ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் பற்றி நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும் — வாங்குவதற்கான மிக வசதியான மற்றும் நம்பகமான வழி!

Read this article in বাংলা | English | ગુજરાતી | हिन्दी

ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் என்பது ஷாப்பிங்கை வசதியாகவும் கவலையற்றதாகவும் ஆக்குவதற்காக ஃப்ளிப்கார்ட்டின் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட ஓர் புரட்சிகரமான முன்னெடுப்பாகும். ஃப்ளிப்கார்ட்டின் டெபிட் கார்டு ஈ.எம்.ஐ மற்றும் கட்டணமில்லா ஈ.எம்.ஐ, மற்றும் பை பேக் கியாரண்டி போன்றவை ஷாப்பிங்கை மலிவு விலையாக மாற்றும். அதே வேளையில் பே லேட்டர் இணைய ஷாப்பிங்கை உங்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் மாற்றுகிறது. இந்தச் சேவையை பெற்று மகிழ்வதற்கான பட்டியலில் நம்பகமான ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களின் பட்டியல் மாதத்திற்கு மாதம் வளர்ந்து வருகிறது. ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் எப்படி வேலை செய்கிறது? இது முற்றிலும் உங்கள் வசதியை நோக்கமாகக் கொண்டதாகும் — உங்கள் தயாரிப்பைத் தேர்ந்தெடுங்கள், பணம் செலுத்துதல் விவரங்கள் ஓ.டி.பி போன்ற போராட்டங்கள் எதுவும் இல்லாமல் தடையன்றியும் விரைவாகவும் தயாரிப்பைப் பாருங்கள், தயாரிப்பைப் பெறுங்கள், மற்றும் அதை அனுபவித்துணருங்கள், உங்கள் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் அடுத்தமாதம் ஒன்றாகப் பணம் செலுத்தலாம். எளிமையாக இருக்கிறது இல்லையா? பந்தயம் கட்டத் தயாராக இருக்கிறோம்! மேலும் அறிய விரும்புகிறீர்களா? ஃப்ளிப்கார்ட் லேட்டர் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ.

Flipkart Pay Later

ந்தியாவில் நீங்கள் எங்கு வசித்தாலும் சரி, உங்கள் வீட்டிற்கே தயாரிப்புகளை விநியோகம் செய்து, உங்கள் பரிவர்த்தனைகளைப் பதிவேட்டில் பராமரிக்கும் ஒரு மளிகைக் கடை உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அந்த நிலுவைத் தொகைகளைச் செலுத்தலாம், இவ்வாறாக இந்த முறைமை தொடரும். நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது. கேஷ் ஆன் டெலிவரி, கட்டணமில்லா ஈ.எம்.ஐமற்றும்பை பேக் கியாரண்டி Guaranteeபோன்றவற்றை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய பிறகு, ஃப்ளிப்கார்ட் மற்றுமொரு வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட புதுமையான— ஃப்ளிப்கார்ட் பே லேட்டரை அறிமுகப்படுத்துகிறது.

ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் என்றால் என்ன?

ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் என்பது இணையத்தில் ஷாப்பிங் செய்யும்போது வசதியிலும் ஏற்புடைய விலையிலும் கவனம் செலுத்தும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட ஃப்ளிப்கார்ட்டின் புதுமையான கண்டுபிடிப்பு ஆகும். மாதம் முழுவதும் ஃப்ளிப்கார்ட்டில் உங்களுக்குப் பிடித்தவற்றை வாங்க ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் ரூ 5000 வரை கடன் வழங்குகிறது. இங்கே வசதி என்பது உங்கள் எல்லா கொள்முதல்களுக்கும் ஒரே பில்லைப் பெறுவது, விரைவான ஒற்றை-கிளிக் செக் அவுட், மாதக் கடைசியில் உங்கள் பில்களைச் செலுத்துவது போன்றவைகளாகும்

இது தான் மிகவும் முக்கியமான பகுதியாகும் — உங்கள் தயாரிப்புகளை அனுபவித்த பிறகு நீங்கள் அதற்குப் பணம் செலுத்தலாம்.

இதில் உங்களுக்காக என்னென்ன இருக்கின்றன?

ஃப்ளிப்கார்ட் பே லேட்டரை உங்களின் பணம் செலுத்துதல் விருப்பமாகப் பயன்படுத்துவது மூன்று முக்கிய அம்சங்களுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது:

கடன் வரம்பு:நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப ஃப்ளிப்கார்ட்டில் வாங்குவதற்கும், தயாரிப்புகளை அனுபவித்த பின் அடுத்த மாதம் பணம் செலுத்துவதற்கும் ரூ 5000 வரை கடனாகப் பெறலாம். பிறகு அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் நீங்கள் பில்லைச் செலுத்த முடியும்.

உடனடியாக வாங்குதல்:செக் அவுட் செயல்முறையின் போது பல விவரங்களை உள்ளிடும் தேவையின்றி, உண்மையில் ஒரு பொத்தான் கிளிக்கிலேயே நீங்கள் தயாரிப்புகளை வாங்க முடியும்.

மொத்தமாகப் பணம் செலுத்துதல்:நீங்கள் ஒரே நேரத்தில் பல பரிவர்த்தனைகளில் பொருள்களை வாங்கி, அவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாகப் பணம் செலுத்த முடியும்.

ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் பணம் செலுத்தும் விருப்பத்தை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

நீங்கள் ஃப்ளிப்கார்ட் விஷ்மாஸ்டர் உங்கள் வாசலில் காத்திருக்கும்போது பணத்தைத் தேடிக் கொண்டிருப்பது பிடிக்காதவரா? பணம் செலுத்துவதற்காக கடன் அட்டையோ பற்று அட்டையோ பயன்படுத்தும்போது 2 காரணி உறுதிப்படுத்தல் குறியீடுகளை உள்ளிடுவதற்கு உங்களுக்கு நேரமில்லையா? அப்படியெனில் ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஷாப்பிங் அனுபவத்தை வசதியாகவும் மிக எளிதாகவும் மாற்றுகிறது! பொருள் வாங்குங்கள், உங்கள் டெலிவரியைப் பெறுங்கள், தயாரிப்பைப் பயன்படுத்துங்கள். பின்னர் மெதுவாக அடுத்த மாதம் நீங்கள் பணம் செலுத்தலாம்.

 

Flipkart Pay later

 

உங்களிடம் பல அட்டைகள் இருக்கின்றன அல்லது ஒரு அட்டையும் இல்லை என்பதைக் கருதாமல், ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் வசதியாகப் பொருள்வாங்குவதற்கான ஒரு மாற்று ஆகும்.

flipkart pay later

 

Are you eligible for Flipkart Pay Later?

flipkart pay later

நீங்கள் 30 வினாடிகளில் ஃப்ளிப்கார்ட் பே லேட்டருக்கு விண்ணப்பிக்கலாம்! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பான் அட்டை, ஆதார் விவரங்களை உள்ளிட்டு, உங்கள் ஆவணங்களைச் சரிபார்த்து, 30 வினாடிகள் காத்திருங்கள், பின்னர் ஃப்ளிப்கார்ட் பே லேட்டரைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யத் தொடங்குங்கள்!

 

flipkart pay later

 

ஃப்ளிப்கார்ட் பே லேட்டரின் நன்மைகள் பல!

ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் விருப்பத்தைப் பயன்படுத்தும்போது, உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் இதோ.

நீங்கள் தயாரான பின் பணம் செலுத்துங்கள்:வீட்டுக்கு அருகிலிருக்கும் மளிகைக்கடைக்காரருக்குப் பணம் செலுத்துவதைப் போல் இதிலும் மாதக் கடைசியில் பணம் செலுத்தும் விருப்பம் உங்களுக்கு உள்ளது. இயல்புநிலையில், பணம் செலுத்துவதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 5ஆம் தேதி ஆகும். நிச்சயமாக உங்களுக்கு நேரமும், பணமும், நல்ல இணைய இணைப்பும் உள்ளபோது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிலுவைத் தொகையைச் செலுத்தி தீர்க்க முடியும்.

முயற்சித்துப் பாருங்கள் பின்னர் வாங்குங்கள்:தயாரிப்பிற்கு முன்பே பணம் செலுத்துவதற்குப் பதிலாக, தயாரிப்பைப் பெற்று முயற்சித்துப் பார்த்த பின் பணம் செலுத்தும் விருப்பத்தைப் பெறுகிறீர்கள்.

பரிவர்த்தனைகளை ஒன்று சேருங்கள்:ஒரு மாதத்தில் நீங்கள் ஃப்ளிப்கார்ட்டிலிருந்து ஒரு கார் மொபைல் சார்ஜர், ஒரு வாலட், மற்றும் ஒரு ஜோடி குளிர்கண்ணாடிகள் வாங்கியுள்ளீர்களா? பிரச்சினையில்லை. இந்த பணம் செலுத்தும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் மூன்று ஆர்டர்களுக்கும் வசதியாக ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியும்.

விரைவான பணம் செலுத்துதல்:நீங்கள் பணம் செலுத்தும் போது, அதை நிறைவு செய்ய நீங்கள் பல படிகளைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பரிவர்த்தனைகளில் ஒரு கிளிக் பணம் செலுத்தலைப் பெற்று மகிழுங்கள்.

உங்களுக்காக எப்போதும் உள்ளோம்:ஃப்ளிப்கார்ட் பே லேட்டரை பணம் செலுத்தும் விருப்பமாகத் தேர்வு செய்யும்போது, நீங்கள் கிட்டத்தட்ட-100% வெற்றி விகிதத்தை உறுதிப்படுத்த முடியும்.

