1. Home
  2. Tamil
  3. கர்நாடகாவில் உள்ள ஒரு சிற்றூரில், இம்பாக்ட் சோர்சிங் மூலம் ஃப்ளிப்கார்ட் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது

கர்நாடகாவில் உள்ள ஒரு சிற்றூரில், இம்பாக்ட் சோர்சிங் மூலம் ஃப்ளிப்கார்ட் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது

0
Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

கர்நாடகாவின் பாகேபள்ளி என்ற பகுதியில் வாழும் மக்களுக்கு, நல்ல வேலைவாய்ப்பு என்பது தங்கள் அன்பிற்குரியவர்களை பிரிந்து பெரும்பாலும் அருகிலுள்ள பெரிய நகரத்திற்குச் சென்றால் மட்டுமே கிடைக்கும் என்ற அளவில் இருந்தது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஃப்ளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளர் கூட்டாளரான ரூரல்ஷோர்ஸ் இணைந்து மேற்கொண்ட இம்பாக்ட் சோர்சிங் முயற்சிகள் அந்த யதார்த்தத்தை மாற்ற முயன்றன. இந்த திட்டம் இந்த சிற்றூரின் சிறந்த வாழ்வாதாரத்திற்கு வித்திட்டது மட்டுமல்லாமல், கிராமப்புற இந்தியாவின் வளமான, வெளியே தெரியாத பொக்கிஷமாக திகழும் திறமைசாலிகள் மூலம் மின் வர்த்தகம் எவ்வாறு பயனடைகிறது என்பதைப் படியுங்கள்.

கர்நாடகாவில் உள்ள ஒரு சிற்றூரில், இம்பாக்ட் சோர்சிங் மூலம் ஃப்ளிப்கார்ட் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது
0

இந்தகதையில்: ஃப்ளிப்கார்ட் மற்றும் விற்பனையாளர் கூட்டாளரான ரூரல்ஷோர்ஸ் சிற்றூரில் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள், இந்த சிற்றூரில் வாழும் மக்கள் நீண்டகாலமாக சிறந்த வாழ்வாதாரத்திற்காக நகரத்திற்கு பயணிக்கவேண்டியிருந்தது.


தினமும் காலையில், யாஸ்மீன்>N மற்றும் அவரது சகோதரி கௌசியா இருவரும் தங்கள் வீட்டிலிருந்து கர்நாடகாவின் பாகேபள்ளியில் உள்ள தங்கள் பணியிடத்திற்கு ஒன்றாக பயணம் செய்கிறார்கள்.

கர்நாடகாவின் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் சிற்றூரான பாகேபள்ளி சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது, இது ஆந்திராவிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் பெங்களூருக்கு வடக்கே 100 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல சிற்றூர்கள் மற்றும் கிராமங்களைப் போலவே, இந்த சிற்றூரில் வாழும் பலரும் சிறந்த வாழ்க்கை முறை மற்றும் வருமானத்தைத் தேடி நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். பாகேபள்ளியின் சராசரி கல்வியறிவு விகிதம் 63% ஆகும், இது தேசிய சராசரியை விட அதிகமானதாகும், ஆனால் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியுள்ள இந்த பகுதியில், வேலை வாய்ப்புகள் உருவாவது மிகவும் கடினமானதாகும்.

அதனால்தான், வீட்டிலிருந்து சில நிமிடங்களில் சென்று விடக்கூடிய ரூரல்ஷோர்ஸ் மையத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு பற்றி யாஸ்மீனிடம் ஒரு நண்பர் சொன்னபோது, அவர் பரவசமடைந்தார்.

RuralShores
யாஸ்மீன் என் மற்றும் அவரது சகோதரி இருவரும் கர்நாடகாவின் பாகேபள்ளியில் உள்ள ரூரல்ஷோர்ஸ் மையத்தில் வேலை செய்கிறார்கள்

“எனது சொந்த ஊரிலேயே இதுபோன்ற ஒரு வேலையைப் பெற முடிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அந்த பி.காம் பட்டதாரி புன்னகையுடன் கூறுகிறார். அவருக்குத் தெரிந்த பல இளைஞர்கள் வீட்டைப் பிரிந்து வேலைக்காக வேறு இடத்தில் குடிபெயர்ந்துள்ளனர் அல்லது அருகிலுள்ள பள்ளிகள் அல்லது பண்ணைகளில் கிடைக்கின்ற வேலைகளைச் செய்கின்றனர். யாஸ்மீன் ரூரல்ஷோர்ஸில் சேர்ந்த சில மாதங்களுக்குப்பிறகு, முதல் வருடம் பி.யூ.சி முடித்த அவரது சகோதரியும் இதில் சேர்ந்துள்ளார்.


பாட்காஸ்ட்டை கேளுங்கள்


ரூரல்ஷோர்ஸ் – ஒரு பெரிய கனவுடன் ஒரு சிறிய சிற்றூரின் யோசனை

ரூரல்ஷோர்ஸ் என்பது ஒரு சமூக நிறுவனமாகும், இது வறிய கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான தீர்வுகளை வழங்குகிறது, மேலும் இம்பாக்ட் சோர்சிங் மூலம் நிலையான வேலைவாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

RuralShores
ரூரல்ஷோர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான கர்னல் ரவி குப்தாவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதன் முதல் வாடிக்கையாளர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்

“சிற்றூர்களில் உள்ள மக்கள் குடும்பத்தை பிரிந்து வேலைக்காக நகரங்களுக்கு குடிபெயர்வதை மாற்றும் வகையில், நாம் சிற்றூர்களில் வேலைவாய்ப்பை உருவாக்கினால் என்ன – என்கிற சிந்தனையின் பலனாகத்தான் ரூரல்ஷோர்ஸ் உண்மையில் உதயமானது,” என்று 2009 ஆம் ஆண்டில் அமைப்பின் முதல் வாடிக்கையாளராக இருந்த, தற்போது அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும்கர்னல் ரவி குப்தா விவரிக்கிறார். இந்தஅமைப்பு 8 மாநிலங்களில் உள்ள 13 மையங்களில் 2,500 ஊழியர்களைக் கொண்டுள்ளது, மேலும் அதன் பணியாளர்களில் 50% பெண்களாவர்.

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஃப்ளிப்கார்ட் ஆனது கிராமப்புற தொழிலாளர்களின் திறன்களை அதன் பட்டியலிடும் செயல்பாட்டில் பயன்படுத்துவதற்காக ரூரல்ஷோர்ஸுடன் ஒரு கூட்டணியை உருவாக்கியது.

வேலைக்கு செல்வதற்கு ஏன் வீட்டை பிரிய வேண்டும்?

“இந்த விஷயத்தை மனதில் வைத்து, நீங்கள் ஏதேனும் நகரத்தை கவனித்து பார்த்தால், அந்த நகரத்தில் பணிபுரியும் 40-45 % பேர்கள் இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு சிற்றூர்களிலிருந்து வந்தவர்களாக இருப்பர். வேலை வாய்ப்பு இருக்கும் பகுதிக்கு அவர்கள் வருவதற்குப் பதிலாக, நாம் ஏன் அவர்கள் இருக்கும் இடத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடாது என்று நினைத்தோம்?” என்று விற்பனையாளர் உறவை இறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிற, ஃப்ளிப்கார்ட்டில் கொள்முதல் செய்வதற்கான மூத்த இயக்குனர்பிரபு பால ஸ்ரீனிவாசன்பிரதிபலிக்கிறார்.

RuralShores
ஃப்ளிப்கார்ட்டில் கொள்முதல் செய்வதன் மூத்த இயக்குனராக இருக்கும் பிரபு பால ஸ்ரீனிவாசன், ரூரல்ஷோர்ஸை விற்பனையாளர் கூட்டாளராக இறுதி செய்வதற்குமுன்பு இந்தியாவில் பல இடங்களை சோதனையிட உதவினார்.

