1. Home
  2. Tamil
  3. “ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் மூலம், இந்தியாவில் உள்ள கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களை டிஜிட்டல்முறைக்கு மாற்றுவதே எங்கள் குறிக்கோள் ஆகும்”

“ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் மூலம், இந்தியாவில் உள்ள கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களை டிஜிட்டல்முறைக்கு மாற்றுவதே எங்கள் குறிக்கோள் ஆகும்”

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

ஃப்ளிப்கார்ட் கதைகள் மூலம் இந்த கேள்விபதில் பகுதியில், ஃப்ளிப்கார்ட் ஹோல்சேலின் தலைவரும் மூத்த துணைத்தலைவருமான ஆதர்ஷ் மேனன், புதிய டிஜிட்டல் சந்தையானது இந்தியாவில் உள்ள சிறு சில்லறை வணிகங்களின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் எவ்வாறு உதவும் என்று கருதுகிறார். செப்டம்பர் 2 ஆம்தேதி, ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் டெல்லி, குருகிராம் மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் செயல்படத் தொடங்கியது.

“ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் மூலம், இந்தியாவில் உள்ள கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களை டிஜிட்டல்முறைக்கு மாற்றுவதே எங்கள் குறிக்கோள் ஆகும்”
0

ஜூலை 23, 2020 அன்று, ஃப்ளிப்கார்ட் குழுஹோல்சேல் அறிமுகத்தை அறிவித்தது, இது அதிநவீன மற்றும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவில் உள்ள கிரானா சில்லறை சூழல் அமைப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அனைத்துக்குமான புதிய டிஜிட்டல் மார்க்கெட்பிளேஸ் ஆகும். இந்த அறிமுகத்தின் ஒரு பகுதியாக, பெஸ்ட் பிரைஸ், -ஐ நடத்தும்வால்மார்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில், 100% பங்குகளை வாங்குவதாகவும் ஃப்ளிப்கார்ட் குழு அறிவித்தது. இது நிறுவனத்தின் வலுவான மொத்த திறன்களை மேம்படுத்துவதற்காகவும், கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-களுக்கான வளர்ச்சி மற்றும் செழிப்பை செயல்படுத்துவதற்காகவும் பணம் செலுத்தி, பொருட்களை வாங்கிச் செல்லும் வணிகத்தை இயக்குகிறது.

கிரானாக்கள் (அருகாமையில் இருக்கும் பொது வணிகக்கடையின் கதைகள்) மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்கள் (குறு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள்) இந்தியாவின் சில்லறை சூழல் அமைப்பின் நரம்பு மையமாக செயல்படுகிறது. ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் இந்த சிறு வணிகங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பில் பல தேர்வுகளை வழங்குகிறது, மேலும் இதனை தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்தி, செயல்பாடுகளை வசதியானதாகவும், எளிதானதாகவும் ஆக்குகிறது. ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் மூலம், மளிகை, பொது சாமான்கள் அல்லது பேஷன் பொருட்களை விற்பனை செய்யும் இந்த சிறு வணிகங்கள் பல விதமான தயாரிப்புகளை ஒரே இடத்தில் அணுக முடியும். கவர்ச்சிகரமான ஊக்கத்தொகைகள், சரக்குத் தேர்வுகளை எளிதாக்கும் வகையில் டேட்டா-டிரைவன் பரிந்துரைகள், மேலும் அதிக செயல்திறனைப் பெற விரைவான மற்றும் நம்பகமான நெட்வொர்க் மூலம் விநியோகம் மற்றும் சிறந்த லாபங்கள் ஆகியன சிறப்பு சலுகைகளில் அடங்கும்.

ஃப்ளிப்கார்ட் ஹோல்சேலின் தலைவரும் மூத்த துணைத்தலைவருமானஆதர்ஷ் மேனன்,ஃப்ளிப்கார்ட்டில் நீண்ட காலமாக பல தலைமைப் பொறுப்புகளை வகித்து வருகிறார். கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களுக்கான மொத்த விற்பனை அனுபவத்தை மாற்றுவதில் ஃப்ளிப்கார்ட் குழு மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவதால், ஃப்ளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இந்தியா இடையேயான ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் இந்த புதிய முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.

கேள்வி மற்றும் பதில் பிரிவுகள்


ஃப்ளிப்கார்ட் ஹோல்சேலில் உள்ள எந்த இடைவெளியை சரி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது?

இந்தியாவில் சில்லறை விற்பனைக்கென்று ஒரு இடம் உருவாகி வருவதை நாங்கள் காண்கிறோம், மேலும் பி2சி மற்றும் பி2பி ஆகிய இரண்டிலும் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும். இந்திய பி2பிசந்தை பெரியது ஆனால், இது இன்னும் பழமையான விநியோக மாதிரியை கொண்டுள்ளது. இன்று, இந்தியாவில் 90% வர்த்தகம் கிரானாக்கள் மூலம் திறனற்ற நிலையில் நடைபெற்று வருகிறது.

