இப்போது மிகச் சுலபமாக உங்கள் ஆர்டரை டிராக்கிங் செய்யலாம்: இதோ ஒரு சுருக்கமான வழிகாட்டி!

Read this article in हिन्दी | English | ಕನ್ನಡ | বাংলা | ગુજરાતી | मराठी

என்ன, உங்கள் ஃப்ளிப்கார்ட் ஆர்டரை பிரித்துப் பார்க்கத் துடிக்கிறீர்களா? ஆப் உள்ளே புதுப்பிப்புகளும் புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், இப்போது மிகச் சுலபமாக உங்கள் ஆர்டரை டிராக்கிங் செய்யலாம். உங்கள் வீட்டுக் கதவை எப்போது தட்டப் போகிறார்களோ என்ற பதற்றம் தேவையில்லை. இதோ தேவையான அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Flipkart order

ப்ளிப்கார்ட் சலுகையின் போது அற்புதமான வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வது அற்புதமாக இருக்கும் தானே? ஆமாம், உங்கள் ஃப்ளிப்கார்ட் ஆர்டர் டெலிவரியை பற்றித் தான் சொல்கிறோம்!

இப்போது உங்கள் மொபைல் ஆப் மூலமாகவே உங்கள் ஃப்ளிப்கார்ட் ஆர்டரை டிராக்கிங் செய்யலாம், அதற்கு ஃப்ளிப்கார்ட்டின் புதிய மற்றும் புதுப்பித்த My Orders டேப் எளிய வழியை தருகிறது. உங்கள் ஆர்டர் எப்போது கொடுக்கப்பட்டது என்பது முதற்கொண்டு, அது இப்போது எந்த பேக்கிங் மற்றும் ஷிப்பிங் கட்டத்தில் இருக்கிறது என்பது வரை அனைத்தையும் நீங்கள் அறியலாம். சதா கதவிலேயே கண்ணாக இருக்கத் தேவையில்லை அல்லது தொலைபேசி மணிக்குக் காத்திருக்கத் தேவையில்லை!

இதோ அது இயங்கும் விதத்தை அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பொருளை ஆர்டர் செய்யுங்கள்

ஃப்ளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனை, பல்வேறு மின்னல் விற்பனைகள், டீல் ஆஃப் தி டே, அல்லது ஆண்டுமுழுக்க உள்ள சலுகைகள் என எதுவாக இருந்தாலும், உங்கள் அனைத்து ஆர்டர்களும் சேவ் செய்யப்படும், பிறகு ஃப்ளிப்கார்ட் ஆப், எம்-சைட் அல்லது டெக்ஸ்டாப் சைட்டில் நீங்கள் லாக்இன் செய்ததும் அது பட்டியலாகக் காட்டப்படும். நெட் பேங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டு, ஃப்ளிப்கார்ட் பே லெட்டர், CoD அல்லது ஃபோன்பே வாலட் என எந்த பணம் செலுத்தும் வழியை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், ஆப் உங்களை நேரடியாக டிராக்கிங் பக்கத்துக்கு கொண்டுபோய் விடும்.


Go to My Orders

உங்கள் ஃப்ளிப்கார்ட் ஆர்டரை பின்னர் டிராக்கிங் செய்ய விரும்பினால், அப்போது உங்கள் ஃப்ளிப்கார்ட் ஆப், எம்-சைட் அல்லது டெஸ்க்டாப் சைட்டில் My Orders -க்கு சென்றாலே போதும்.


Select Your Order

My Orders -ஐ நீங்கள் தட்டியதும் உங்கள் ஆர்டர்கள் அனைத்தும் அங்கே பட்டியலாக வரும். ஸ்க்ரோல் செய்து, நீங்கள் ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த அனைத்துப் பிடித்தமான பொருட்களையும் பார்க்கலாம். பொருளின் பெயர், படம், அதற்குக் கீழ் டெலிவரி நேரம் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

Flipkart order
ஃப்ளிப்கார்ட் டெஸ்க்டாப் சைட்டில் ‘Track’ மீது கிளிக் செய்தால் அது உங்கள் ஆர்டர் டிராக்கிங் விவரங்களை காண்பிக்கும்

ஆர்டர் டிராக்கிங் விவரங்களை பார்க்க

ஃப்ளிப்கார்ட் மொபைல் ஆப் பயன்படுத்தினால், அதில் ஒரு செங்குத்தான கோடு இருக்கும், அது உங்கள் ஆர்டரின் டெலிவரியை படிப்படியாகக் காண்பிக்கும். அதற்கு நான்கு படிகள் உள்ளன – ஆர்டர்டு & அப்ரூவ்டு, பேக்டு, ஷிப்டு மற்றும் டெலிவரி. உங்கள் ஆர்டர் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து அந்தக் கோடு பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். தற்போதைய கட்டம் ஒரு வட்டமிட்டு எடுப்பாகக் காட்டப்படும். உதாரணமாக, உங்கள் ஆர்டர் ஷிப்பிங் செய்யப்பட்டிருந்தால், உங்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு வட்டமான குறி மூன்றாவது படியான ஷிப்பிங்கை காட்டும்.

Flipkart order
ஒவ்வொரு ஆர்டர் எண்ணுக்கும் முழு டிராக்கிங் விவரங்களை உங்கள் ஃப்ளிப்கார்ட் மொபைல் ஆப் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்

Flipkart order


மேலும் விவரங்களுக்கு

மேலும் விவரங்கள் வேண்டுமா? இந்த நான்கு படிகளில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யுங்கள், உங்கள் ஆர்டரின் விவரங்களும், உத்தேச டெலிவரி தேதியும் சேர்த்து காண்பிக்கப்படும். உதாரணமாக, உங்கள் ஆர்டர் ஷிப்பிங் செய்யப்பட்டிருந்தால், அது எங்கே ஷிப்பிங் செய்யப்பட்டது, பெறப்பட்டது மற்றும் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பவை உட்பட சம்பந்தப்பட்ட தேதிகளுடன் காண்பிக்கப்படும். மெயின் மெனுவுக்கு திரும்பிச்செல்ல பேக் பட்டனை தட்டுங்கள்.

Flipkart order
ஃப்ளிப்கார்ட் டெஸ்க்டாப் சைட்டில், ஆர்டர் விவரங்கள் மற்றும் உத்தேச டெலிவரி தேதியையும் நீங்கள் காணலாம்

உங்கள் ஆர்டர் குறித்து வேறு நடவடிக்கைகள் எடுக்க

டிராக்கிங்குக்கு அப்பால் உங்கள் ஆர்டர் குறித்து வேறு ஏதாவது செய்ய வேண்டுமா? டெலிவரி வரிசைக்குக் கீழ், இரண்டு பெரிய டேப்கள் இருக்கும்: ‘Cancel’ மற்றும் ‘Need Help?’. உங்கள் ஆர்டரை கேன்சல் செய்வதற்கு Cancel மீது கிளிக் செய்து, அதற்கான காரணத்தை குறிப்பிட்டால் போதும், இதைச் சுலபமாகச் செய்துமுடிக்க அந்தப் பக்கத்தில் உள்ள ஆப்ஷன்களை தேர்ந்தெடுங்கள்.


உங்கள் ஆர்டர் குறித்து வேறு உதவி வேண்டுமா?

‘Need Help?’ -ஐ கிளிக் செய்யுங்கள், இன்னொரு ஸ்கிரீன் தோன்றும், அங்கே உங்கள் தொடர்பாக கேன்சலேஷன் ரிட்டன், தள்ளுபடி அல்லது பணம் செலுத்துதல் என ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். எனது ஆர்டருக்கு கேஷ் பேக் பொருந்துமா? அல்லது எனது ஆர்டர் தாமதமாகிறதே? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட கேள்வி மீது கிளிக் செய்தால் உடனடி பதில் கிடைக்கும்.


மேலும் உதவிக்கு, ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் சப்போர்டை தொடர்புகொள்ளுங்கள்

உங்களுக்கு மேலும் உதவி வேண்டுமென்றால், அந்தப் பக்கத்தின் அடியில் உள்ள Contact Us பட்டனை கிளிக் செய்யுங்கள். இதன் மூலம், உங்கள் கேள்வி அல்லது பிரச்சனைக்கு தீர்வுகாண ஃப்ளிப்கார்ட் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது அவர்களுடன் சாட் செய்யலாம்.


