#செல்ஃப்மேட் – வரவேற்பாளர் வேலையில் இருந்து “பிடித்தமான” வேலை, இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் அதை நேசத்துடனும் நம்பிக்கையுடனும் செய்தார்

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் யாஷ் தேவை நாங்கள் உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். அவர் தன் மீது நம்பிக்கை வைத்து, சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்காக நல்ல சம்பளம் பெற்றுவந்த தனது வேலையை விட்டுவிட்டார். அவரைத் தொடர்ந்து செயல்பட வைத்தது எது? அவருடைய அன்பான மனைவியின் ஆதரவும், தன் மீது அவருக்கு இருந்த சுய நம்பிக்கைதான். அவருடைய உற்சாகமளிக்கும் கதையை படித்துப் பாருங்கள்.

Flipkart seller

ஜிஷ்ணு முரளியிடம் சொன்னது போல

யாஷ் தேவ் , குஜராத் மாநிலத்தின் நதியாட் நகரைச் சேர்ந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்

நான் ஏப்ரல் 2016-இல் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் ஆனேன், கடந்த 3 ஆண்டுகளாக எனது தயாரிப்புகளை நான் ஆன்லைனில் விற்று வருகிறேன். நான் ஒரு தொழில்முனைவோர் ஆவதற்கு முடிவெடுப்பதற்கு முன் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். நான் விமான பொறியியலில் இளங்கலைப் பட்டம் முடித்து, அதன் பின் MBA முடித்திருக்கிறேன்.

நான் ஜஸ்ட்டயல் நிறுவனத்தில் ஒரு மேலாளராகப் பணியைத் தொடங்கினேன். தொடக்கத்தில் வேலை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் படிப்படியாக அது எனக்கு சலிப்பு ஏற்படுத்தியது. என்னால் வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையே சமநிலையை பராமரிக்க முடியவில்லை.

வேலையில் அதிக அழுத்தம் காரணமாக, நான் அதிக நேரம் வீட்டிற்கு வெளியே செலவிட்டேன். என் குடும்பத்திற்காக என்னால் நேரம் ஒதுக்க முடியாததால் நான் மிகவும் அதிருப்தி அடைந்தேன். அப்போது தான் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் ஆவதற்கான வாய்ப்புகளைப் பற்றி நான் அறிந்துகொண்டேன்.

என் குடும்பத்தில் என் பெற்றோர்களும் எனது மனைவியும் இருக்கின்றனர். என் குடும்ப உறுப்பினர்கள் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைகளில் இருக்கிறார்கள் அல்லது அதிக சம்பளம் பெறும் அரசாங்க வேலைகளில் இருக்கிறார்கள். எனவே ஒரு தொழில் தொடங்குவதற்கான என் விருப்பத்தை நான் அவர்களிடம் கூறியபோது, நல்ல சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையை நான் விட்டுவருவது அவர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.

தொழில் நடத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் இடர்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட வேண்டாம் என அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், நான் வெற்றி பெறுவதருக்கான சூழல் வேறு ஒரு வழியில் உள்ளது என நம்பினேன் மற்றும் அந்த நம்பிக்கையை நான் ஒருபோதும் இழக்கவில்லை. என் மனைவி மட்டுமே எனக்கு ஆதரவாக இருந்தார். அவள் எனக்கு ஊக்கமளித்ததோடு, என் கனவுகளை ஒருபோதும் கைவிட வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். பேக்கிங் போன்ற வணிகச் செயல்பாடுகளில் அவள் எனக்கு ஆதரவாகவும் இருந்தார்.

கொஞ்சம் ஆராய்ச்சி செய்த பிறகு, ஆஃப்லைன் வணிகத்தில் ஈடுபடுவதை விட ஆன்லைன் வணிகத்தில் ஈடுபடுவது மிகவும் வசதியானதாக இருப்பதை நான் கண்டறிந்தேன். அதற்கு முக்கியக் காரணம் என்னவெனில், எனது வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் இருக்கவில்லை. மேலும், நான் எனது தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய வேண்டியிருந்தது.

