நீண்ட காலமாக, தவால் படேல் அவரது தயாரிப்புகளான - குஜராத்தில் உள்ள திறமையான உள்ளூர் கைவினைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்களை உள்ளுர் சந்தையில் விற்று வந்தார். ஃப்ளிப்கார்டில் விற்பதன் நன்மைகள் குறித்து ஆன்லைனில் வீடியோக்களைப் பார்த்தபோது, அவருக்கு அற்புதமான யோசனை தோன்றியது! தன்னைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெண் கைவினைக் கலைஞர்களை மேம்படுத்த அவர் விரும்பினார், மேலும் #செல்ஃப்மேட் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக அதைச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடித்தார்! நவ்ரங் ஹாண்டிக்ராஃப்ட்ஸ் மற்றும் அதன் கைவினைக் கலைஞர்கள் தங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட வாடிக்கையாளர்களை அடைவதற்கு இ-வணிகம் எவ்வாறு உதவுகிறது என்பதைப் படியுங்கள்.
என் பெயர் தவால் படேல். நான் நவ்ரங் ஹாண்டிக்ராஃப்ட்ஸ் நடத்தி வருகிறேன், மேலும் நான் ஃப்ளிப்கார்ட்டுடன் #செல்ஃப்மேட் சமர்த் விற்பனையாளராக இருக்கிறேன். நாங்கள் குஜராத்தில் ராஜ்கோட் மற்றும் விர்பூரில் வசிக்கிறோம். ட்ரை ஃப்ரூட் பாக்ஸ்கள், லெட்டர் பாக்ஸ், மர ஸ்டூல்கள், மவுத் ஃப்ரெஷ்னர்களுக்கான பாக்ஸ்கள், மர ஸ்டாண்டுகள் மற்றும் பிற பரிசு பொருட்கள் போன்ற கைவினைப்பொருட்களை நாங்கள் விற்பனை செய்கிறோம். இந்த பொருட்களைத் தவிர, துண்டுகளையும் விற்கிறோம்.
ஃப்ளிப்கார்ட் சமர்த் விற்பனையாளர் ஆவதற்கு முன்பாக நான், இந்த தயாரிப்புகளை உள்ளூர் சந்தையில் விற்று வந்தேன். பின்னர் பல ஃப்ளிப்கார்ட் வீடியோக்களை யூடியூபில் பார்க்கத் தொடங்கினேன், அப்போது ஆன்லைனில் விற்பனை செய்வதன் பலன்களை அறிந்துகொண்டேன். எனவே 2018 ஆம் ஆண்டு, நான் ஃப்ளிப்கார்ட்டுடன் கூட்டாளரானேன், இன்று வரை எனது பயணம் அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் எங்களுக்கு சுமார் 20-25 ஆர்டர்கள் தினமும் கிடைத்துக்கொண்டிருந்தன, ஆனால் இப்போது, ஒரு நாளைக்கு 80 ஆர்டர்கள் வரை எண்ணிக்கை சென்றுவிட்டது. நாங்கள் இதுவரை கேள்விப்படாத நகரங்களில் இருந்தெல்லாம் ஆர்டர்கள் வருகின்றன! எங்கள் தயாரிப்புகள் நாடு முழுவதும் புதிய வாடிக்கையாளர்களை சென்றடைகின்றன, இது என்னைப் போன்ற விற்பனையாளர்களுக்கு இ-வணிகம் வழங்கவேண்டிய மிகச் சிறந்த விஷயம் என்று நான் கருதுகிறேன். நான் இப்போது ஒரு வெள்ளி விற்பனையாளர், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
இ-வணிகத்தின் உதவியுடன், எங்களைச் சுற்றியுள்ள கைவினைக் கலைஞர் சமூகங்களுக்கும் எனது நிறுவனம் சில நன்மைகளைச் செய்ய முடிந்தது. பெண் கைவினைக் கலைஞர்கள் அழகான கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் ஒரு சில கிராமங்கள் எங்கள் பகுதியில் உள்ளன. எனக்குக் கீழ் சுமார் 35-40 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பதினைந்து பேர் எனது பட்டறையில் வேலை செய்கிறார்கள், மற்றவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்.
ஊழியர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து, டிசைன் பேட்டர்ன்களை விளக்குகிறோம், மேலும் தரத்தினை மனதில் கொண்டு ஒவ்வொரு தயாரிப்பையும் அடுக்கி வைக்கும் ஒரு அசெம்பிளிங் யூனிட்டும் எங்களிடம் உள்ளது. அவர்களுக்கு நிதிசார் வாய்ப்புக்களை வழங்கி அவர்களது கைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்து அந்த சமூகத்தை மேம்படுத்த விரும்பினேன். அவர்களிடம் நுணுக்கமான கலை வடிவமைக்கும் திறன் உள்ளது, அதனால் அவர்களை மேம்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டேன். ஃப்ளிப்கார்ட்டில் சமர்த் விற்பனையாளராக நான் முயன்று, வெற்றியும் பெற்றேன்!
ஃப்ளிப்கார்ட் மிகவும் வசதியான தளமாகும். ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக் குழுவின் உதவியால் உள்நுழைவது எளிதாக இருந்தது, நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து விற்பனை செய்ய விரும்புகிறோம். தளத்தில் உள்ள ரேட்டிங் சிஸ்டம் நம் வணிகத்தை அதற்கேற்ப நடத்தி நம்மை மேம்படுத்த உதவுகிறது. எனது ரேட்டிங் 5க்கு 4.5 ஆகும். அப்படியென்றால் வாடிக்கையாளர்கள் எங்களது தயாரிப்புகளை மிகவும் விரும்புகின்றனர்! இந்த தயாரிப்புகளுக்கு பெரும் தேவை உள்ளது மற்றும் வரும் ஆண்டுகளில் இந்தத் துறை தொடர்ந்து வளர்ச்சியடையும். எங்களிடம் தரமான தயாரிப்புகள் உள்ளன, இது நிச்சயமாக ஃப்ளிப்கார்ட்டின் உதவியுடன் இந்தியா முழுவதும் உள்ள அனைவரையும் சென்றடையும்!
எங்கள் தயாரிப்புகளை வாங்கி இந்திய கைவினைப்பொருளை ஊக்குவித்த எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.
பல்லவி சுதாகரின் கூடுதல் உள்ளீடுகளுடன் ஜிஷ்னு முரளியிடம் சொன்ன படி.