ஃப்ளிப்கார்ட் ஆர்டர் அப்டேட்களுக்கு சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

உங்கள் ஆர்டரை மேலும் சுலபமாகவும் சௌகரியமாகவும் டிராக்கிங் செய்வதற்கு, இப்போது மெயின் பேஜில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உங்கள் ஆர்டர் குறித்து தானியங்கி முறையில் நடப்புகளைப் பெற, சிறிய நீல நிற பெல் ஐகனில் Subscribe to Updates மீது கிளிக் செய்யுங்கள். இதன் மூலம், உங்கள் ஆப்பை திறக்காமலே இதுபற்றி தகவல்களைப் பெறலாம்.

Flipkart order
உங்கள் ஃப்ளிப்கார்ட் ஆப், உங்கள் ஆர்டர் விவரங்களை படிப்படியாக புதுப்பிக்கிறது
Flipkart order
ஃப்ளிப்கார்ட் டெஸ்க்டாப் சைட்டில் உங்கள் அகவுன்ட்டில் லாக்இன் செய்தால் உங்கள் ஆர்டரின் முன்னேற்றத்தைப் பார்க்கலாம்.

உங்கள் ஃப்ளிப்கார்ட் ஆர்டர் விவரங்களை பகிர்ந்துகொள்ள

இதேபோல், Share order details மீது கிளிக் செய்து, உங்கள் ஆர்டரை டிராக்கிங் செய்தல், கேன்சல் செய்தல், எக்ஸ்சேஞ்சு அல்லது மாற்றுதல் போன்ற, உங்களுக்குக் கிடைக்கும் வசதிகளை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ளலாம். உதாரணமாக, இன்னொரு நகரில் வசிக்கும் உங்கள் தங்கைக்காக அல்லது பிறந்த நாள் அன்பளிப்பை அனுப்ப விரும்பும் ஒரு நண்பருக்காக நீங்கள் கொடுத்த ஆர்டர்களுக்கு இது உதவும். அவர்களுடைய தொலைபேசி எண் மற்றும் பெயரை குறிப்பிட்டு, Share மீது கிளிக் செய்தால், அவர்களுக்கு டிராக்கிங் வசதி கிடைக்கும்!

Flipkart order
நீங்கள் வீட்டில் இல்லையா? உங்கள் ஆர்டர் விவரங்களை உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பருடன் பகிர்ந்துகொண்டால் டெலிவரியை தவறவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்

உங்கள் ஃப்ளிப்கார்ட் பிளஸ் ரிவார்ட்ஸை பார்க்க

டெலிவரி தொடர்பாக பெயர், முகவரி உட்பட உங்கள் ஆர்டரின் ஷிப்பிங் விவரங்களை பார்க்க, மெயின் பேஜில் ஸ்க்ரோல் டவுன் செய்யவும். அதன் கீழ், உங்கள் ஆர்டர் சார்ந்து ஃப்ளிப்கார்ட் காயின்ஸ் போன்ற ரிவார்ட்ஸ்களை பார்க்கலாம், இது ஃப்ளிப்கார்ட் பிளஸ்ஸின் சாதகங்களை உங்களுக்கு வழங்கும். இவை, ரிட்டன் காலத்தின் முடிவில் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.


பில்லிங் விவரங்களை பார்க்க

இதற்குக் கீழ், உங்கள் ஆர்டர் தொடர்பான பட்டியல் விலை, விற்பனை விலை, ஷிப்பிங் கட்டணம், மொத்த தொகை, சலுகைகள் மற்றும் பணம் செலுத்தும் முறை ஆகியவற்றை பார்க்க முடியும். ஆஃபர் டேப்பை கவனமாக பார்க்கவும், அதில் தான் சலுகைகள் காண்பிக்கப்படும், அந்த சலுகைகளை நீங்கள் அடுத்த முறை பயன்படுத்தலாம். இதை எப்படிச் செய்வது என்பதை அறிய, Know More பட்டனை கிளிக் செய்தால் போதும்!

இப்போது உங்கள் ஆர்டரை டிராக்கிங் செய்ய, புதிய சுலபமான வழி வந்துவிட்டதால், மேலும் குதூகலமாக ஃப்ளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்யலாம்! அப்போ, இன்று உங்கள் விஷ்லிஸ்டில் என்னென்ன இருக்கிறது?

Enjoy shopping on Flipkart