1. Home
  2. Uncategorized
  3. தனது குடும்பத்தினருக்கு சிறந்த தயாரிப்புகளை பெறுவதற்கு ஃப்ளிப்கார்ட் உதவுகிறது என்று அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.

தனது குடும்பத்தினருக்கு சிறந்த தயாரிப்புகளை பெறுவதற்கு ஃப்ளிப்கார்ட் உதவுகிறது என்று அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.

0
Read this article in বাংলা | English | ગુજરાતી | हिन्दी | ಕನ್ನಡ | मराठी

சமீபத்தில், ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்த விமர்சனம் எங்கள் கவனத்தை கவர்ந்தது போல, சமூக ஊடகங்களில் உள்ள பல பயனர்களின் கவனத்தையும்கவர்ந்தது. அந்த விமர்சனத்தில் ஒரு சிறுமியின் படம்இருந்தது, அவர் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வாங்கிய உடையில் சிரித்த முகத்துடன் காணப்பட்டார், அந்தச் சிறுமிக்கு பின்னால் அவரது அம்மாவைப்போல் தோன்றிய பெண்மணி பெருமையுடன் அமர்ந்திருந்தார். நாங்கள் அந்த வாடிக்கையாளரை அணுகி, அவர்களின் அனுபவத்தைப்பற்றி மேலும் அறிய முடிவு செய்தோம். நாங்கள் கண்ட விஷயம் எங்கள் இதயங்களை நெகிழவைத்தது! அஸ்ஸாமில் லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த வாடிக்கையாளரின் கதையை வாசியுங்கள்.

தனது குடும்பத்தினருக்கு சிறந்த தயாரிப்புகளை பெறுவதற்கு ஃப்ளிப்கார்ட் உதவுகிறது என்று அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.
0

ந்த ஆண்டு ஜனவரியில், ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர் நயன் மோனிதாஸ் வரும் வாரங்களில் தனது குடும்பத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சியை எண்ணி உற்சாகமாக காத்திருந்தார். அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் 19 வயதேயான மூத்த சகோதரர் வரவிருக்கும் நிகழ்ச்சிக்கு அசத்தலான ஆடை ஒன்றை வாங்கி, தனது இளைய தங்கையான சுமிதாவை, ஆச்சர்யத்தில் ஆழ்த்த விரும்பினார்.

நயன் அஸ்ஸாம் மாவட்டத்தில் அருணாச்சலபிரதேசத்தின் எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் லக்கிம்பூர் மாவட்டத்தில் வசிக்கிறார். “நாங்கள் வசிக்கும் இடத்தில், நாங்கள் விரும்பும் பல பொருட்களை அவ்வளவு எளிதில் வாங்க முடியாது” என்று அந்த சகோதரர் தனது வீட்டிலிருந்தபடி விளக்குகிறார். “இதன் காரணமாக, எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது வாங்க வேண்டியபோதெல்லாம் நான் பெரும்பாலும் ஃப்ளிப்கார்ட்டில் ஆன்லைனில் தான் ஷாப்பிங் செய்கிறேன்.”, என்றும் கூறுகிறார்.

ஃப்ளிப்கார்ட்டில் பல விதமான பாரம்பரியலெஹங்காக்களைமூலம் ஸ்குரோல் செய்து பார்த்த பின், அவர் இறுதியாக தனது அன்பு சகோதரிக்கான பொருத்தமான செட்டை தேர்வு செய்து, அதனை சுமார் ரூ. 350 –க்கு எளிதாக ஆர்டர் செய்து, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.

“நாங்கள் வசிக்கும் பகுதி மிகவும் ஒதுக்குபுறமான பகுதியல்ல, ஆனாலும் பொருட்கள் வந்து சேர்வதற்கு பல நாட்கள் பிடிக்கும்,” என்று மேலும் அவர் கூறுகிறார்.

ஆர்டர் கைக்கு வந்தவுடன், ஆடை, அதன் தரம் மற்றும் அதன் விலை ஆகியவை குறித்து நயனும் சுமிதாவும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நயன் தனது சகோதரியை அந்த பாரம்பரிய உடையில் புகைப்படமெடுத்து, ஸ்குரோல் செய்யும் ஏதேனும் ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளருக்கு இது ‘கட்டாயம் வாங்கவேண்டிய தயாரிப்பு’ என்று வலியுறுத்தும் விதமாக அதனை விமர்சனமாக பகிர்வதற்கு முடிவு செய்தார்.

“ஆடை மற்றும் தரம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், எனவே விமர்சனத்தையும், படத்தையும் பதிவிட முடிவு செய்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

இதோ இதுதான் எங்கள் கண்களையும், சமூக வலைத்தளத்தில் இதனை பகிர்வதற்குபல ஃப்ளிப்கார்ட்வாடிக்கையாளர்களையும் கவர்ந்த புகைப்படம். இந்த புகைப்படத்தில், சுமிதா தனது புத்தம் புதிய>லெஹெங்காவில், புன்னகைத்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவது தெளிவாக தெரிகிறது, அவளுடைய அம்மா அவர்களுடைய இல்லத்தில் பெருமையுடன் பின்னால் அமர்ந்திருக்கிறார்.

நான்கு உடன்பிறப்புகளான 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் படித்து வருகின்றனர், பெற்றோர்கள் தங்கள் சொந்த சிறு வணிகத்தை நடத்தி வருகின்றனர்.

“நாங்கள் மற்ற எல்லாவற்றையும்விட ஃப்ளிப்கார்ட்டில்தான் பெரும்பாலும் ஷாப்பிங் செய்கிறோம்,” என்று நயன் அழுத்தமாக கூறுகிறார். நீண்டகால ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளராக இருந்து, பெரும்பாலும் அவரது குடும்பத்தின் சார்பாக ஷாப்பிங் செய்ததன் மூலம் தான் பெற்ற அனுபவத்தில் மகிழ்ச்சியடைவதாகக் கூறுகிறார் அவர். “நான் ஆர்டர் செய்த பொருட்களின் தரம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் சொல்லப் போனால், நான் சமீபத்தில் ஆர்டர் செய்த ஒரு பொருளை சற்று முன்பு தான் பெற்றேன்!” என்று அவர் மேலும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.


மேலும் படிக்க: ஊரடங்கின் போதான கதைகள்: #ஸ்டே ஹோம் வித் ஃப்ளிப்கார்ட் இருந்ததால் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்

Enjoy shopping on Flipkart

About the Author

Team Flipkart Stories

இந்த கட்டுரையை பிளிப்கார்ட் கதைகள் ஆசிரியர் குழு எழுதி திருத்தியது. எங்களுடன் தொடர்பு கொள்ள, தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தவும் அல்லது ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பவும்.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });