#செல்ஃப்மேட்: இல்லத்தரசியாக இருந்து திறமையான தொழில்முனைபவராக — இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் அவரது கனவுகளை நிறைவேற்றுவதற்காக இன்னல்களைத் திறமையுடன் சமாளித்தார்

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

பலருக்கு, ஆன்லைனில் விற்பனை செய்வதால் தான் இந்தியச் சந்தை முழுவதையும் அணுக முடிகிறது. இன்னும் சிலருக்கு, இது பாலின பேதங்களைத் தகர்த்து சுதந்திரத்தை நோக்கி உறுதியாக அடியெடுத்து வைப்பதற்கான வழியாக விளங்குகிறது. நமது #செல்ஃப்மேட் தொடரின் அடுத்த கதையில், டெல்லியில் உள்ள MP மெகா ஸ்டோர் உரிமையாளராகிய ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் மோனிகா சைனி, ஃப்ளிப்கார்ட்டில் ஆன்லைன் தொழில்முனைபவர் என்ற மேன்மையான நிலையை அடைந்திருப்பதன் மூலம் பெண்கள் வீட்டை அக்கறையுடன் கவனித்துக் கொண்டால் போதும் என்ற தன் குடும்பத்தின் பழைய பல்லவியை எப்படித் தகர்த்தார் என்பதைப் படித்துப் பாருங்கள்.

Flipkart seller

மோனிகா சைனி, டெல்லியைச் சேர்ந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்

ஜிஷ்ணு முரளியிடம் சொன்னது போல


ஒரு வணிகத்தைத் தொடங்குவது என்பது சுதந்திரமாக நான் எடுத்து வைத்த முதல் அடி. அது எனக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எனது கணவரின் நண்பர் மொபைல் போன்கள் மற்றும் அக்சஸரிகள் விற்பனை செய்கின்ற ஒரு ஆன்லைன் வணிகத்தை நடத்திவருகிறார். என் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான பணத்தை நான் சுயமாகச் சம்பாதிக்க விரும்பினேன், ஆனால் அதைச் செய்ய எனக்கு ஊக்கமளிக்கப்படவில்லை. வீட்டை விட்டு வெளியே வேலைக்குச் செல்ல என் குடும்பத்தினர் எனக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நான் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாதகர் எனப்படும் ஒரு சிற்றூரிலிருந்து வருகிறேன். இந்தியாவில் உள்ள கிராமங்களில் இன்றும் கூட, பெண்களை வேலைக்காக வெளியில் அனுப்பக் கூடாது என்ற எண்ணம் நிலவுகிறது. என் கணவர் டெல்லியைச் சேர்ந்தவர், ஆனால் நான் அங்கு சென்றபோது மீண்டும் நான் வேலைக்குச் செல்வதற்கு எதிரான சூழ்நிலைகளே நிலவின. வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியில் செல்வது என் மாமியாருக்குப் பிடிக்கவில்லை, ஆனால் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற யோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது தான் சுயமாகத் தொழில் தொடங்கலாம் என நான் தீர்மானித்தேன்.

என் சுற்றுப்புறத்தில் பல பள்ளிகள் இருக்கின்றன. இங்கே உள்ள எல்லாப் பள்ளிகளும் கரும்பலகைகளைப் பயன்படுத்துகின்றன. எனவே, பள்ளிகளுக்கு கரும்பலகைகளும் வெண்பலகைகளும் விற்கலாம் என்ற யோசனை எனக்கு வந்தது. என் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு, பலகைகளுடன் சேர்த்து சாக்பீஸ் மற்றும் மார்க்கர்களையும் விற்கலாம் என நான் முடிவெடுத்தேன். நான் 2018 -ஆம் ஆண்டில் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்யத் தொடங்கினேன். அது என்னுடைய கணவரின் ஆலோசனை — நான் செய்த செயலை அவரும் கூட நம்பிக்கையுடன் பார்க்கத் தொடங்கினார் மற்றும் ஃப்ளிப்கார்ட் தான் நாங்கள் செல்ல வேண்டிய வழி என்று நம்பினார்.

நான் தொடங்கியபோது ஒரு சில சவால்களைச் சந்தித்தேன். மூலப்பொருள்களை எங்கு கொள்முதல் செய்வது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை.
தொடக்கத்தில், நான் வெவ்வேறு விற்பனையாளர்களிடம் இருந்து எனது பொருள்களைக் கொள்முதல் செய்தேன். ஆனால் இப்போது, நான் அவற்றை ஒரே விற்பனையாளரிடமிருந்து பெறுகிறேன். ஆன்லைனில் விற்பனை செய்வது ஒரு வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது.

இது வரை எனது பயணத்தில் நான் நிறையக் கற்றிருக்கிறேன். தொழில்நுட்பத்தையும் நான் நன்கு கற்றுக்கொண்டேன் — நான் தொடங்கியபோது கணினி இயக்குவது எனக்குப் பழக்கமில்லாமல் இருந்தது, எனவே எனது கணவரின் உதவி எனக்குத் தேவைப்பட்டது. ஆனால் இப்போது, கிட்டத்தட்ட முழு வணிகத்தையுமே நான் சுயமாக நடத்துகிறேன். எனது வணிகத்தின் வளர்ச்சியைத் தொடர, நான் வேகமாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கியபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு 1 அல்லது 2 ஆர்டர்கள் கிடைத்தன, ஆனால் இப்போது நான் நாளொன்றுக்கு சுமார் 22 ஆர்டர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது! எனது வளர்ச்சி எனது மாமியாருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. நான் வணிகத்தை வளர்ப்பதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, இப்போது அவர் என் குழந்தையைப் பார்த்துக்கொள்கிறார்.


மேலும் வாசிக்க: #செல்ஃப்மேட் – இந்த விற்பனையாளர் தனது கனவுகளை உணர்ந்துகொள்ள ஃப்ளிப்கார்ட் உதவியது. இப்போது, தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கும் அவர் உதவுகிறார்

Enjoy shopping on Flipkart