தற்போதைய சில்லறை வியாபார மாதிரி சவாலாக இருக்கிறது, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு. இவர்களுக்கு கடன் பெறுவதற்கான வரையறுக்கப்பட்ட அணுகலே உள்ளது, போதுமான அளவு தயாரிப்புத் தேர்வு இல்லை, மேலும் இதன் மூலம் இவர்கள் பெறக்கூடிய லாபங்களையும் இழக்கிறார்கள். இந்த எம்.எஸ்.எம்.ஈ-க்கள் நம் நாட்டில் சுமார் 85% கடைகளைக் கொண்டுள்ளன. தற்போது இவை இயங்கிவரும் முறைகளாலோ அல்லது தற்போது இருக்கும் பி2பி நிறுவனங்களாலோ இவர்களின் தேவைகளை திறம்பட தீர்க்க முடியாது. பி2பி-இல் ஃப்ளிப்கார்ட் குழுமத்திற்குள் உள்ள வலுவான திறன் மூலம், இவர்களின் வாழ்வை எளிதாக்க தொழில்நுட்பம் மூலம் இயங்கும், முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பில் பல விதமான தேர்வை இந்த சிறு வணிகங்களுக்கு வழங்கி, கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துவோம்.


.

ஃப்ளிப்கார்ட் ஹோல் சேல் எம்.எஸ்.எம்.ஈ-க்கள் மற்றும் கிரானாக்களை எவ்வாறு மேம்படுத்தும்?

சில்லறை சூழல் அமைப்பிற்கான ஒரே டிஜிட்டல் சந்தை தீர்வாக, ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் சிறு வணிகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பில் பலவகையான தயாரிப்புகளை வழங்குகிறது. கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ.களை வேகமாக வளரச் செய்யவும், வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், அவர்களின் லாபத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு உதவுவதற்கு இவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றுவதே எங்கள் குறிக்கோள் ஆகும்.

இதை நாங்கள் பல வழிகளில் அடையவிருக்கிறோம். அதில் ஒன்று கொள்முதல் பணியை எளிதாக்குவது என்பதாகும். ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் சிறு வணிகங்களுக்கு ஃபேஷனில் தொடங்கி பல்வேறு பிரிவுகளில் பொருட்களை வாங்குவதற்கு உதவியாக இருக்கும். இது கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் சலுகைகளுடன், சரக்குத்தேர்வுக்கான டேட்டா-டிரைவன் பரிந்துரைகளையும் வழங்குகிறது, இது அதிக செயல்திறன் மற்றும் சிறந்த லாபங்களை வழங்கும் நோக்கில் வேகமான மற்றும் நம்பகமான நெட்வொர்க் மூலம் விநியோகம் செய்யப்படும்.

நிதி வலுவூட்டலானது வணிகத்திற்கான நுழைவுத் தடைகள் மற்றும் பிற தடைகளை எளிதாக்குகிறது. ஃப்ளிப்கார்ட் மொத்த வாடிக்கையாளர்களுக்கு பணப்புழக்கத்தை நிர்வகிக்க எளிதான கடன்வசதி, பரந்தஅளவிலான ஃப்ளிப்கார்ட் உறுதிப்படுத்தப்பட்ட தரமான தயாரிப்புகள், எளிய மற்றும் வசதியான ஆர்டர் வருமானம் மற்றும் விரைவான தயாரிப்பு விநியோகத்தை தங்கள் கடைகளுக்கு நேரடியாக எளிதான ஆர்டர்-கண்காணிப்பு வசதியுடன் அணுக முடியும்.

கூடுதலாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ளிப்கார்ட் சூழல்அ மைப்பின் மைக்ரோ-சந்தை நிலை பி2பி மற்றும் பி2சி உள்நோக்கங்களுக்கான அணுகல் இருக்கும், இதன் மூலம் அவர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாடிக்கையாளர் கோரிக்கைகளை நன்கு புரிந்துகொள்வார்கள், மேலும் இதனால் அவர்கள்சரியான தயாரிப்புகளை வாங்கவும் விற்கவும்முடியும்.


இந்தியாவில் நிலவும் தற்போதையசில்லறை வியாபார சூழ்நிலையில் புதிய டிஜிட்டல் மார்க்கெட் பிளேஸ் என்ன பலத்தைத் தருகிறது?