கூடுதல் வசதிகளுடன் கூடிய அருமையான நன்மைகள்

Flipkart Pay Later

 

Flipkart Pay Later

ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் என்பது ஒரு பணமில்லா, காகிதமில்லா வசதியாகும், இதைச் செயற்படுத்தி நடப்பில் வைத்துக்கொள்ள நீங்கள் எவ்வித பராமரிப்புக் கட்டணங்களையும் செலுத்த வேண்டியதில்லை. இந்த பணம் செலுத்துதல் விருப்பத்தைப் பயன்படுத்துவது எப்படி எளிமையாகவும் நன்மைகள் நிறைந்தும் காணப்படுகிறது என்பதைப் பாருங்கள்.

நீங்கள் உங்கள் தயாரிப்பை இரத்து செய்யும்போது அல்லது தயாரிப்பை திருப்பித் தரும்போது உடனடியாக பணத்தை திரும்ப வழங்குகிறது.

கடன் அட்டையுடன் ஒப்பிடும்போது பூஜ்ஜிய வட்டிக் கட்டணம் அல்லது கணக்குப் பராமரிப்புக் கட்டணம் ஃப்ளிப்கார்ட் பே லேட்டரை மேலும் கவர்ச்சிகரமான நிதி விருப்பமாக மாற்றுகிறது. நீங்கள் கடன் அட்டைகள் உள்ளிட்ட எந்த இணைய பணம் செலுத்தும் முறைமைகளைப் பயன்படுத்திப் பணத்தைத் திருப்பிச் செலுத்தலாம்.

ஃப்ளிப்கார்ட் பே லேட்டரைப் பயன்படுத்தும்போது நினைவிற் கொள்ள வேண்டியவை

ஃப்ளிப்கார்ட் ஷாப்பிங் அனுபவத்தை இன்னும் வெகுமதியானதாக மாற்றும் பல நன்மைகளை ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் விருப்பம் உங்களுக்கு வழங்கும் அதே வேளை, நினைவில் வைக்க வேண்டிய சில விஷயங்கள் இதோ. உங்கள் நிலுவைத் தொகையைப் பகுதியாகச் செலுத்த முடியாது என்பதை நினைவிற் கொள்க. அதேபோல கூடுதல் தொகையையும் செலுத்த முடியாது — இந்த வசதி கூடுதல் பணத்தைச் சேமித்து வைப்பதற்கான வாலட் அல்ல. உங்களுக்கான நிலுவைத் தொகை இருந்தால், உங்கள் நிலுவையை முடித்து ஃப்ளிப்கார்ட் பே லேட்டரின் நன்மைகளைத் தொடர்ந்து அனுபவிக்க முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் என்று உங்களுக்கு அறிவிக்கப்படும். இந்த பணம் செலுத்துதல் விருப்பம் தற்போது கைபேசி செயலியும் கைபேசி இணையத்தளத்திலும் மட்டுமே கிடைக்கிறது, விரைவில் கணினி வலைத்தளத்திற்கும் இது விரிவுபடுத்தப்படும்.

பணத்தைத் திருப்பிச் செலுத்துவது எப்படி?

விரைவான படிப்படியான வழிகாட்டுதல் இதோ:

1. உங்கள் ஃப்ளிப்கார்ட் பே லேட்டர் அறிக்கையைப் பாருங்கள் அதில் நிலுவையைச் செலுத்த வேண்டிய கடைசித் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

Flipkart Pay Later

Flipkart Pay Later

2. பில்லைச் செலுத்துக என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

3. பணம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்யுங்கள்.

4. அவ்வளவுதான்! நீங்கள் முடித்து விட்டீர்கள்.

மறந்துவிடுவோம் என்ற கவலை வேண்டாம். உங்கள் நிலுவைகளைச் சரியான நேரத்தில் செலுத்துவதற்காக எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல், புஷ் அறிவிப்புகள்வழியாக மென் நினைவூட்டல்களை ஃப்ளிப்கார்ட் அனுப்பும். இத்துடன் கூடுதலாக, மிந்திராவில் ஷாப்பிங் செய்யும்போது நீங்கள் பே லேட்டரின் பலனையும் பெறலாம்.

எனவே புத்தம் புதிய திறன்பேசியோ, சமீபத்திய ஆடை அணிகலன்களோ, அல்லது சமையலறைக்கான வாணலிகளின் தொகுப்போ என — ஃப்ளிப்கார்ட்டில் நீங்கள் எதை வாங்க விரும்பினாலும் — ஃப்ளிப்கார்ட் பே லேட்டருடன் நீங்கள் வசதியாக ஷாப்பிங் செய்யலாம்! இப்போதே விண்ணப்பியுங்கள்!

Enjoy shopping on Flipkart