சிற்றூர்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்க ஃப்ளிப்கார்ட் ஏற்கனவே சில செயல்பாடுகளை அவுட்சோர்ஸ் செய்திருந்தாலும், பட்டியல் குழு இந்த வகையில் முயற்சிப்பது இதுவே முதல் முறை ஆகும். பயிற்சியளிப்பது சுலபமாக இருக்கும் செயல்பாட்டின் அடிப்படையில் ஒரு முக்கிய செயல்பாட்டை அவர்கள் கண்டறிந்தனர், மேலும் அதற்கு ரூரல்ஷோர்ஸை ஒரு கூட்டாளராக ஆக்கிக்கொள்ள முடிவு செய்தனர்.

“நாங்கள் பல சிற்றூர்களை சோதனையிட்டோம், பாகேபள்ளியில் இதனை அமைப்பதன் மூலம் பயிற்சிக்கு எளிதாக இருக்கும் என்பதால் அங்கே இதனை தொடங்கினோம்,” என்று அவர் மேலும் கூறுகிறார். இந்த சிற்றூர் தேசிய நெடுஞ்சாலை-44 பாதை மூலம் பெங்களூரு-ஹைதராபாத் பகுதியுடன் நன்கு இணைப்பில் உள்ளது.

கிராமப்புற இந்தியாவில் இருந்து எம்.எல்-க்கு அதிகாரம் அளித்தல்

ஃப்ளிப்கார்ட் உடைய பட்டியல் வரிசை திட்டத்தில் பணிபுரியும் 50 ஊழியர்களில் தீபக்வி மின் வர்த்தகம் பற்றி கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சிஅடைகிறார். ஃப்ளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்ட தயாரிப்புகளுக்கு தரவுக் குறிச்சொற்களை சேர்ப்பதே இவரது வேலையின் ஒரு பகுதியாகும்.

RuralShores
ஒவ்வொரு நாளும் மின் வர்த்தகம் பற்றி புதிய அம்சங்களைக் கற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார், தீபக் வி

பாகேபள்ளியில் பிறந்து வளர்ந்த தீபக், வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற சிறிது காலம் பெங்களூருக்கு சென்றார். தனது அன்புக்குரியவர்களுடன் இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில் அவர் மகிழ்ச்சியடைகிறார். “நாங்கள் மொத்தம் எட்டு பேர் கொண்ட குடும்பம்,” என்று அவர் கூறுகிறார். “என் பெற்றோர், என் சகோதரர் மற்றும் என் மைத்துனி, அவர்களின் மகள், என் மனைவி மற்றும் நான் ஆகியோர் இருக்கிறோம்.” அவரது தந்தை சிறு தொழில் செய்து வருகிறார், அவரது தாயார் ஆசிரியராக பணிபுரிகிறார்.

“எங்கள் பட்டியலிடும் செயல்முறையை இயக்கும் இயந்திர கற்றல்மாதிரிக்கான தரவுக்குறிச்சொல் துறையில் ரூரல்ஷோர்ஸ் குழு எங்களுடன் இணைந்து செயல்படுகிறது,” என்று ஃப்ளிப்கார்ட்டின் பட்டியலிடும் பிரிவின் மூத்த மேலாளர், பிஸ்வநாத் கர்விளக்குகிறார். ஒரு தயாரிப்பின் வெவ்வேறு அம்சங்களை அடையாளம் காண இயந்திரத்தை பயிற்றுவிப்பதற்காக அவர்கள் முதலில் தரவை உள்ளிடுகின்றனர். இயந்திரம் இதைச்செய்ய கற்றுக் கொண்டவுடன், அவர்கள் மீண்டும் சென்று அந்த குறிச்சொற்களை சரிபார்க்கிறார்கள்.”

