ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் சானிடைஸ் செய்வது முதல் அவரது ஊழியர்கள் பணிக்குச் செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வது வரை, ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் சஞ்சிப் பிரசாத், தனது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்று வரும்போது எதையும் சமரசம் செய்வதில்லை. இங்கே, கோவிட்-19 சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவரது நிறுவனம் எவ்வாறு மாறியது என்பதைப் பற்றி பேசுகிறார், மேலும் இவரைப் போன்ற சிறு வணிகத்தை ஆதரித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். அவரது கதையை வாசியுங்கள்
என் பெயர் சஞ்சிப் பிரசாத், நான் ஃப்ளிப்கார்ட் மூலமாக அத்தியாவசிய பொருட்களை விற்றுவருகிறேன். COVID-19 இன் பரவலை எதிர்ப்பதற்கான ஊரடங்கு மற்றும் அதன் விளைவாக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டபோது, எங்கள் வணிகத்தை தொடர்ந்து நடத்த இ-வணிகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை புரிந்து கொள்ள விரும்பினோம். சரியான நேரத்தில் தொடர்பு மற்றும் விரிவான வழிகாட்டுதல்களுடன் ஃப்ளிப்கார்ட் எங்களுக்கு ஆதரவளித்தது, மேலும் அவர்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ஆர்வமாக இருந்தனர், அதை நான் உண்மையில் பாராட்டுகிறேன்.
நாங்கள் ஏற்கனவே சானிடைசர்கள், ஃபேஸ் வாஷ்கள், சோப்கள் மற்றும் சுகாதார கிட்டுகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்றுக்கொண்டிருந்ததால், ஃப்ளிப்கார்ட்டில் எங்கள் தயாரிப்புகளை மீண்டும் இடம்பெறச் செய்வது சிக்கலில்லாத அனுபவமாக இருந்தது.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் ஊழியர்கள் மற்றும் வணிக செயல்பாடுகள் என்று வரும்போது நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். அலுவலக நேரங்களுக்குப் பிறகு, எங்களை நாங்களே சானிடைஸ் செய்து கொண்டு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுகிறோம். தற்போது, நாங்கள் 33% ஊழியர்களுடன் பணிபுரிகிறோம். நாடு தழுவிய ஊரடங்கிற்கு முன்பு, எங்களிடம் 20 ஊழியர்கள் இருந்தனர், ஆனால் இப்போது நான்கு முதல் ஐந்து ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
அவர்கள் கூட எங்கள் பகுதியின் அருகே தான் வசிக்கிறார்கள், அதனால் வேலைக்கு வருவதற்கு அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாங்கள் உறுதிசெய்துகொள்கிறோம். எங்களது ஊழியர்கள் அலுவலகத்தை அடைந்தவுடன் லாக்புக்கில் (பதிவேட்டில்) கையெழுத்திடுகின்றனர். அதன்பிறகு ஊழியர்களின் வெப்பநிலையை பரிசோதித்து, அவர்கள் கைகள் மற்றும் கால்களுக்கு சானிடைசர்களை வழங்குகின்றோம். பணியிடத்திலும் கதவின் அருகிலும் நாங்கள் சானிடைசர்களை வைத்துவிடுகிறோம். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும், அவர்களது கைகளை சானிடைஸ் செய்து கொள்ளுமாறு ஒவ்வொருவரிடமும் நான் அறிவுறுத்துகிறேன், நானும் அதையே செய்கிறேன். இரண்டு ஜோடி கையுறைகளையும் நாங்கள் வழங்குகிறோம், இவை பணி நேரங்களுக்குப் பின்னர் நீக்கப்படுகிறது. இந்த வழக்கத்தை நாங்கள் ஒவ்வொரு நாளும் கடைபிடிக்கிறோம்.
ஃப்ளிப்கார்ட்டுடன் இணைந்ததற்கும் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடிந்ததையும் எண்ணி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுமாறு எங்கள் சக இந்தியர்களை கேட்டுக்கொள்கிறோம். ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் இந்த கடினமான நேரத்தில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மளிகை பொருட்களும் மலிவு விலையில் கிடைப்பதை உறுதிசெய்ய தங்கள் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து வருகின்றன. இது எங்களைப் போன்ற சிறு வணிகங்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்கிறது. எங்களுடன் ஷாப்பிங் செய்த எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரிய ‘நன்றி!’!
பல்லவி சுதாகரின் கூடுதல் உள்ளீடுகளுடன் ஜிஷ்னு முரளியிடம் சொன்ன படி.