சுருக்கமாக நீங்கள் தெரிந்துகொள்வதற்காக, பஜாஜ் அலையன்ஸ் தனியார் 2- சக்கர 4-சக்கர வாகனங்களுக்கு டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. இதற்கு ஃப்ளிப்கார்ட் செயலியில் சில கிளிக்குகளிலேயே பதிவு செய்யலாம், மேலும் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மோட்டார் ஆன்-த-ஸ்பாட், என்.சி.பி பரிமாற்றம், உடனடி உதவி மற்றும் பல அம்சங்களுடன் இழப்பீடு கோருவதும் அதே அளவு எளிமையானதாகும். 24x7 சாலையோர உதவியுடன், உங்கள் மதிப்புமிக்க வாகனம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து சாலையில் நீங்கள் பயணிக்கலாம்.
சாலையிலும் சாலைக்கு வெளியேயும் சிறந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் அவசியமானவை, ஆனால்உங்களை நிதியளவில் சரியாக வைத்திருக்கும் சிறந்த பயணத் தோழன் சில கிளிக்குகள் தொலைவிலேயே உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?ஃப்ளிப்கார்ட்டும் இந்தியாவின் முன்னணி தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் அலையன்சும் உங்கள் தனியார் 2-சக்கர 4 சக்கர வாகனங்களுக்கு டிஜிட்டல் மோட்டார் காப்பீடு வழங்க ஒன்றிணைந்துள்ளன.
விருதுபெற்ற அம்சங்களான மோட்டார் ஆன்-த-ஸ்பாட் (ஓ.டி.எஸ்) மற்றும் பிற கூடுதல் நன்மைகளான 24/7 நேரடி உதவி, பூஜ்ஜிய தேய்மான கவர், பணம் செலுத்தத் தேவையற்ற கேரேஜ்கள், நோ கிளைம் போனஸ் பரிமாற்றம் போன்றவற்றுடன் முக்கியமாக இந்த ஊரடங்கில் மன அமைதி பெறுங்கள்.
உங்கள் வாகனத்திற்கு அதியூட்டமளிக்கத் தயாரா? இந்தக் கார் அல்லது இரு-சக்கர வாகனக் காப்பீட்டுடன் உங்கள் பயணம் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்பதன் சுருக்கம் இதோ.
நான்கு சக்கர வாகனக் காப்பீடு: இது ஓட்டுநர் இருக்கையில் உங்களை வைத்திருக்கிறது!
சிறந்த மதிப்பு மிக்க மோட்டார் காப்பீட்டுத் திட்டங்களால் உங்கள் வாகனத்தை பாதுகாப்புச் செய்யுங்கள். மோட்டார் ஓ.டி.எஸ், 24/7 சாலையோர உதவி, பணம் செலுத்தத் தேவையற்ற கேரேஜ்கள் போன்ற அம்சங்களுடன், நீங்கள் உங்கள் வாகனத்தை எந்தவித இடையூறும் இன்றி புத்தம்புதியதாய் வைத்திருக்கலாம். நீங்கள் பேசிக், ஸ்டாண்டர்ட் மற்றும்காம்பிரிகென்சிவ் திட்டங்களிலிருந்து தேர்வு செய்யலாம்.
உங்களுக்குக் கிடைப்பவை எவை
- 24/7 இந்தியா முழுமைக்குமான உடனடி நேரடி உதவி:காற்றிறங்கிய டயர் சரி செய்வதில், பேட்டரியை ஜம்ப்ஸ்டார்ட் செய்வதில், உங்கள் வாகனத்தை டோ செய்வதில் உதவி பெறுங்கள், விபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் சட்ட ஆலோசனையையும் பெறுவீர்கள்.
- 4,000+ பணம் செலுத்தத் தேவையற்ற கேரேஜ்கள்:உங்கள் விருப்ப கேரேஜில் உயர்தரச் சேவையைப் பெறும் அதே நேரத்தில் பணம்செலுத்தத் தேவையற்ற வழியில் உரிமைகோரல்கள் மூலம் செலுத்துங்கள்.
- இணையத்தில் எளிதாக வாங்குதல்/புதுப்பித்தல்:உங்கள் விருப்ப மோட்டார் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குங்கள் மேலும் அதே அளவு எளிமையுடன் புதுப்பியுங்கள்.
- மோட்டார் ஆன்-த-ஸ்பாட்:விபத்திற்குப் பின் உங்கள் வாகனத்தைச் சுய மதிப்பீடு செய்து,20 நிமிடங்களில் ரூ 30,000 வரை பெறுங்கள்!!
- பூஜ்ஜிய மதிப்பிறக்கம் :மதிப்பிறக்கச் செலவுகளைக் குறைத்து சிறந்த உரிமைகோரல் இழப்பீட்டைப் பெறுங்கள்.
கிடைக்கும் பேக்கேஜ்கள்
நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பினால், நீங்கள் தேர்வு செய்வதற்காக 3 பேக்கேஜ்கள் உள்ளன:
- டிரைவ் அஷ்யூர் எகனாமி:தேய்மானக் காப்பு, எஞ்சின் பாதுகாப்பு மற்றும் 24×7 நேரடி உதவியை உள்ளடக்கியது
- டிரைவ் அஷ்யூர் எகனாமி பிளஸ்:மதிப்பிறக்கக் காப்பு, எஞ்சின் பாதுகாப்பு, 24×7 நேரடி உதவி, பூட்டுகள் மற்றும் சாவிகள் மாற்றுதல், தனிநபர் பேக்கேஜை உள்ளடக்கியது
- டிரைவ் அஷ்யூர் பிரைம்: 24×7 நேரடி உடனடி உதவி, பூட்டுகள் மற்றும் சாவிகள் மாற்றுதலை உள்ளடக்கியது
சேர்க்கைகளும் விதிவிலக்குகளும்
நீங்கள் இயற்கையான மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அழிவுகளான நெருப்பு, வெடிப்பு, தானாக எரிதல், திருட்டு, வேலை நிறுத்தங்கள், தீவிரவாத நடவடிக்கைகள், தீங்கிழைக்கும் செயல்களுக்காக காப்பீடு பெறுவீர்கள். நீங்கள் ரூ. 15 இலட்சம் கவருள்ள தனிப்பட்ட விபத்துக் காப்பீட்டையும் மூன்றாம் நபர் பொறுப்புக் காப்பீட்டையும் வாங்கலாம். வழக்கமான தேய்மானப் பழுதுகள், போதையில் ஓட்டும்போது மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டும்போது, மேலும் போரின் போது ஓட்டும்போது ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு பெற மாட்டீர்கள்.
இரு-சக்கர வாகனக் காப்பீடு: டூல்கிட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டியது
விரிவான இரு சக்கர வாகனக் காப்பீட்டை வாங்கி சேதங்கள் அல்லது திருட்டினால் ஏற்படும் இழப்புகளிலிருந்து நிதியளவில் பாதுகாப்புப் பெறுங்கள், மேலும் மூன்றாம் நபர் பொறுப்பிற்காகவும் கவரேஜ் பெறுங்கள். நீங்கள் 1-, 2- , 3-ஆண்டுத் திட்டங்களைப் பெறுகிறீர்கள், இதில் 3 ஆண்டு மோட்டார் காப்பீடு உரிமைகோரலுக்கு பிறகான என்.சி.பி நன்மைக்கும் மூன்றாம்-நபர் பிரீமியத்தில் 0% உயர்விற்கும் உறுதியளிக்கிறது.
உங்களுக்குக் கிடைப்பவை
- மோட்டார் ஓ.டி.எஸ்:டிஜிட்டலில்உங்கள் உரிமைகோரல் சில நிமிடங்களில் செலுத்தப்பட, விபத்திற்குப் பிறகு சுய மதிப்பீடு நடத்துங்கள்.
- எரிபொருள் உதவி: 24/7 நேரடி உதவிச் சேவை மூலம் ஓட்டிக் கொண்டிருக்கும்போது எரிபொருள் தீர்ந்துபோனால் உதவி பெறுங்கள்.
- இணையத்தில் எளிதில் வாங்கலாம்:உங்கள் இரு சக்கர வாகனக் காப்பீட்டை இணையத்தில் சில கிளிக்குகளில் வாங்கலாம் புதுப்பிக்கலாம்.
- நோ கிளைம் போனஸ் (என்.சி.பி) பரிமாற்றம்:நீங்கள் பஜாஜ் அலையன்சிற்கு மாறும்போது முந்தைய காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து உங்கள் என்.சி.பியில் 50% மாற்றிக் கொள்ளலாம்!
- உடனடி உதவி:எந்நேரத்திலும் உரிமைகோரல் உதவி, எஸ்.எம்.எஸ் வழி உரிமைகோரல் நிலை புதுப்பிப்புகளைப் பெறுங்கள், மேலும் வாட்ஸ்அப், சாட்பாட், அல்லது கட்டணமில்லா எண் 1800 209 5858 மூலம் உதவி பெறுங்கள்.
- விரைவான உரிமை கோரல் தீர்வு:பணமில்லா செலுத்தல் முறை மற்றும் பரந்த பணமில்லா கேரேஜ்கள் உடன் விரைவான திரும்புதல் நேரத்தின் பயனைப் பெறுங்கள்.
- தடங்கலற்ற புதுப்பிப்பு:இணையத்தில் உங்கள் பாலிசியைப் புதுப்பிப்பதன் மூலம் தடையற்ற மோட்டார் காப்பீட்டைப் பெறுங்கள். நேரடி ஆய்வு எதுவும் தேவையில்லை.
கிடைக்கும் பேக்கேஜ்கள்
உங்கள் பைக்கிற்கு கூடுதல் அடுக்குப் பாதுகாப்பை வழங்க விரும்புகிறீர்களா? நீங்கள் தேர்வு செய்வதற்கான 3 பேக்கேஜ்கள் இதோ.
- டிரைவ் அஷ்யூர் பேசிக்:மதிப்பிறக்கக் காப்பை உள்ளடக்கியது
- டிரைவ் அஷ்யூர் சில்வர்:மதிப்பிறக்கக் காப்பு, எஞ்சின் பாதுகாப்பு மற்றும் நுகர்வுச் செலவுகளை உள்ளடக்கியது
- 24/7 நேரடி உடனடி உதவி அவசர காலங்களில் நேரடி உடனடி உதவி வழங்குவதற்கானது
சேர்க்கைகளும் விதிவிலக்குகளும்
நீங்கள் இயற்கை அழிவுகளான தீ, வெடிப்பு, தானாக எரிதல், வெள்ளம், புயல், நிலச்சரிவு மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிகளான திருட்டு, கலவரம், வெளிப்புற வழிகளில் ஏற்படும் விபத்து மற்றும் போக்குவரத்தின் போதான சேதங்கள் ஆகியவற்றினால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களிலிருந்து காப்பீடு பெறுவீர்கள். கூடுதலாக நீங்கள் ரூ 15 இலட்சத்திற்கான தனிநபர் விபத்துக் கவர் மற்றும் மூன்றாம் தரப்பு பொறுப்பு கவரினை வாங்கலாம்.
இதில் காப்பீடு செய்யப்படாதவை பின்வருமாறு – பைக்கின் வழக்கமான தேய்மான பழுதுகள், பொறுப்பின்றி ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டுதல் அல்லது போதை/மதுவின் பிடியில் ஓட்டுவதால் ஏற்படும் இயந்திர/மின்னியல் சீர்குலைவுகள், சேதங்கள், போரினால் ஏற்படும் சேதங்கள், துணைக் கருவிகள் திருட்டு, டயர்கள் போன்ற நுகர்வுப் பொருட்களின் தேய்மான பழுதுகள் ஆகியவை.
2சக்கர, 4 சக்கர வாகன மோட்டார் காப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
- உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமலேயே உங்கள் வாகனத்திற்கான சரியான மோட்டார் காப்பீட்டைச் சேர்க்க முடியும்!:
- ஃப்ளிப்கார்ட் செயலியின் சமீபத்திய புதுப்பிப்பு உள்ளதா என உறுதிப்படுத்துங்கள்
- மேல் இட ஓரத்தில் உள்ள ஹேம்பர்கர் ஐகானைக் கிளிக் செய்யுங்கள்
- ’இன்சூரன்ஸ்’ என்பதற்குச் சென்று கிளிக் செய்யுங்கள்
- உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ‘2 சக்கரம்’ அல்லது ‘4 சக்கரம்’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்
- தொடங்க உங்கள் பெயரை உள்ளிட்டு ‘மதிப்பீட்டைப் பெறுக’ என்பதைத் தட்டுங்கள்
உங்கள் வாகனத்தைப் பாதுகாப்பதற்கு சில கிளிக்குகளேபோதுமென்றால், ஏன் இன்னும் காத்திருக்க வேண்டும்? பதிவுசெய்யுங்கள்ஃப்ளிப்கார்ட் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் வழங்கும் மோட்டார் வாகனக் காப்பீட்டிற்கு அதுவும் இன்றே!
தயவு செய்து கவனிக்கவும், இந்த அம்சம் ஃப்ளிப்கார்ட் மொபைல்-தளம், ஃப்ளிப்கார்ட் ஆண்ட்ராய்டு & ஐஓஸ் செயலியில் மட்டுமே கிடைக்கிறது.
இதையும் படிக்க: ஃப்ளிப்கார்ட்டில் இன்சூரன்ஸ்: காப்பீட்டுத் துறையில் முதன்முறையாக ஆயுள்+கோவிட்-19 மருத்துவமனை சேர்க்கைக்கான காப்பீட்டை ஒரே தயாரிப்பாகப் பெறுங்கள்