RuralShores
மையத்தில் செய்யப்படும் பணிகள் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளை எளிதாகக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுக்கிறது ஃப்ளிப்கார்ட்டின் மூத்த பட்டியல் மேலாளர் பிஸ்வநாத் கர் கூறுகிறார்

ஒவ்வொரு நாளும், நாடு முழுவதிலுமிருந்து விற்பனையாளர்கள் ஃப்ளிப்கார்ட் செயலியில் சில ஆயிரம் தயாரிப்புகளைச் சேர்க்கிறார்கள். இந்த விற்பனையாளர்களில் பலர் தொழில்நுட்ப ஆர்வலர்களாக இருக்கின்ற நிலையில், அவர்களில் பலருக்கு அவர்களின் தயாரிப்புகளை விவரிக்க பல்வேறு குறிச்சொற்கள் மற்றும் அம்சங்களைச் சேர்க்க வழி இல்லை. தயாரிப்பு படங்கள் ஃப்ளிப்கார்ட்டின் பட்டியல்குழுவுடன் பகிரப்படுகின்றன, இந்த வேலை ரூரல்ஷோர்ஸ் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

“எங்கள் மாதிரி எங்கள் தரவைப் போலவே சிறந்தது ஆகும். ஆனால் தரவு நுகருவதற்கு தயாராக ஏற்றதாக உள்ளதா? இதற்காக, குறிச்சொற்களை நாங்கள் நியமித்து, படங்களை அடிப்படையாக வைத்து கைமுறையாக இதனை சரிப்பார்க்கிறோம். இது வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகளை எளிதில் கண்டறிய உதவுகிறது” என்று பிஸ்வநாத் கூறுகிறார்.

பெருமளவிலான தரவுகள் உள்ளிடப்படுவதால், அம்சங்களை எவ்வாறு கணிப்பது என்பதை இயந்திரம் தொடர்ந்து கற்று வருகிறது.

இறுதியில், ஒரு வாடிக்கையாளர், உதாரணமாக முழுகை வைத்த சிவப்பு நிற டீ ஷர்ட்டை ஃப்ளிப்கார்ட்டில் தேடும்போது, இந்த தொடர்ச்சியான செயல்முறையே அந்த தேடலுக்கு பொருத்தமான முடிவுகளை பட்டியலிட்டுக் காட்டுகிறது, இது வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் தயாரிப்புகளை எளிதாக கண்டுபிடித்து அதனை ஆர்டர் செய்வதற்கு வழிவகுக்கிறது.

RuralShores
“நாட்டின் சிறந்த வணிகங்களில் ஒன்றாகத்திகழும் ஃப்ளிப்கார்ட்டுக்காக பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன் ” என்கிறார் நவீன்குமார்

“இதற்கு முன்பு, மின் வர்த்தகம் வலைத் தளங்களைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது, ஆனால் இங்கு வேலை செய்வதன் மூலம் நான் அது குறித்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆர்டரிங் கண்ணோட்டத்தில் நீங்கள் அதைப் பார்க்கும்போது மின் வர்த்தகம் எளிதானது போல தோன்றுகிறது, ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு பணியாற்ற வேண்டியிருக்கிறது என்பதை நான் இதில் பணியாற்றுவதன் மூலம் இப்போது புரிந்துகொண்டேன் ”என்று குறிப்பிடுகிறார் நவீன்குமார், இவர் ஃப்ளிப்கார்ட் திட்டத்தில் பணிபுரியும் மற்றொரு ஊழியர் ஆவார்.

வெளியே தெரியாத பொக்கிஷமாகத் திகழும் திறமைசாலிகள்

இருப்பினும், இது ஒருதலைப்பட்ச நன்மை அல்ல. ஃப்ளிப்கார்ட்டின் தயாரிப்பு செயல்பாடுகளின் மூத்த மேலாளர்அங்கித் ஜெயின்கூறுவது போல்: “கிராமப்புறங்களில் வேலைகளை உருவாக்குவதன் மூலம் பெருநிறுவன உலகம் பெரிதும் பயனடையக்கூடும். அவுட்சோர்ஸ் செய்யப்படும் திறமையான பணியாளர்களுக்கு ஒரு பெரிய தேவை உள்ளது, இது தொலைதூரத்தில் இருக்கும் பகுதிகளுக்கு பலனளிக்கும் விதமாகவும், நிலையான வேலை வாய்ப்புகளை உருவாகும் விதமாகவும் அமையும்.”

RuralShores
அங்கித் ஜெயினைப் பொறுத்தவரை, இது போன்ற திட்டங்கள் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கும், கார்ப்பரேட் துறைக்கும் பயனளிக்கும் விதமாக அமைகின்றன

கடந்த சில ஆண்டுகளில், இயந்திரத்திற்கு பயிற்றுவித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தீர்வுகளின் பயன்பாடு அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது, இதனால் இவை தொழில் துறையில் இன்னும் முக்கிய புதிர் வார்த்தைகளாகவே உள்ளன. “இருப்பினும், பகிரப்படாதது என்னவென்றால், இந்த தீர்வுகள் கிட்டத்தட்ட 80% தரவு மற்றும் 20% வழிமுறை ஆகும்” என்று விளக்குகிறார் ஃப்ளிப்கார்ட்டில் துணைத் தலைவராக இருக்கும் கிருஷ்ணேந்து மஜூம்தார். “அதிகமான நிறுவனங்கள் இந்தத்துறையில் இறங்கும்போது, இந்தத் திறனுக்கான தேவை மிகப் பெரிதாக மாறிவிடுகிறது.”

ஃப்ளிப்கார்ட்டில் பட்டியலிடும் பிரிவில் மூத்த இயக்குனராக இருக்கும் கெளரவ் சர்மாவை பொறுத்தவரை, இந்த திட்டத்தைப்பற்றிய அவரது ஆரம்ப பயம், தொழிலாளர்கள் அவரது முன்னால் நிரூபித்து காட்டிய பணியின் தரமும், தன்னம்பிக்கையும் புரிந்து கொண்டபோது, அவருக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும்,மிகுந்த ஈடுப்பாட்டையும் ஏற்படுத்தியது. “ஏ.ஐ. மற்றும் எம்.எல். இன் கருத்தை தொழிலாளர்கள் எப்படி இவ்வளவு ஆர்வமாக புரிந்துகொண்டார்கள் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம். இந்தியாவில் இருக்கும் சிற்றூர்களில் பயன்படுத்தப்படாத பொக்கிஷங்களாகத் திகழும் பல திறமைசாலிகள் இருப்பதாக நான் நம்புகிறேன், இதை ஆராய நாங்கள் உழைக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்துகிறார்.

rural shores
ஏ.ஐ. மற்றும்எம்.எல். போன்ற மேம்பட்ட துறையில்கூட, ஊழியர்கள் தரம் மற்றும் தன்னம்பிக்கையை நிரூபித்து காட்டி வருகிறார்கள் என்று ஃப்ளிப்கார்ட் பட்டியல் துறையின் மூத்த இயக்குனர் கெளரவ் சர்மா கூறுகிறார்

ரூரல்ஷோர்ஸின் ஊழியர்களுக்கு, நாட்டின் முன்னணி பிராண்டுகளுடன் இணைந்திருப்பதில் பெருமளவில் திருப்தி உள்ளது, பெரிய நகரங்களுக்குச் சென்றால் மட்டுமே இத்தகைய வாய்ப்பை பெற முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

“நாட்டின் சிறந்த வணிகங்களில் ஒன்றாகத் திகழும் ஃப்ளிப்கார்ட்டுக்காக பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன் “என்று கூறும் நவீன் தனது 12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்த பிறகு ஓரிரு வேலைகளை செய்திருக்கிறார். ஃப்ளிப்கார்ட் அணியுடனான அவரது இந்த ஒப்பந்தம் அவருடைய மூன்றாவதுவேலை ஆகும்.

ஆரம்பத்தில் வேறுபட்ட வாழ்க்கை லட்சியங்களுடன் இருந்த நவீன் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஒரு விவசாயியாக மாறத் தயங்கினார். “நான் விவசாயம் செய்ய விரும்பவில்லை, ஆனால் எனது குடும்பத்துடனும் நான் பிறந்த இடத்துடனும் நெருக்கமாக இருக்க விரும்பினேன்,” என்று அவர் வலியுறுத்துகிறார். அவர் சிறப்பாக சம்பாதித்து தனது இளைய சகோதரிகள் உட்பட தனது குடும்பத்தை சிறப்பாக ஆதரிக்க விரும்பினார், மேலும் இந்த சுயவிவரத்தில் தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் நிம்மதி அடைந்தார்.

இம்பாக்ட் சோர்சிங் மூலம்நிலையான வேலை வாய்ப்பை உருவாக்குதல்

“மக்கள் நகரங்களுக்கு குடி பெயரும்போது, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை பெருமளவு உணவு, தங்குமிடம், போக்குவரத்து மற்றும் வாழ்க்கைமுறைக்கு செலவழிக்கிறார்கள்” என்று கர்னல் குப்தா விளக்குகிறார். “இது எந்தவிதமான சேமிப்பையும் ஏற்படுத்தாது, மேலும் அவர்கள் குடும்பத்தை பிரிந்தும் வாழ வேண்டியிருக்கும்,” என்று அவர் மேலும் கூறுகிறார், “யாரிடமாவது தாங்கள் கிராமத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா என்று கேளுங்கள் – அவர்கள் நிச்சயம் ஆம் என்று தான் சொல்வார்கள்.”

ஆய்வுகள்இம்பாக்ட் சோர்சிங் – என்பது அதிக திறமையான ஆனால் பின்தங்கிய (பொருளாதார, புவியியல், சமூக அல்லது வேறுவிதமான அடிப்படையில்) பணியாளர்கள் இருக்கும் இடத்திற்கு வேலை வாய்ப்புகளை எடுத்துச் செல்லும் நடைமுறை ஆகும் – குறைவான தேய்வு விகிதங்கள், அதிக உந்துதல் நிலைகள், பொருளாதார தன்னிறைவு மற்றும் தொழிலாளியின் குடும்பம் மற்றும் சமூகத்தில் நேர்மறையான விளைவு உள்ளிட்ட பல நன்மைகளைக் கொண்டுள்ளதாகஆய்வுகள்காட்டுகின்றன.

RuralShores
ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை ஆதரிக்க ஓட்டுநராகப் பணிபுரியும் தனது தந்தைக்கு ரேஷ்மா கே எம் உதவுகிறார்

ரேஷ்மாகே.எம், பி.காம் பட்டதாரியான இவர் இதற்கு முன் தனது வீட்டை விட்டு பிரிந்து வேறு இடத்திற்கு சென்று டேட்டா என்ட்ரி பணியைச் செய்து வந்தார், தற்போது ரூரல்ஷோர்ஸ் மற்றும் ஃப்ளிப்கார்ட் அணியில் சேர்ந்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிறது. ஆனால் அதற்குள் அவருக்கு இந்த வேலை மிகவும் பிடித்துவிட்டதாக கூறுகிறார். “இது ஒரு சிறந்த வேலை, நான் நல்ல சம்பளத்தைப் பெறுகிறேன், நேரங்களும் மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றன,” என்று கூறும் அவர் தான் உயர் பதவியை அடைய விரும்புவதாகவும், சொந்தக்காலில் நிற்க விரும்புவதாகவும் கூறுகிறார்

அவர் தனது சம்பளத்தில், தனியார் பஸ் ஓட்டும் தனது தந்தை, தனது தாய், இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரரை ஆதரிப்பதற்கு உதவியாக இருக்கிறார்.

RuralShores
பணியின் தரம் ஃப்ளிப்கார்ட் மற்றும் ரூரல்ஷோர்ஸ் இடையே ஆழமான கூட்டாண்மைக்கு வழி வகுத்தது என்கிறார் ஃப்ளிப்கார்ட்டின் ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகளின் இணை இயக்குநர் மீர் வாகிதுல்லா

“இந்த அணியில் பணிபுரியும் மக்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் ஆவர்” என்று விளக்குகிறார் ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் சேவைகளின் இணை இயக்குநர் மீர் வாகிதுல்லா, மேலும் திட்டத்தின் சாத்தியக்கூறு மற்றும் கிடைக்கக்கூடிய தரத்தினைப் பற்றி பங்குதாரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த குழு நீண்ட நேரம் செலவிட வேண்டியிருந்தது. “நாங்கள் ஐந்து நபர்களுடன் தொடங்கினோம், இப்போது ஏழுமாதங்களில், ஃப்ளிப்கார்ட் மற்றும் மின்ட்ரா முழுவதும் 50 நபர்கள் உள்ளனர்,” என்று கூறி, மகிழ்ச்சியில் பிரகாசிக்கும் முகத்துடன் வெற்றியை உறுதிப்படுத்துகிறார்.

 

RuralShores
“அதிகமான நிறுவனங்கள் இந்தத்துறையில் இறங்கும்போது, இந்த திறனுக்கான தேவை மிகுந்த அளவில் அதிகரிக்கிறது,” என்கிறார் ஃப்ளிப்கார்ட்டின் துணைத்தலைவர் கிருஷ்ணேந்து மஜூம்தார்

“ஊழியர்களின் உற்சாகம் மற்றும் அவர்களின் உத்வேக அளவு உண்மையில் நம்மை பிரமிக்க வைத்தது. தங்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் உண்மையில் விரும்புகிறார்கள். நாங்கள் எங்கள் ஈடுபாட்டினை மேலும் அதிகரித்து, எதிர்காலத்தில் இன்னும் பலவற்றை அதிகரிப்போம் என்று நம்புகிறோம்,” என்று கிருஷ்ணேந்து கூறுகிறார்.

இருப்பினும், ஊழியர்களுக்கு, வெற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் கிடைப்பதாக அளவிடப்படுகிறது.

ரேஷ்மா தனது சகோதரிகள் மற்றும் சகோதரருக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு உதவ தனது சம்பாதிப்பின் மூலம் தந்தையின் வருமானத்திற்கு உதவியாக இருக்கிறார்.

புதிதாக திருமணமான தீபக்கால் தனது பெரிய குடும்பத்துடன் ஒன்றாக இருக்க வீட்டிற்கு திரும்பி வர முடிந்தது, அவர் வேலையை முடித்துவிட்டு ஒவ்வொரு நாளும் அவரால் வீட்டிற்கு செல்லமுடியும் என்பதை எண்ணி மன நிறைவுடன் பணியாற்றுகிறார்.

விவசாயத்திலிருந்து விலகிச் செல்வதில் உறுதியாக இருந்த நவீனால், தான் பிறந்த இடத்தில் இருந்தே, அவர் எப்போதும் கனவு கண்ட ஒரு வேலையைக் கண்டுபிடிக்க முடிந்தது.

யாஸ்மீன் மற்றும் கௌசியா ஆகியோர் நிதி சுதந்திரத்திற்கான தங்களுடைய பாதையில் பயணிக்கிறார்கள், தங்கள் தாய் எப்போதுமே எதிர்பார்த்ததைப் போலவே, தங்கள் சொந்த கால்களில் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.


அட்டைப்படம்:சனா கான்


மேலும் படிக்க: உள்நாட்டு பொருட்களுக்கு குரல் கொடுங்கள்: ஃப்ளிப்கார்ட்டின் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மளிகை ஷாப்பிங் அனுபவத்தை எப்படி மாற்றுகிறது

Enjoy shopping on Flipkart

About the Author

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });