ஆனால் பயன்படுத்தப்படாத பொருட்களுக்கும் இது பொருந்தும்!

தரமே எங்களுக்கு முதன்மை

2GUD-இல் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் உரிய அதன் துல்லியமான நிலைமையை ஸ்மார்ட் கிரேடிங் சிஸ்டம் உங்களுக்குச் சொல்லும். இதோ, பொருட்கள் இப்படித்தான் தரம் பிரிக்கப்படுகின்றன.

2gud

புதியது போன்றவை: இவை, பெட்டியிலிருந்து மட்டுமே எடுக்கப்பட்ட புத்தம் புதிய பொருட்கள். புதியது போன்றவை என்று தரம் பிரிக்கப்பட்ட பொருட்கள் இதுவரை பயன்படுத்தப்படாதவை, முழுமையாக வேலை செய்யக்கூடியவை மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டவை.

2gud

பிரம்மாதமானது: இப்படித் தரம்பிரிக்கப்பட்ட பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது, பிரான்ட் உத்தரவாதம் கொண்டது, செயல்திறனுக்கு தரச்சான்று அளிக்கப்பட்டது, கீறல்கள் இல்லாதது, 3-மாத பிரான்ட் உத்தரவாதம் கொண்டது, மற்றும் சுலபமாக திருப்பிக் கொடுப்பதற்குத் தகுதிபெற்றது!

2gud

சிறந்தது: இப்படித் தரம்பிரிக்கப்பட்ட பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது, செயல்திறனுக்கு தரச்சான்று அளிக்கப்பட்டது, மற்றும் சொல்லும்படியான கீறல்கள் இல்லாதது. அதைவிட முக்கியமாக, இதன் செயல்திறன் முற்றிலும் மீட்கப்பட்டு, பொருள் முழுவதும் சோதிக்கப்பட்டது.

ஃப்ளிப்கார்ட்டின் நன்மைகள் நிறைந்தது

உங்கள் ஃப்ளிப்கார்ட் லாக்இன் மற்றும் பாஸ்வேர்டு மூலம் சைன்-இன் செய்தாலே போதும் அல்லது 2GUD -இல் அக்கவுன்ட் இல்லையென்றால் அதை உருவாக்குங்கள். அதன்பிறகு, எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல. உங்களுக்குப் பிடித்தமான பொருட்களை சுலபமாகத் தேடலாம். ஒவ்வொரு பொருளுக்கும் தரம்பிரிப்பு, உத்தரவாதம், முக்கிய அம்சங்கள், டெலிவரி நேரம், பணம் செலுத்தும் முறைகள் உள்ளிட்ட பலவற்றைப் பார்க்கலாம். இன்னும், அதே மாடலை புதிய பொருளாக ஃப்ளிப்கார்ட்டிலிருந்து வாங்கினால் எவ்வளவு விலை என்பதையும் தெரிந்துகொள்ளலாம். உங்கள் ஆட்-டு-கார்டில் பொருட்களைச் சேர்த்ததும், செக்அவுட் செய்து, விரும்பியபடி பணம் செலுத்தலாம். EMI வசதிகளும் வழங்கப்படுகிறது!

2GUD -இன் தர உறுதிமொழி

பொருட்கள் புதுப்பிக்கப்பட்டவை என்பதால் அவற்றுக்கு மேன்மையான ஏற்பாடுகள் அவசியமில்லை என்று எண்ணக்கூடாது. ஃப்ளிப்கார்ட் இதை நன்கு உணர்ந்துள்ளது, எனவே ஒவ்வொரு பொருளையும் சரிபார்ப்பதற்கு ஒரு நிபுணர்களின் குழுவை வைத்துள்ளது. அதுமட்டுமா, தரம்பிரிப்பு முற்றிலும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகிறது, எனவே நிச்சயமாக நீங்கள் தரமான பொருளை பெற முடியும். இதை வலியுறுத்தும் வகையில், ஏற்கனவே பிரான்ட் உத்தரவாதம் இல்லாத பொருட்களுக்கும் ஃப்ளிப்கார்ட் உத்தரவாதம் அளிக்கிறது. நாடு முழுக்க விரிவாக ஏராளமான சர்வீஸ் மையங்கள் இருப்பதால், எந்தப் பிரச்சனைகளைச் சந்தித்தாலும் உடனே தீர்வுக்கான வசதி கிடைக்கிறது.

பிறகு என்ன, ஷாப்பிங்கை தொடங்கலாம் தானே!

2gud

2GUD -இல் உள்ள நல்லுள்ளங்கள் உங்களுக்கு நன்மைகளை வழங்கத் துடிக்கிறார்கள் என்பதால், உங்கள் மொபைலிலேயே அணுகமுடிகிற ஓர் ஈ-காமர்ஸ் வலைத்தளத்தை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். விரைவில், ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களிலும், ஏன் உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பிலும் கூட ஷாப்பிங் செய்ய முடியும்.

இனி புதுப்பிக்கப்பட்ட பொருட்களுக்கு ஷாப்பிங் செய்யும்போது நீங்கள் விளம்பரப் பத்திகளை புரட்டிக் கொண்டிருக்கவோ அல்லது உரிமையாளரிடம் நல்ல விலைக்கு பேரம் பேசவோ தேவையில்லை. 2GUD -இல் சரியான விலையில் ஃப்ளிப்கார்ட்டின் அங்கீகார முத்திரை கொண்ட தரத்துடன் வாங்கலாம். நீங்கள் நீண்ட காலமாக ஆசைப்பட்ட புளூடூத் போஸ் ஸ்பீக்கர் அல்லது சாம்சங் கேலக்ஸி S8+ என எதுவாக இருந்தாலும், உங்கள் ஸ்மார்ட்போனை எடுங்கள், ஷாப்பிங்கை தொடங்குங்கள்!


மேலும் வாசிக்க: ‘புதுப்பிக்கப்பட்ட பொருட்கள்’ இப்போது புது விதமாக – 2GUD திட்டம்

 

Enjoy shopping on Flipkart