மொபைல் அக்சஸரிகளை விற்பனை செய்வதிலிருந்து நான் தொடங்கினேன் – தற்காலத்தில் ஸ்மார்ட்ஃபோன்களுக்கான தேவை அதிகம் இருப்பதால் ஹெட்செட்களை முதலில் விற்கத் தொடங்கினேன். நான் அடிப்படையிலிருந்து தொடங்கினேன், மொபைல் அக்சஸரிகளைப் பட்டியலிடுவதற்கு குறைவான முதலீடே போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று நான் ஃப்ளிப்கார்ட்டில் மொபைல் அக்சஸரிகள், கம்ப்யூட்டர் அக்சஸரிகள், குளியலறைப் பொருள்கள், பெண்களுக்கான கைப்பைகள், மகளிர் ஆடைகள், ஆண்கள் உடைகள், வீட்டு அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட 17 க்கும் மேற்பட்ட பொருள்களை விற்பனை செய்கிறேன்.

நான் தொடர்ந்து விற்பனை செய்ததால், எனது பொருள்களை நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் வாங்குவதைப் பார்த்து எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது.

இது வரை என் பயணம் சிறப்பானதாக இருந்துள்ளது. என்னால் நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது மற்றும் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன். நான் முன்னரே குறிப்பிட்டது போல, நான் ஒரு வியாபாரக் குடும்பத்திலிருந்து வந்தவன் அல்ல, எனவே வியாபாரத்தை நிர்மானிப்பது என்பது ஒரு பெரிய பணியாக இருந்தது – பொருள்களைக் கொள்முதல் செய்வது, சரியான விற்பனையாளரைக் கண்டறிவது, போர்ட்டலைப் பற்றி புரிந்துகொள்வது அதில் பொருள்களை எப்படி விற்பனை செய்வது என்பது மற்றும் GST தாக்கல் செய்வது என அனைத்துமே, ஒரு தொழில்முனைவோராக என்னுடைய பயணத்தில் சவால்கள் இருந்தன.

ஆனால் கடந்து சென்ற ஒவ்வொரு நாளும், இந்த சவால்கள் மிகவும் எளிதானதாக இருந்தன. நான் எனது பொருள்களை மற்ற ஷாப்பிங் வலைத்தளங்களிலும் பட்டியலிட்டிருக்கிறேன். ஆனால் ஃப்ளிப்கார்ட்டிலிருந்து எனக்குக் கிடைத்த ஆதரவு வியப்படையச் செய்வதாக இருந்தது. அவர்களின் ஆதரவு எல்லாவற்றையும் மிகவும் எளிதாக்கியது.

தி பிக் பில்லியன் டேஸ் சேல் எனக்கு எப்போதுமே விற்பனையிலும் இலாபத்திலும் சிறப்பானதாக இருந்துவருகிறது. சென்ற ஆண்டு எனக்கு வழக்கமாகக் கிடைப்பதை விட நான்கு மடங்கு ஆர்டர்கள் கிடைத்தன. எனக்கு உறுதுணையாக நான் மூன்று பேரை வேலைக்கு நியமித்திருந்தேன், உரிய நேரத்தில் ஆர்டர்களை பேக்கிங் செய்வதற்கும் செயலாக்குவதற்கும் நான் அதிகமான நபர்களைப் பணியமர்த்த வேண்டியிருந்தது. இந்த ஆண்டு, இன்னும் சிறப்பான அனுபவம் கிடைக்கும் என நம்புகிறேன்!

மேலும் வாசிக்க:#செல்ஃப்மேட்: பிளே ஸ்கூல் ஆசிரியையிலிருந்து ஆன்லைன் தொழில்முனைவோராக, ராக்கெட் சிங்கால் மூலம் கிடைத்த உத்வேகத்தால்!

Enjoy shopping on Flipkart