1. Home
  2. Uncategorized
  3. மன உறுதியை நோக்கிய பயணம்: ஊரடங்கிற்கு மத்தியில், ஜீவிஸில் பணிபுரியும் இந்த தொழில் நுட்பவல்லுநர் ஒரு வாடிக்கையாளருக்கு உதவ 25 கி.மீ. சைக்கிள் பயணம் செய்திருக்கிறார்.

மன உறுதியை நோக்கிய பயணம்: ஊரடங்கிற்கு மத்தியில், ஜீவிஸில் பணிபுரியும் இந்த தொழில் நுட்பவல்லுநர் ஒரு வாடிக்கையாளருக்கு உதவ 25 கி.மீ. சைக்கிள் பயணம் செய்திருக்கிறார்.

0
Read this article in বাংলা | English | ગુજરાતી | हिन्दी | ಕನ್ನಡ | मराठी

உதவியை நாடிக்காத்திருக்கும் வாடிக்கையாளருக்கு உதவ ஜீவிஸ் தொழில்நுட்ப வல்லுனரான அயான் குஹாதகுர்த்தா கூடுதலாக மேற்கொண்ட பயணத்தை நோய்த்தொற்று பரவலினால் கூட தடுக்க முடியவில்லை.

மன உறுதியை நோக்கிய பயணம்: ஊரடங்கிற்கு மத்தியில்,  ஜீவிஸில்  பணிபுரியும் இந்த தொழில் நுட்பவல்லுநர் ஒரு வாடிக்கையாளருக்கு உதவ 25 கி.மீ. சைக்கிள் பயணம் செய்திருக்கிறார்.
0

கோவிட்-19 காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் அயான் குஹாதகுர்த்தா தான் நீண்ட நாள் ஓட்டியதன் காரணமாக தொந்தரவு கொடுக்க ஆரம்பித்த தன்னுடைய பழைய சைக்கிளைக் கொடுத்துவிட்டு, புதிய சைக்கிளை வாங்கினார்.ஜீவிஸ் தொழில்நுட்ப வல்லுநரான அயானின் பணி என்னவென்றால், தினமும் சென்று வாடிக்கையாளர்களின் சேவை கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான். அப்போது, தனது புதிய சைக்கிள் விரைவில் அருகிலுள்ள மற்றும் தொலைதூர வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுத்தரும் என்று அவருக்குத் தெரியாது.

ஜூன் 3, 2020 அன்று, கொல்கத்தாவைச் சேர்ந்த ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர் சுமந்தா சட்டோபாத்யாய், தான் வாங்கிய மொபைல் தொலைபேசியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்குமாறு சேவை கோரிக்கையை முன்வைத்தார். அவரது நகரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், பொது போக்குவரத்து இன்னும் நிறுத்தப் பட்டிருந்தது. ஊரடங்கு திரும்பப் பெறப்படும் முன், தனக்கு உதவி கிடைக்கும் என்று சுமந்தா உண்மையில் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், அவரை முற்றிலும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும் விதமாக, ஜீவிஸ் தொழில்நுட்ப வல்லுநர் ஒரு சில மணி நேரங்களிலேயே அவரது தொலைபேசியை நேரில் பரிசோதிக்க வந்தடைந்தார். அவர் தான் அயான்.

Jeeves technician 1
ஜீவிஸ் தொழில்நுட்ப வல்லுநர் அயான் (ஆர்) மகிழ்ச்சியான வாடிக்கையாளர் சுமந்தா சட்டோபாத்யாயுடன்

தனது வீட்டிற்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தீர்கள் என்று சுமந்தா அயானிடம் கேட்டபோது, தங்களது கோரிக்கையை சரிசெய்து கொடுப்பதற்கு தனது மிதிவண்டியில் 25 கிலோமீட்டர் ஒரு வழி சவாரி செய்து வந்ததாக அயான் கூறியதைக் கேட்டு ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர் மிகவும் நன்றியுடன் வியந்த பார்வையில் திகைத்து நின்றார்.

“தனது பணிமீது அவர் கொண்டிருந்த நேர்மையான அணுகுமுறை என்னை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது” என்று கூறுகிற சுமந்தா, ஜீவிஸ் தொழில்நுட்ப வல்லுநருக்கான தனது பாராட்டுகளை முகநூலில் பதிவிட்டுள்ளார். “அவர் என் தரப்பிலிருந்து பெரும் மரியாதையை சம்பாதித்துள்ளார். சர்வ வல்லமையுள்ள கடவுள் அவருக்கு தகுதியான அனைத்து வெற்றிகளையும் அருளட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.”

 


இந்த கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உடன் வரும் பாட்காஸ்ட்டையும் கண்டுகளித்திடுங்கள்!

 

அயானைப் பொறுத்தவரை, விதிவிலக்கான கடமை உணர்வு அவரது இரண்டாவது இயல்பு ஆகும்.சேவைத்துறைக்கு ஒருநண்பர் மூலம் பரிந்துரைக்கப்பட்டதன் மூலம் 2018 ஆம் ஆண்டில் அவர் ஜீவிஸில் சேர்ந்தபோது அவருக்கு 19 வயதாக இருந்தது.

“எங்களுக்கு ஒரு டிக்கெட் ஒதுக்கப்படும்போது, எங்களுக்கு முக்கியமாகத் தோன்றுவது வாடிக்கையாளர்தான்” என்று இளம் தொழில்நுட்ப வல்லுநர் கூறுகிறார், ஊரடங்கு நேரத்திலும் வாடிக்கையாளரைச் சந்திக்க நீண்ட பயணத்தை மேற்கொள்ள அவரைத் தூண்டியது என்ன என்பதை அவர் நினைவு கூறுகிறார், “பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் நான் தூரத்தைப் பற்றி உண்மையில் சிந்திக்கவில்லை, ஏனெனில் அது முக்கியமல்ல. தவிர, ரயில்கள் ஓடவில்லை, வானிலை நன்றாக இருந்தது, எனவே வாடிக்கையாளரின் இருப்பிடத்திற்குச் செல்ல முடிவு செய்தேன்”, என்கிறார் அவர்.

Ayan Jeeves Technician from Howrah

பெற்றோருக்கு ஒரேபிள்ளை, அயான். கொல்கத்தாவுக்கு அருகிலுள்ள ஹவுராவில் வசிக்கிறார். அவரது பெற்றோர் இ-வர்த்தகம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை என்றாலும், அவர் செய்து வரும் வேலையைப்பற்றி அவர்கள் மிகவும் பெருமிதம் கொள்வதாக அவர் கூறுகிறார்.

வழக்கமான நாட்களில், அயான் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வாடிக்கையாளருக்கு சேவை செய்ய சைக்கிளில் செல்வார். நெடுந்தொலைவு பயணங்களுக்கு, அவர் உள்ளூர் ரயிலில் செல்வது வழக்கம். ஊரடங்கின்போது, அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு அவரது பழைய சைக்கிள் பிரச்சினை கொடுக்கத் தொடங்கியதால், அதனைக் கொடுத்துவிட்டு, புதியஒன்றை வாங்கினார்.

“வாடிக்கையாளர்களுக்கு நான் தேவை என்று எனக்குத் தெரியும் எனவே போக்குவரத்துப் பணியை சரிவர செய்வதற்கு தடையை விரும்பாததால் புதிய சைக்கிள் வாங்கினேன்,” என்று அவர் கூறுகிறார். இது அவருக்கு அதிர்ஷ்டமான முடிவாக மாறியது.

jeeves technician 2

அயான் போன்ற அர்ப்பணிப்பு மிக்க நபரை பெற்றிருப்பது ஃபிளிப்கார்ட் குழுவிற்கு, குறிப்பாக ஜீவிஸ்க்கு மிகவும் மதிப்பு மிக்கதாகத் திகழ்கிறது. “எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்து எங்களுக்குப் பெருமை சேர்க்கிறார்கள், மேலும் அவர்கள் எல்லா இடையூறுகளையும் தாண்டி தங்கள் கடமைகளைச் செய்யும்போது அது எப்போதும் நம்மை நெகிழ்ச்சி அடையச் செய்கிறது” என்று துணைத்தலைவரும் ஜீவிஸ் எஃப்1 –இன் தலைவருமான நிபுண் சர்மா கூறுகிறார். “தொற்று நோய் இருந்தாலும் அல்லது இல்லை என்றாலும், வாடிக்கையாளருக்குத் தான் எங்களது முன்னுரிமை என்பதை அயான் மிகச் சரியாக நிரூபித்துள்ளார்.”

ஒன்றுமில்லை என்பது போல 50 கி.மீ. தொலைவு சைக்கிளில் சவாரி செய்திருப்பது இத்தகைய மதிப்புமிக்க நபருக்கு ஒரு எடுத்துக்காட்டு. கொரோனா வைரஸ் தொற்று சேவைத் துறைக்கு தனித்துவமான மற்றும் முன்னோடியில்லாத சவால்களை முன்வைத்தாலும், அயான் தான் செய்யும் விஷயங்கள் குறித்து மனநிறைவு பெறுகிறார் மற்றும் பிற சகாக்களுக்கும் உத்வேகமாகத் திகழ்கிறார்.

“முதல் வரிசை பணியாளர்களாக நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும், வாடிக்கையாளரின் பிரச்சினையை காது கொடுத்து கேட்க வேண்டும்,” என்று கூறும் அவர், “அவ்வாறு தொடர்ந்து செயல்பட்டால், யுத்தத்தில் பாதி வெற்றி கிடைத்தது போன்றதாகும், பின்னர் நம்மால் அவற்றுக்கான தீர்வை வழங்க முடியும்”, என்றும் கூறுகிறார்.


இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? தனக்கென சொந்தமாக மின்-பைக்கை உருவாக்கிய ஜீவிஸ் தொழில்நுட்ப வல்லுநரானசிக்கண்ணாவின், கதையைப் படியுங்கள்

Enjoy shopping on Flipkart

About the Author

Team Flipkart Stories

இந்த கட்டுரையை பிளிப்கார்ட் கதைகள் ஆசிரியர் குழு எழுதி திருத்தியது. எங்களுடன் தொடர்பு கொள்ள, தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });