1. Home
  2. Tamil
  3. “ஃப்ளிப்கார்ட் சமர்த் சுய சார்பு இந்தியாவின் நோக்கத்திற்கு உந்து சக்தியாக இருக்கும்”- ரஜ்னீஷ் குமாருடன் கேள்வி பதில்

“ஃப்ளிப்கார்ட் சமர்த் சுய சார்பு இந்தியாவின் நோக்கத்திற்கு உந்து சக்தியாக இருக்கும்”- ரஜ்னீஷ் குமாருடன் கேள்வி பதில்

0
Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் மூத்த துணைத்தலைவரும், தலைமை நிறுவன விவகார அதிகாரியுமான ரஜ்னீஷ் குமார், இந்த திட்டம் தன்னுடைய முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும்போது ஃப்ளிப்கார்ட் சமர்த்தின் பின்னால் உள்ள நோக்கத்தை மீண்டும் வலியுறுத்துகிறார்

“ஃப்ளிப்கார்ட் சமர்த் சுய சார்பு இந்தியாவின் நோக்கத்திற்கு உந்து சக்தியாக இருக்கும்”- ரஜ்னீஷ் குமாருடன் கேள்வி பதில்
0

ஜூலை 31, 2019 அன்று, குறைவாகவே கவனிக்கப்பட்ட இந்தியாவின் கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் குறுநிறுவனங்களை ஃப்ளிப்கார்ட் சமர்த் திட்டமானது மின் வர்த்தகத்தின் ஒரு பகுதியாக உயர்த்துவதற்கும் தழுவுவதற்குமான தொலைநோக்குடன் தொடங்கப்பட்டது. அதன் முக்கியமான பயணத்தில் முதலாம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும், இந்த திட்டம் நாடு முழுவதும் 6,00,000 –க்கும் மேற்பட்ட வாழ்வாதாரங்களை ஆதரிக்கிறது மற்றும் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு மாநில அரசாங்கங்கள் மற்றும் வாழ்வாதார பணிகள் மூலம் இணைத்துள்ளது.

ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் மூத்த துணைத்தலைவரும், கார்ப்பரேட் விவகாரத் தலைவருமானரஜ்னீஷ் குமார்ஃப்ளிப்கார்ட் சமர்த் இதுவரை கடந்த வந்த பாதை பற்றியும் இனி வரும் காலங்களில் கடக்கவிருக்கும் பாதையைப் பற்றியும் விளக்குகிறார்.

கேள்வி மற்றும் பதில் பிரிவின் சாரம்


ஃப்ளிப்கார்ட் சமர்த்தின் முதலாம் ஆண்டு விழாவில் அது ஏற்படுத்திய தாக்கத்தை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்?

கடந்த ஆண்டு ஃப்ளிப்கார்ட் சமர்த்திற்கு தீர்க்கமான மற்றும் நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. மக்களால் குறைவாகவே கவனிக்கப்படும் பாரம்பரியமான சமூகங்கள் பான்-இந்தியா சந்தையைஅணுகவும், 200 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் கொண்ட ஃப்ளிப்கார்ட்டின் மின் வர்த்தக மார்கெட் பிளேஸ் இயங்குதளத்தில் ஈடுபடுவும் இவர்களுக்கு உதவும் நோக்கில்,கடந்த ஜூலை மாதம் இந்த திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இந்தத் திட்டமானது மூலதனத்திற்கான அணுகல், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு ஏற்ப போதிய பயிற்சி இன்மை போன்ற தடைகளை அடிக்கடி எதிர்கொள்கின்ற பெண்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர், மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர், கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. மின் வர்த்தகத்தில் இவர்கள் நுழைவதை எளிதாக்குவதும் தொழில்நுட்பத்தின் பலன்களை பயன்படுத்திக்கொள்ள இவர்களை மேம்படுத்துவதும், இத்தகைய தளங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப்பொருட்களை ஆன்லைனில் கொண்டு வருவதுமே எங்களது நோக்கமாக இருந்தது. கடந்த பன்னிரண்டு மாதங்களில், பல மாநில அரசுகள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் பல அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் நோக்கத்தை உணர்ந்து செயல்பட்டு, அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான முன்னேற்ற பாதையில் நாங்கள் இருக்கிறோம் என்பதைப் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஃப்ளிப்கார்ட்டின் இந்த முன்முயற்சியை நாட்டில் குறைவாகவே கவனிக்கப்படும் தொழில்முனைவோர் எப்படி எடுத்துக் கொண்டனர்?

ஒரு உள்நாட்டு நிறுவனமாக, சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும், குறிப்பாக எம்.எஸ்.எம்.ஈ.க்களை மேம்படுத்துவதற்கும் உயர்த்துவதற்கும் மின்வணிகத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிய ஃப்ளிப்கார்ட்டில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்த சிறு வணிகங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும், அவற்றின் பங்களிப்பு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. விவசாயத்திற்குப்பிறகு இந்தியாவில் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் துறை மட்டுமல்லாமல், சுமார் 120 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதில் இந்த துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஃப்ளிப்கார்ட் சமர்த் நாட்டின் கிராமப்புற மற்றும் குறைவாக கவனிக்கப்படும் சமுதாயத்திற்குள் திறன்களை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது, இன்று பேன்-இந்தியா சந்தைக்கான அணுகலை வழங்கி இந்தியா முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கைவினைஞர்கள், நெசவாளர்கள், கைவினைப்பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் குறுநிறுவனங்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. –

ஃப்ளிப்கார்ட் சமர்த் அரசாங்கங்களிடமிருந்தும் கொள்கை வகுப்பாளர்களிடமிருந்தும் எவ்விதமான ஆதரவைப் பெற்றுள்ளது?

இந்த திட்டத்தை ஆதரிப்பதற்கு முன்வந்து, மாற்றத்தை உண்டாக்குவதில் மகத்தான ஆதரவு புரிந்த மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மூலம் நாங்கள் பெரிதும் கௌரவிக்கப்படுகிறோம். சமர்த்தின் முதலாம் ஆண்டில், நாங்கள் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம். ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் கர்நாடகா அரசாங்கங்கள் எங்கள் சமர்த் முன்முயற்சியின்கீழ் ஃப்ளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளன. கூடுதலாக, இந்த மாநிலங்களிலிருந்து உள்ளூர் கைவினைஞர்களையும் கைவினைப்பொருட்களையும் ஃப்ளிப்கார்ட்டின் சந்தையில் கொண்டு வருவதற்காகஉத்தரபிரதேச காதி கிராம தொழில் வாரியம் (யு.பி.கே.வி.ஐ.பி)மற்றும்குஜராத் மாநில கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்.ஆகியவற்றுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம். மேலும், இந்தியாவில் 22 மாநிலங்களில் சமர்த் திட்டத்தை அமைப்பதற்காகடி.ஏ.வொய்-என்.யூ.எல்.எம்-இன் கீழ் அரசுப்பணிகளுடன் ஒத்துழைக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். அரசாங்கத்தின் உள்ளடக்கிய வளர்ச்சி பார்வைக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நாட்டில் பகிரப்பட்ட மதிப்பை தொடர்ந்து உருவாக்குகிறோம்.

ஃப்ளிப்கார்ட் சமர்த்தின் வருங்கால முன்னோக்கிய பாதை எப்படி இருக்கும்?

கோவிட்-19, தொற்றுநோய் காரணமாக நம்மீது சுமத்தப்பட்ட இந்த அசாதாரண சூழ்நிலைகளில், புத்தம்புதிய வழிகளில் நாங்கள் உருவாவதற்கு கற்றுக்கொண்டோம், நாங்கள் எதிர்நோக்குகையில், இந்த திட்டம் இட்டுச் செல்லும் உள்ளடக்கிய வளர்ச்சியின் அளவை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு சமர்த்திற்கு கிடைத்த பாராட்டுக்கள் மூலம் உற்சாகம் அடைந்த நாங்கள் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்காக எங்கள் கூட்டாளர்களுக்கு கூடுதல் பலன்களை வழங்குகிறோம். ஃப்ளிப்கார்ட் சமர்த் சமூகங்கள் அதிகாரம் பெறுவதற்கு இது வழிவகுக்கும், மேலும் இந்த சமூகங்களை முறையான பொருளாதாரத்திற்குள் கொண்டு வரும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் இலக்குக்கு உந்து சக்தியாக அமைகிறது.


ஃப்ளிப்கார்ட் தலைவர்களுடான கேள்வி பதில்கள் குறித்து மேலும் படியுங்கள்

Enjoy shopping on Flipkart

About the Author

Team Flipkart Stories

இந்த கட்டுரையை பிளிப்கார்ட் கதைகள் ஆசிரியர் குழு எழுதி திருத்தியது. எங்களுடன் தொடர்பு கொள்ள, தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });