#செல்ஃப்மேட் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்களான ரித்தேஷ் மற்றும் அவரது மனைவி தொழில்முனைபவர்களாகவும் வணிகக் கூட்டாளியாகவும் அவர்களின் நிதிசார் வளர்ச்சியில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முன்வந்தனர். ஆஃப்லைனில் விற்பதனால், அவர்கள் கற்பனை செய்தது போல் வணிகத்தில் வளர முடியவில்லை. விரைவில், இ-வணிகத்தின் நன்மைகளையும் எளிமையையும் தெரிந்துகொண்டு செயல்படுத்திய பின்னர் அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை! த பிக் பில்லியன் நாட்கள் 2020 சமயத்தில் இந்த டைனமிக் இரட்டையர்கள் தங்கள் விற்பனை உச்சத்தைக் கண்டனர்! அவர்களின் எழுச்சியூட்டும் கதையைப் படித்து, ஃப்ளிப்கார்ட்டில் அவர்களின் உண்மையான தேடுதலை அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்தார்கள் என்பதைக் கண்டறியவும்.
இந்தக் கதையில்: இந்த கணவன் – மனைவி ஜோடி வணிகக் கூட்டாளர்களாக மாறி அவர்களுக்கான வாய்ப்பை #செல்ஃப்மேட் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்களாக எவ்வாறு கண்டறிந்தனர்.
என் பெயர்ரித்தேஷ் குமார் ஷர்மா. நான் ஒரு இராணுவ பின்னணியில் இருந்து வருகிறேன் – என் தந்தை ஆயுதப்படைகளில் இருந்தார் – குடும்பத்தில் நானே முதலில் ஒரு தொழிலைத் தொடங்கினேன். நான் எல்ஆர் ரீடெய்ல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன், ஃப்ளிப்கார்ட்டில் எங்கள் பிராண்டின் பெயர் மோக்ஷி. நான் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக 2016 ஜனவரியிலிருந்து இருக்கிறேன்.
நான் ஒரு தொழிலதிபராக ஆவதற்கு முன்பாக, நான் சேவைப் பிரிவில் வேலை செய்துகொண்டிந்தேன், ஆனால் எனது சொந்தத் தொழிலைத் தொடங்க விரும்புகிறேன் என்று விரைவில் உணர்ந்தேன். எனது வணிகக் கூட்டாளர் யார் என்று எனக்கு முன்பே தெரியும் – இப்போது எல்.ஆர். சில்லறை விற்பனையின் உரிமையாளரான என் மனைவி.
நானும் என் மனைவியும் ஆஃப்லைனில் எங்கள் வணிகத்தைத் தொடங்கினோம், அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். நாங்கள் ஆன்லைனில் விற்பனை செய்தால் அதிகமான வாடிக்கையாளர்களை அடையலாம் மற்றும் எங்கள் வணிகத்தை வளர்க்க முடியும் என்பதை நாங்கள் உணர்ந்தவுடன், நாங்கள் #செல்ஃப்மேட் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்களாக பதிவு செய்தோம். நாங்கள் விற்க வேண்டிய வாடிக்கையாளர் தளத்தைப் பார்த்தபோது நாங்கள் சரியான தேர்வு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரிந்தது. நாங்கள் பயணத்தைத் தொடங்கியதும், ஒரு நாளைக்கு 10-20 ஆர்டர்களைப் பெறத் தொடங்கினோம், விரைவில் எண்கள் உயரத் தொடங்கின. நாங்கள் 35-40 ஆர்டர்களைப் பெறத் தொடங்கினோம், இன்று ஒரு நாளில் குறைந்தது 100 ஆர்டர்களைக் காண்கிறோம்.
இதுவரையிலான அனுபவம் நன்றாக இருந்தது. எங்கள் மொத்த கவனமும் முயற்சிகளும் இப்போது ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் ஆர்டர்களின் மீது தான் உள்ளது. அதிலிருந்து நாங்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. ஃப்ளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்ததிலிருந்து எங்கள் வணிகத்தில் ஏற்பட்ட தாக்கம் பெரியது!
இந்த ஆண்டின் த பிக் பில்லியன் நாட்கள் விற்பனைக்கு முன்பாக, – எங்கள் வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள், பட்டியலிட வேண்டிய தயாரிப்புகள், பேக்கேஜிங் பொருள் கொள்முதல், கிடங்கிற்கான இட மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் தேவையை நிவர்த்தி செய்தல் ஆகிய அனைத்தையும் நாங்கள் விரிவாகத் திட்டமிட்டோம். கிடங்கிற்கான இடம், லாஜிஸ்டிக்ஸ் பற்றிய ஃப்ளிப்கார்ட்டின் தொடர்பு மற்றும் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் குழுவின் அனைத்து ஆதரவும் எங்களுக்கு மிகவும் பயனளித்தது.
இந்த முயற்சிகள் காரணமாக, நாங்கள் எங்கள் இலக்கை அடைவதில் வெற்றி பெற்றோம். இந்த ஆண்டின் விற்பனையின்போது ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 70,000 தயாரிப்புகளை நாங்கள் விற்பனை செய்தோம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-19 தொற்றின் ஊரடங்கு காரணமாக அனைத்தும் மூடப்பட்டன. எங்கள் வணிகத்தில் மீண்டும் நிலைநாட்ட முடியாதென்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அதன் பின்னர் ஃப்ளிப்கார்ட்டிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது, மீண்டும் ஆன்லைனில் நாங்கள் விற்பனையைத் தொடங்கலம் என்று எங்களிடம் கூறினர். தூய்மையாக்கம் (சானிடைசேஷன்) என்று வருகையில் அனைத்து அரசாங்க உத்தரவுகளையும் நாங்கள் பின்பற்றினோம், எங்கள் ஊழியர்களை நாங்கள் அக்கறையுடன் கவனித்துக்கொண்டோம்.
வணிகத்தை மீண்டும் நடத்துவதற்கான ஒவ்வொரு கட்டத்திலும் எங்கள் ஊழியர்கள் ஒத்துழைத்தனர். ஃப்ளிப்கார்ட்டில் எங்கள் கணக்கு மேலாளரும் தொடர்ந்து தொடர்பில் இருந்ததுடன், அவரது அறிவுறுத்தல்களின்படி எங்கள் வணிக செயல்பாட்டை மாற்றியமைத்தோம்.
எங்களைப் போன்ற விற்பனையாளர்களுக்கு ஃப்ளிப்கார்ட் மிகவும் ஆதரவளிக்கிறது. தொடங்குவது மிகவும் எளிதானது மற்றும் அவர்களின் தொடர்பு வெளிப்படையானது. தயாரிப்புகள் பட்டியலிடப்படுவதற்கு முன்பு அனைத்தும் விவாதிக்கப்பட்டு, எங்கள் கணக்கு மேலாளரின் வழிமுறைகளைப் பின்பற்றுவதனால் வெற்றியை உறுதி செய்வதை நான் கவனித்தேன்!
பல்லவி சுதாகரின் கூடுதல் உள்ளீடுகளுடன் ஜிஷ்னு முரளியிடம் சொன்ன படி.
இந்த கதை பிடித்திருந்ததா? இந்தியா முழுவதும் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்களிடமிருந்து அதிகமான கதைகளைக் கேட்க இந்த வேடிக்கையான, ஊடாடும் வரைபடத்தின் வழியாக செல்லவும்!