1. Home
  2. Tamil
  3. ‘எங்கள் விநியோக சங்கிலி ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், வாடிக்கையாளருக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையையும் நாங்கள் பாராட்டுகிறோம்’.

‘எங்கள் விநியோக சங்கிலி ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், வாடிக்கையாளருக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையையும் நாங்கள் பாராட்டுகிறோம்’.

0
Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

கோவிட் -19 நோய்த்தொற்று பிரச்சினைகள் எழுந்தபோது, ஃப்ளிப்கார்ட்டின் தயார் நிலை மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பற்றிய கேள்விகளுக்கு ஈகார்ட் & மார்க்கெட்பிளேஸின் மூத்த துணைத்தலைவர் அமிதேஷ் ஜா பதிலளிக்கிறார் மேலும் இந்த சவாலான நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டையும் எடுத்துரைக்கிறார்.

‘எங்கள் விநியோக சங்கிலி ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், வாடிக்கையாளருக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையையும் நாங்கள் பாராட்டுகிறோம்’.
0

நாவல் கொரோனா வைரஸ் (கோவிட்-19) உலகளவில் பரவிய காரணத்தினால் எழுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், ஊழியர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஃப்ளிப்கார்ட் தொடங்கியுள்ள முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தவழக்கமான புதுப்பிப்புகளை நாங்கள் தொடர்ந்து வெளியிடுகிறோம். ஃப்ளிப்கார்ட் குழு தனது வணிகத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் திட்டமிடலை முடுக்கி விடுகையில், ஈகார்ட் மற்றும் மார்கெட்பிளேஸ் இன் மூத்த துணைத்தலைவர், அமிதேஷ் ஜா, ஃப்ளிப்கார்ட் இன் தயாரிப்பு நிலை மற்றும் வணிக சங்கிலி முழுவதும் அது மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.


கோவிட்-19 நோய்த்தொற்று உலகளாவிய அளவில் சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், eKart-இல் விநியோகச்சங்கிலி முழுவதும் கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை குறைக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

எங்கள் மக்களின் ஆரோக்கியத்திற்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். கிடங்குகள் மற்றும் கடைசி மைல் விநியோக நடவடிக்கைகள் உட்பட விநியோகச்சங்கிலி முழுவதுமுள்ள எங்கள் ஊழியர்கள் இதில் அடங்குவர். எங்கள் விநியோகச்சங்கிலி அமைப்புக்கான வணிக தொடர்ச்சிநிலைத் திட்டத்தைத் தொடங்கி, எங்கள் ஊழியர்கள் முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்கிறோம்.

எங்களது பூர்த்தி செய்யும் மையங்கள், ஹப்கள் மற்றும் பிற வளாகங்களில் நாங்கள் பல விழிப்புணர்வு திட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் பல பிராந்திய மொழிகளில் எங்கள் ஊழியர்களுக்கு எடுத்து கூறுவதையும், பீதியை உருவாக்காமல் நிலவும் சூழ்நிலையை அவர்களுக்கு உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன.

COVID-19 preparedness eKart

ஈகார்ட் வளாகத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன?

டபிள்யூ.ஹெச்.ஓ. வழிகாட்டுதல்களால்அறிவுறுத்தப்பட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் கிடங்குகள் மற்றும் விநியோக பங்குதாரர்கள் அனைவரும் விநியோகம் செய்யும்போது டபிள்யூ.ஹெச்.ஓ-இன் கை சுகாதார ஆலோசனையைக் கடைப்பிடித்து, சானிட்டைசரைப் பயன்படுத்தி தங்கள் கைகளை சுத்தம் செய்து கொள்கிறார்கள். எங்கள் ஊழியர்கள் மற்றும் விநியோக கூட்டாளர்களின் ஆரோக்கியத்தையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

எங்கள் விநியோகச்சங்கிலி மற்றும் லாசிஸ்டிக்ஸ் நெட்வொர்க்கிற்காக, எங்கள் அனைத்து வளாகங்களிலும் 1 லட்சம் ஊழியர்கள் பங்கு பெறக்கூடிய 3,000 –க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு அமர்வுகளை ஏற்பாடுசெய்துள்ளோம், எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் எங்கள் ஊழியர்களும் கூட்டாளர்களும் எவ்வாறு தங்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பதை கற்றுக்கொள்வார்கள்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அடங்குவன:

  • அகச்சிவப்பு வெப்பமானிகளைப் பயன்படுத்தி அனைத்து ஊழியர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வெப்பநிலையை சோதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்காக எங்கள் அனைத்து வளாகங்களும் கிருமிநாசினிகளால் முழுமையாக சுத்தம் செய்யப்படுகின்றன. தேவைப்படும்போது ஆழமான புகையூட்டல் மேற்கொள்ளப்படுகிறது.
  • ஒவ்வொரு வளாகத்தின் நுழைவு வாயிலிலும் பாக்டீரியா எதிர்ப்பு சோப்பு மற்றும் கையை சுத்திகரிக்கும் சானிடைசர்கள் வைப்பதை உறுதி செய்கிறோம்
  • கிடங்குகள், பூர்த்தி செய்யும் மையங்கள் மற்றும் பிற வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன்பு கைகளை கழுவுதல் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து அனைத்து ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன
  • இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பயோமெட்ரிக் இயந்திரங்கள் சுத்திகரிக்கப்படுவது உட்பட, நுழைவு வாயிலின் தரைப்பகுதிகள் அடிக்கடி சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தள்ளுவண்டி கைப்பிடிகள், லிஃப்ட் சுவிட்சுகள், உபகரணங்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் வரை மேற்கொள்ளப்படுகின்றன.
  • நுழையும் மற்றும் வெளியேறும் வாயில்களில் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தேவையில்லாமல் ஒன்றுகூடாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்
  • பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊழியர்களுக்கு தொடர்ந்து நினைவுபடுத்த பல பிராந்திய மொழிகளில் அறிவுறுத்தும் சுவரொட்டிகள் உள்ளன

எங்கள் மையப்படுத்தப்பட்ட பாதுகாப்புக்குழு மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் முழுமையான மற்றும் வழக்கமான கண்காணிப்பை நாங்கள் மேற்கொண்டு, அந்த பகுதிகளுக்கு எங்களது பணியாளர்கள் செல்வதை தவிர்க்கிறோம்.

விநியோகம் செய்யும் போது அதிக ஆபத்தில் இருக்கும் விஷ்மாஸ்டர்களுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படுகின்றன?

டபிள்யூ.ஹெச்.ஓ. வழிகாட்டுதல்களின்படி, சானிட்டைசர்களை எப்படி பயன்படுத்துவது என்பது உட்பட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து எங்கள் விஷ்மாஸ்டர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, பாதிப்புக்குள்ளான பகுதிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம், அந்தப் பகுதிகளுக்கு அவர்கள் செல்வதைக் குறைக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

எங்கள் விநியோக ஊழியர்கள் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகிய இரண்டின் காப்பீடுகளையும் கொண்டுள்ளனர், மேலும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளும் எவருக்கும் முழு ஊதியம் மற்றும் சலுகைகளுடன் விடுப்பு வழங்கப்படும்.

இந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகளுக்கு விநியோகச் சங்கிலி மற்றும் விநியோகக் குழுக்கள் எவ்வாறு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்?

இந்த சவாலான நேரத்தில் எங்கள் விநியோகச் சங்கிலி ஊழியர்கள், விஷ்மாஸ்டர்கள் –மற்றும் விநியோக பங்குதாரர்களின் அர்ப்பணிப்பையும், வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம். அத்தியாவசியப் பொருட்களுக்கான பெரும் தேவையை பூர்த்தி செய்ய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதிலும், பல சவால்களை சமாளிப்பதிலும் அவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் பதிவு செய்துள்ளனர். சந்தர்ப்பத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தங்களை அமைத்துக் கொள்ளும் பொறுப்பு இ-காமர்ஸ் வர்த்தகத்திற்கு உள்ளது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய நாங்கள் எந்த முயற்சியும் விட்டு விடவில்லை.

விநியோக ஊழியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைக் குறைக்க நாங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்?

அனைத்து கேஷ்-ஆன்-டெலிவரி (சிஓடி) ஷிப்மெண்ட்களுக்கும், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் கட்டண கேட்வேக்கள் மூலம் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வாடிக்கையாளர்களின் சிக்கலான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப (ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தியிருந்தால்) தங்கள் பேக்கேஜ்களை தங்கள் குடியிருப்பு வளாகங்களின் பாதுகாப்புச் சாவடியில் கொடுக்குமாறு விநியோகக் கூட்டாளரிடம் கோருவதற்கான விருப்பமும் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு இல்லாத விநியோகம் போன்ற கூடுதல் விநியோக விருப்பங்களை வழங்குவது குறித்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.


மேலும் படிக்க: ஃப்ளிப்கார்ட் குழுவில் கோவிட்-19 முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஆயத்த நடவடிக்கைகள்

Enjoy shopping on Flipkart

About the Author

Team Flipkart Stories

இந்த கட்டுரையை பிளிப்கார்ட் கதைகள் ஆசிரியர் குழு எழுதி திருத்தியது. எங்களுடன் தொடர்பு கொள்ள, தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });