#செல்ஃப்மேட்: ராக்கெட் சிங்க் மூலம் ஊக்கம் பெற்ற பிலே ஸ்கூல் ஆசிரியர்,எப்படி ஆன்லைனில் தொழில்முனைவோர் ஆனார் என்பதை இந்த கதை

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | ગુજરાતી | मराठी

சுமீத் கௌர் ஒரு கிண்டர்கார்டன் ஆசிரியையாக தன் வேலையை மிகவும் நேசித்தார். ஆனால், ராக்கெட் சிங் என்ற பாலிவுட் திரைப்படத்தை அவர் பார்த்த பிறகு அவரது வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது: இந்த ஆண்டின் சிறந்த விற்பனையாளர். உற்சாகத்துடன், அவர் தனது ஆன்லைன் வணிகத்தைத் தொடங்கினார். ஃப்ளிப்கார்ட்டில் அவர் விற்பனை செய்யத் தொடங்கிய பிறகு, சுமீத்தின் செல்வச் செழிப்பு வானளாவ உயர்ந்தது. அவர் தனது நிறுவனத்திற்கு என்ன பெயர் வைத்தார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? ராக்கெட் சேல்ஸ் கார்ப்! தைரியத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்தும் இந்தக் கதையைப் படிப்பதன் மூலம் உத்வேகம் பெறுங்கள்.

Flipkart seller

சுமீத் கௌர், டெல்லியைச் சேர்ந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்

ஜிஷ்ணு முரளியிடம் சொன்னது போல


நான் 2013 -இல் ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக ஆனேன். இது வரை, அதில் என் பயணம் வியதாக்கமுறைல் இருந்து வருகிறது. எனது வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக நான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். மக்கள் வழக்கமாக ஆன்லைன் வணிகங்களைத் தொடங்கிவிட்டு, விரைவிலேயே அதை மூடி விடுகிறார்கள். எது ஒரு சலிப்பும் இல்லாமல் நான் கடந்த ஆறு ஆண்டுகளாக அதைத் தொடர்ந்து நடத்திவருகிறேன். நான் புதிய வகைகளைத் தொடங்கினேன் மற்றும் புதிய தயாரிப்புகளைச் சேர்த்தேன் – ஆன்லைன் விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் விற்பதற்கு எனக்கு சுதந்திரம் அளித்துள்ளது.

ஆஃப்லைனில் கடை அமைப்பதற்கு அதிகமாகப் பணம் தேவைப்படும். வாடகை மற்றும் பொருள்களுக்கான செலவுக்காக மட்டுமே பெருமளவு பணம் தேவைப்படும். எனவே நான் ஆன்லைனில் விற்கும் யோசனைக்கு வந்தேன். ஒரு ஆன்லைன் வாடிக்கையாளராக, எல்லா விஷயங்களும் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்ள நான் ஆர்வமாக இருந்தேன். ஏற்கனவே ஆன்லைன் வணிகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்களிடம் சென்று அவர்களிடமிருந்து நடைமுறையைக் கற்றுக்கொண்டேன். ஆஃப்லைனில் ஒரு கடை நடத்துவதுடன் ஒப்பிடும்போது ஆன்லைனில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு குறைவாகவே செலவாகிறது., நாடு முழுவதும் என்னுடைய சந்தையாக இருக்கும் என நான் உணர்ந்தேன்.

தொடக்கத்தில், குறைந்த விலையில் எளிதாக என்னால் கொள்முதல் செய்ய முடிகின்ற அழகுசாதனத் தயாரிப்புகள் மற்றும் டியோடரன்ட்களைக் கொண்டு நான் தொடங்கினேன். அதன் பிறகு, நறுமணப் பொருள்கள், கொலோன்கள் போன்றவற்றை நான் விற்பனை செய்யத் தொடங்கினேன். அதன் பிறகு, பலதரப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும்போது விற்பனையாகும் பொருள்களின் எண்ணிக்கையும் நேரடியாக அதிகரிக்கிறது என்பதை நான் கண்டறிந்தவுடன் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியப் பிரிவுக்கு நான் மாறினேன். அதனால் ஃப்ளிப்கார்ட்டில் மேலும் மேலும் பல பொருள்களை நான் பட்டியலிடத் தொடங்கினேன். சமிபத்தில் நன் விட்டு உபகரணங்கள் விற்பனை செய்யத்தொடங்கினான் .

நான் ஏதாவது பிரச்சனையை எதிர்கொள்ளும் போதெல்லாம், ஃப்ளிப்கார்ட் எப்போதுமே எனக்கு உதவத் தயாராக இருந்திருக்கிறது. எனக்குத் தெரியாத பல்வேறு தலைப்புகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் வெபினார்களில் கலந்துகொள்கிறேன். ஃப்ளிப்கார்ட்டின் விற்பனைக் குறிப்புகள் மற்றும் வகைப்படுத்தல் அமைப்புகளைப் பின்பற்றத் தொடங்கியதிலிருந்து நான் ஒரு கோல்ட் செல்லராக இருந்து வருகிறேன். எனது அலுவலகம் முழுவதும் சான்றிதழ்களால் நிரம்பியிருக்கிறது.

எங்களது விற்பனை ராக்கெட் வேகத்தில் உயர வேண்டும் என நான் விரும்பினேன், மற்றும் நாங்கள் நேர்மைக்கும் கடின உழைப்புக்கும் பெயர் பெற்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு சீக்கியர் தனது வெற்றிக் கதையைத் திரைக்கதையாக எழுதி கதாநாயகனாக நடித்த ‘ராக்கெட் சிங்: இந்த ஆண்டின் சிறந்த விற்பனையாளர்’ என்ற பாலிவுட் திரைப்படத்தைப் பார்த்ததால் ஈர்க்கப்பட்ட நான், எனது நிறுவனத்துக்கு ராக்கெட் சேல்ஸ் கார்ப் எனப் பெயரிட்டேன்.

ஒரு ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக நான் அனுபவித்துள்ள வளர்ச்சி வியக்கத்தக்கது. வெறும் ₹10,000 தொகையைக் கொண்டு நான் வணிகத்தைத் தொடங்கினேன், இப்போது நான் கோடிகளில் வியாபாரம் செய்துவருகிறேன்.

இப்போது, கிட்டத்தட்ட எல்லா ஆன்லைன் தளங்களிலும் எனது தயாரிப்புகளை நான் பட்டியலிட்டுள்ளேன். நான் ஃப்ளிப்கார்ட்டில் தொடங்கினேன் மற்றும் ஆன்லைன் தொழில்முனைவோராக என்னுடைய ஒட்டுமொத்தப் பயணத்திலும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். அவர்கள் என்னுடைய இடத்திற்கு வந்து, வணிகத்தை அமைக்க எனக்கு உதவினார்கள்.

இந்த ஆண்டு, தி பிக் பில்லியன் டேஸ் சேல்-க்காக நான் பெரிய திட்டங்கள் வைத்திருக்கிறேன். நான் சமீபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் பிரிவில் விற்பனையைத் தொடங்கியுள்ளேன் மற்றும் என்னால் இயன்ற அளவுக்கு அதிகமான பொருள்களைப் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளேன். இந்த ஆண்டு வணிகத்தில் நான் ஒரு இலக்கு வைத்துள்ளேன், அது என்னவென்றால் வீட்டு உபயோகப்பொருள்கள் பிரிவில் விற்பனையை அதிகரிப்பது.

ஃப்ளிப்கார்ட்டில் நான் செய்யும் வணிகத்தில் என் குடும்பமும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். என் கணவர் கட்டுமானத் தொழில் செய்துவந்தார். நான் சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்குத் தீர்மானித்தபோது அவர் எனக்கு முழுமையான ஆதரவு வழங்கினார். குழந்தைகள் கூட அவர்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை எனக்குச் செய்தனர். நான் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யாமல் தங்கள் தேவைகளை அவர்களே கவனித்துக் கொண்டு, நான் எனது கனவில் கவனம் செலுத்த உதவுவார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு என் கணவர் அவரது வணிகத்தை நிறுத்திவிட்டு முழு நேரமும் எனக்கு உதவி செய்யத் தொடங்கினார். இப்போது, இன்ஃபினிட்டி குரூப்ஸ் செல்லிங் என்ற மேலும் ஒரு நிறுவனத்தை ஃப்ளிப்கார்ட்டில் நாங்கள் தொடங்கியுள்ளோம்.

ஒரு ஆசிரியராக இருப்பது மனதிற்குத் திருப்தியளிக்கும் ஒரு வேலையாக இருந்தது. ஆனால் பாலர் பள்ளியில் பாடம் கற்பிப்பதால் மட்டும் எனக்குத் தேவையான பணம் சம்பாதிக்க முடியாத காலம் ஒன்று இருந்தது. எனவே, சொந்தமாக ஏதாவது தொடங்க வேண்டும் என நான் தீர்மானித்தேன். ஃப்ளிப்கார்ட் விற்பனையாளராக ஆனது எனக்குக் கிடைத்த சிறப்பான யோசனை.


மேலும் வாசிக்க: இல்லத்தரசியாக இருந்து திறமையான தொழில்முனைபவராக #செல்ஃப்மேட் — இந்த ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர் அவரது கனவுகளை நிறைவேற்றுவதற்காக இன்னல்களைத் திறமையுடன் சமாளித்தார்

Enjoy shopping on Flipkart