#செல்ஃப்மேட் – இந்த விற்பனையாளர் தனது கனவுகளைத் தெளிவாக உணர்ந்துகொள்ள ஃப்ளிப்கார்ட் உதவியது. இப்போது, அவர் தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு உதவி வருகிறார்

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

இல்லத்தரசியாக இருந்த இந்தத் தாய் தனது டிசைன்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்ததன் மூலம் ஃபேஷன் டிசைனில் தான் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதைச் செய்யும் அதே நேரத்தில், நிறைய பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க அவர் ஒரு வழியும் கண்டறிந்தார். அவரது கதையை அவரது சொந்த வார்த்தைகளில் படித்துப் பார்த்து, ஊக்கத்தைப் பெறுங்கள்.

seller

நீடி வைஷ்ணவா, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்

ஜிஷ்ணு முரளியிடம் கூறியது போல


நான் முதன்முதலில் 2015 இல்ஃப்ளிப்கார்ட்டில் ஒரு விற்பனையாளராகப் பதிவு செய்தேன். ஆனால், அந்தச் சமயம் நான் கர்ப்பிணியாக இருந்தேன், எனவே என் குழந்தையின் மீது கவனம் செலுத்த வேண்டும் என நான் முடிவு செய்தேன். நவம்பர் 2018 -இல், நான் மீண்டும் என் பொருள்களை ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்யத் தீர்மானித்தேன்.

நான் பெண்களுக்கான ஆடைகளை விற்பனை செய்தேன் மற்றும் பாரம்பரிய ஆடைகளிலும் நான் தனிக் கவனம் செலுத்திவந்தேன். வேலைப் பாதுகாப்பை மனதில் கொண்டு, வேலையை நான் தொடர்ந்து செய்துவந்தேன். ஆனால் நான் இரண்டாவது குழந்தைக்காக மீண்டும் கர்ப்பமடைந்தபோது, எனக்கு கைவசம் நிறைய ஆர்டர்கள் இருந்தன. தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்பது என்னுடைய பழைய கனவு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, முழு நேர வேலை என்பது சாத்தியமில்லாததாக இருந்தது. வீட்டில் இருந்துகொண்டு ஆன்லைன் வாயிலாக வேலை செய்வது எனது தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ள எனக்கு உதவியதோடு, எனது குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவும் எனக்கு நேரம் கிடைத்தது.


YouTube player

எனது ஃப்ளிப்கார்ட் பயணம் ஏற்ற இறக்கத்துடன் இருந்து. நான் தொடங்கியபோது, ஒரு ஆடை வகையை மட்டுமே நான் விற்பனைக்காக முன்னிலைப்படுத்தினேன்: ஒரு ஜோடி பைஜாமாக்கள். அந்த வாரத்தில் எனக்கு பல ஆர்டர்கள் குவிந்தன, உண்மையில் ஆடைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதால் நான் மீண்டும் தயாரிக்க வேண்டியிருந்தது. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. அதனால் ஊக்கம் பெற்ற நான், குர்தீஸ் மற்றும் பெண்களுக்கான மற்ற ஆடைகள் என மேலும் பல வகையான ஆடைகளை விற்பனைக்காக பட்டியலிடத் தொடங்கினேன். அந்த அனுபவம் எனக்குள் மேலும் தேடலைத் தூண்டியது.

எனக்கு உறுதுணையாக பலர் இருக்கிறார்கள் — என்னைப் போலவே முழு நேர வேலை செய்ய முடியாத 3-4 பெண்களைக் கொண்ட ஒரு அணி. வளர்ச்சியின் ருசியைச் சுவைத்த என் அணியினர், இன்னும் நம்மால் எந்த அளவுக்குச் சாதிக்க முடியும் எனப் பார்க்கலாம் என்ற ஊக்கத்தையும் பெற்றுள்ளனர். அவர்கள் சேர்ந்தபோது, ஈ-காமர்ஸில் அவர்களுக்கு சிறிதும் அனுபவம் இல்லை. ஆனால், அணியினருடன் சேர்ந்து சிறிது காலம் வேலை செய்த பிறகு அவர்கள் அதிகமான விஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். இப்போது தேவைகள் வந்து குவியும்போது, எந்த ஆடைகள் அதிகம் விற்பனையாகின்றன என்பதையும் தேவைகளை எப்படி அவர்களால் பூர்த்தி செய்ய முடியும் என்பதையும் அவர்கள் மிக எளிதாகக் கண்டறிய முடிகிறது. இந்தத் தொழில் அவர்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கினர். அவர்களில் சிலர் எங்களிடமிருந்து பிரிந்து சென்று தனியே சொந்தமாகத் தொழில் தொடங்கியிருக்கிறார்கள். இது சிறப்பான கற்றலையும், உறுதிப்பாட்டையும், மிக முக்கியமாக நம்பிக்கையையும் காண்பிப்பதாக நான் கருதுகிறேன்.

seller

நான் ஃபேஷன் டிசைனிங் பயிற்சி பெற்றிருக்கிறேன். எப்பொழுதுமே பெண்களின் ஆடைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும், ஏனெனில் நான் அதில் நிறையப் படைப்புத்திறன் மிக்க வாய்ப்புகளை பார்க்கிறேன். நான் என் திறன்களைப் பயன்படுத்த வேண்டுமென விரும்பினேன். ஆன்லைன் விற்பனை இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பிராந்தியம் சார்ந்த பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியது. இப்போதெல்லாம் அனைவரும் உலகளாவிய நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள் – ஆன்லைன் விற்பனையில் பிராந்திய சார்புகளின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருப்பதாக நான் கருதுகிறேன். ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்களின் வயதுக் குழுவிலும் எண்ணங்களிலும் அது அதிக விளைவுகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. சென்னையில் ஒருவர் விரும்பும் அதே ஆடையை டெல்லியில் வசிப்பவரும் வாங்குகிறார். இந்தியா முழுவதும் ஃப்ளிப்கார்ட் பரவி இருப்பதால், வாடிக்கையாளரின் வசிப்பிடம் என்பது குறைந்த முக்கியத்துவம் கொண்டதாக ஆகிறது.

seller

ஃப்ளிப்கார்ட் நான் தேர்ந்தெடுக்க வேண்டிய வழி என்பது எனக்கு தொடக்கத்தில் இருந்தே தெளிவாகத் தெரிந்தது. ஆரம்பத்தில் 2015 இல், ஆன்லைன் விற்பனையைத் தொடங்கலாம் என நான் முயற்சித்தபோது, ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்நாப்டீல் போன்ற பல நிறுவனங்களை நான் பட்டியலிட்டிருந்தேன். மற்ற நிறுவனங்களை விட ஃப்ளிப்கார்ட்டிலிருந்து எனக்குக் கிடைத்த பதில், சிறப்பானதாகவும் இருந்தது.

 

seller

 

அந்த நேரத்தில், ஆன்லைனில் விற்பனை எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி எனக்குத் தெரியாமல் இருந்தது. டேஷ்போர்டில் எப்படி வேலை செய்வது? எனது தயாரிப்புகளை நான் ஆன்லைனில் விற்பனை செய்வது மற்றும் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி? இவை எல்லாவற்றையும் ஃப்ளிப்கார்ட் எனக்கு மிக எளிதாகப் புரியவைத்தது, எனவே ஃப்ளிப்கார்ட் உடனும், அவர்கள் வாயிலாக என் வாடிக்கையாளர்களுடனும் எனது உறவை தொடர்வதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான ஊக்குவிப்பு எனக்குக் கிடைத்தது.

என்னைப் போன்ற விற்பனையாளர்களுக்கு ஃப்ளிப்கார்ட்டின் டேஷ்போர்டு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அது உங்களுக்காக பெரும்பாலான வேலைகளைச் செய்து கொடுக்கிறது. அது கிட்டத்தட்ட நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஃப்ளிப்கார்ட்டில் அமர்ந்துகொண்டு என் வணிகத்தைக் கண்காணிப்பது போல இருக்கிறது. என்னுடைய பொருள்களில் எவை விற்பனையாகின்றன மற்றும் எவை விற்பனையாவதில்லை என்பதை அது குறித்து வைக்கிறது, மற்றும் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த என்னென்ன குறைபாடுகளை நான் நிவர்த்தி செய்யவேண்டும் என்பதையும் அது சுட்டிக் காட்டுகிறது. அது என் வணிகத்தை ஆய்வு செய்ய உதவுகிறது மற்றும் அதைக் கொண்டு எந்தப் பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.

seller

மேலும், எனது வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது எதைத் தேடுகிறார்கள் என்பதை நான் சரியாகப் புரிந்துகொள்ளவும் டேஷ்போர்டு எனக்கு உதவுகிறது. முன்னதாக, நான் 20 குர்தீஸ்களைத் தயார் செய்தால் kurtis, “அவை விற்பனை ஆகுமா?” என்பது என்னுடைய முதலாவது கேள்வியாக இருந்தது. அங்கு நிச்சயமற்ற தன்மை நிலவியது. ஆனால் இப்போது, நான் ஒரு புதிய டிசைனை விற்க விரும்பினால், சாதாரணமாக அதில் 50 பீஸ்கள் தயாரிக்கிறேன். kurtis அவை விற்பனையாகிவிடும் என்று எனக்குத் தெரியும்.

பண்டிகைகளின் போது என் விற்பனை அதிகரிக்கிறது. சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையின் போது இவ்வாறு நடந்தது, ஒரு குறிப்பிட்ட தயாரிப்புக்கு கிட்டத்தட்ட இரு மடங்கு ஆர்டர்கள் கிடைத்ததை நான் கண்டேன். உண்மையா சொல்லப் போன, ஒரு திருவிழா நெருங்கிக் கொண்டிருக்கும்போது, விற்பனை 200% அதிகரிக்கும் என நான் எதிர்பார்க்கிறேன். இது எனக்கு, ஆடைகளுக்கான புதிய டிசைன்களை வடிவமைப்பதற்கு உத்வேகம் கொடுத்துள்ளது, மற்றும் ஆன்லைன் மனப்போக்குகள் பற்றி ஆய்வு செய்வதற்கு நான் எனது நேரத்தை அர்ப்பணித்துள்ளேன்.

நான் ஒரு ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக இருப்பதால் என் குடும்பம் என் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது! என்னுடைய வளர்ச்சியையும் சுதந்திரத்தையும் பார்த்த பிறகு, அவர்கள் எனக்கு அதிக ஆதரவளித்து வருகின்றனர். முன்னதாக, எனது குடும்பமும் என் கணவரும் என் முயற்சிக்கு எதிராக இருந்தார்கள். என்னுடைய கவனம் முழுவதும் புதிதாகப் பிறந்த என் குழந்தையின் மீது தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். இன்று பார்த்தால், பேக்கேஜ்களை எனக்காக என் கணவர் கொண்டு போய்க் கொடுக்கிறார் மற்றும் அவரால் இயன்ற அனைத்து வழிகளிலும் எனக்கு ஆதரவளிக்க முயற்சிக்கிறார். எனது திறமையை நான் உணர்ந்துகொள்ள எனக்கு உதவுவதில் அவர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்.

நீங்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் கூட, ஃப்ளிப்கார்ட் நாடு முழுவதும் பார்க்க முடிகின்ற ஒரு சாளரமாக இருக்கிறது.


மேலும் வாசிக்க: விற்பனையாளர் வெற்றிக் கதைகள்: அன்றாட இந்தியர்களின் வெற்றி

Enjoy shopping on Flipkart