இந்தியாவின் எம்.எஸ்.எம்.ஈ-க்கள் மற்றும் கிரானாக்களுக்கு சேவை செய்யும் விநியோக மாதிரி பெரும்பாலும் காலாவதியான நிலையில் உள்ளது. ஃப்ளிப்கார்ட் அதன் நிபுணத்துவம் மற்றும் பெஸ்ட் பிரைஸ் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, பி2பிசூழல் அமைப்பை தொழில்நுட்பம் மூலம் மாற்றுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் ஃ ப்ளிப்கார்ட்டின் வலுவான உள்நாட்டு தொழில்நுட்பத் திறன்கள், நுகர்வோர் மின் வர்த்தக பிரிவில் விரிவுபடுத்தப்பட்ட தலைமைத்துவம் மற்றும் இந்தியாவில் தொழில் குறித்த தனித்துவமான புரிதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். நாடு முழுவதும் உள்ள கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களை அடைய ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் பரந்த விநியோக சங்கிலி உள்கட்டமைப்பை இந்த வணிகம் பயன்படுத்தும்.

ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் பெஸ்ட் பிரைஸ் குழுவின் வலுவான வர்த்தக அனுபவமானது, பிராண்டுகளுடனான அதன் வலுவான உறவுகள், கிரானாக்களின் ஆழ்ந்த சேவை மற்றும் பெஸ்ட் பிரைஸ் கடைகளை இயக்குவதில் 12+ ஆண்டுகள் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் வணிகத்தின் மையத்தில் கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு மாதிரியை மேலும் மேம்படுத்துவதற்கும் வளர்ப்பதற்கும் இது விலைமதிப்பற்ற இலக்குகளையும், நிபுணத்துவத்தையும் வழங்கும். இது இந்தியாவின் மிக அதிக அளவில் பணம் செலுத்தி பொருட்கள் வாங்கி செல்லும் வணிகங்களில் ஒன்று, பெஸ்ட் பிரைஸ் (சிறந்த விலை) தற்போது ஆதரிக்கிறது கிரானாக்கள் மற்றும் பிற சிறு வணிகங்கள் உட்பட 1.5 மில்லியன் உறுப்பினர்களை ஆதரிக்கிறது.


கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களை ஃப்ளிப்கார்ட் ஹோல்சேலின் ஒரு அங்கமாக மாற்றுவது எப்படி?

ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் ஃபேஷன் வகையுடன் செயல்பாடுகளைத் தொடங்குகிறது, அதில் 95% தயாரிப்புகள் உள்நாட்டில் இருந்து பெறப்படும். இந்த தளம் தற்போது ஃபேஷன் சில்லறை விற்பனையாளர்களுக்கு, குறிப்பாக காலணி மற்றும் ஆடைகளை விற்பனை செய்யும், குருகிராம், டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள கடைகளுக்கு கிடைக்கிறது, விரைவில் மும்பைக்கும் கிடைக்கவிருக்கிறது. 2020 ஆம்ஆண்டின் இறுதிக்குள், ஃப்ளிப்கார்ட் ஹோல்சேலில் ஃபேஷன் (ஆடை, காலணி மற்றும் பிற அழகு சாதனப் பொருட்கள்), வீட்டு அலங்காரம் மற்றும் மளிகை என மூன்று பிரிவுகள் இருக்கும், மேலும் 20 நகரங்களுக்கு இதனை நாங்கள் விரிவுபடுத்துவோம்.

கிரானாக்கள் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ-க்களுக்கு, இதில் உள்நுழைவு செயல்முறை மிகவும் எளிதானது மற்றும் தொந்தரவில்லாதது. வணிக உரிமையாளர்கள் எங்கள் வலைத்தளத்தின்மூலம் பதிவு செய்து, கூகிள் பிளேஸ்டோரிலிருந்துஆண்ட்ராய்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து உள்நுழைவதற்கான எளிய செயல்முறையைப் பின்பற்றலாம், அங்கு அவர்கள் சில விவரங்களையும் வணிகச்சான்றையும் சமர்ப்பிக்கவேண்டும் – ஜி.எஸ்.டி.ஐ.எண், வர்த்தக உரிமம், கடை மற்றும் ஸ்தாபன உரிமம், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ பதிவு, மருந்து உரிமம், உத்யோக் ஆதார் போன்றவை.


மேலும் அறிய அதிகாரப் பூர்வமான ஃப்ளிப்கார்ட் ஹோல்சேல் வலைத்தளத்தைப்பார்வையிடவும்

Enjoy shopping on Flipkart

About the Author

Team Flipkart Stories
Team Flipkart Stories

இந்த கட்டுரையை பிளிப்கார்ட் கதைகள் ஆசிரியர் குழு எழுதி திருத்தியது. எங்களுடன் தொடர்பு கொள்ள, தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });