1. Home
  2. Tamil
  3. ‘ஃப்ளிப்கார்ட் மீதான நுகர்வோர் நம்பிக்கையின் காரணமாக தனியார் பிராண்டுகளில் பெரும் லாபத்தைக் கண்டோம்.’

‘ஃப்ளிப்கார்ட் மீதான நுகர்வோர் நம்பிக்கையின் காரணமாக தனியார் பிராண்டுகளில் பெரும் லாபத்தைக் கண்டோம்.’

0
Read this article in বাংলা | English | ગુજરાતી | ಕನ್ನಡ

ஃப்ளிப்கார்ட் பிரைவேட் பிராண்டுகள் உலகெங்கிலும் உள்ள நுகர்வோரால் விரும்பப்படும் பிராண்டுகளுடன் இணைந்து உலகளாவிய தொழில்நுட்பத் தரங்களை இந்தியச் சந்தைக்குக் கொண்டுவருகிறது. பிளிப்கார்ட்டில் துணைத் தலைவரும் பிரைவேட் பிராண்டுகளின் தலைவருமான தேவ் ஐயர், இந்தியாவில் உள்ள நுகர்வோர் இந்த கூட்டாண்மை மூலம் எவ்வாறு பயனடைவார்கள் என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்

‘ஃப்ளிப்கார்ட் மீதான நுகர்வோர் நம்பிக்கையின் காரணமாக தனியார் பிராண்டுகளில் பெரும் லாபத்தைக் கண்டோம்.’
0

ஃப்ளிப்கார்ட்டின் பிரைவேட் பிராண்டுகள் வணிகம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது இந்திய நுகர்வோரின் மாறும் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தரமான மற்றும் மலிவு விலையை வழங்குவதில் கவனம் செலுத்தியது. நுகர்வோர் அபிலாஷைகள் மற்றும் விருப்பங்களின் பரந்த அளவிலான வரைபடத்தை உருவாக்கும் ஆழ்ந்த நுகர்வோர் நுண்ணறிவுகளின் அடிப்படையில் கட்டப்பட்ட ஃப்ளிப்கார்ட் பிரைவேட் பிராண்டுகள், தெரிவு செய்வது, தரம், விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில் நுகர்வோருக்கு மகத்தான மதிப்பை வழங்குவதற்கான தேவையின் இடைவெளியை திறம்பட குறைத்துள்ளன. மேலும், ஃப்ளிப்கார்ட் பிரைவேட் பிராண்டுகள் நம்பிக்கை என்னும் மூலக்கல்லில் கட்டப்பட்டுள்ளன. இ-காமர்ஸ் தளத்தின் மகத்தான புகழ், இந்திய நுகர்வோரின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதுமையான தயாரிப்பு-மதிப்பு கட்டுமானங்களை உருவாக்க ஃப்ளிப்கார்ட்டுடன் இணைந்த உலகளாவிய பிராண்டுகளை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.

ஃப்ளிப்கார்ட் பிரைவேட் பிராண்டு வணிகம் அதன் விர்சுவல் பிரைவேட் லேபிள் உத்தி மூலம் உள்ளூர் உற்பத்தி மற்றும் சிறு வணிகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேக் இன் இந்தியா என்ற அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையை முன்னிறுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் சிறு வணிகங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்துவதில் பங்களிக்கும் வகையில் தனியார் பிராண்டுகள் உள்ளூர் உற்பத்தி மற்றும் சிறு வணிகத்தில் கவனம் செலுத்தியது.

உரிமதாரர் கூட்டாண்மை மூலம், ஃப்ளிப்கார்ட் பிரைவேட் பிராண்டுகள் உலகெங்கிலும் உள்ள நுகர்வோரால் விரும்பப்படும் பிராண்டுகளுடன் இணைந்து உலகளாவிய தொழில்நுட்பத் தரங்களை இந்தியச் சந்தைக்குக் கொண்டு வருகின்றன. தொலைக்காட்சிகள், ஏர் கண்டிஷனர்கள், சலவை இயந்திரங்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்களை அறிமுகப்படுத்த நோக்கியா மற்றும் மோட்டோரோலா உடனான சமீபத்திய கூட்டாண்மை இந்த உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஃப்ளிப்கார்ட் பிரைவேட் பிராண்டுகளின் துணைத்தலைவரான தேவ் ஐயர், வெற்றிகரமான, நிலையான மற்றும் அளவிடக்கூடிய ஒரு வணிகத்தை இயக்க நுகர்வோர் நுண்ணறிவை வணிகமானது எப்படி ஊக்குவிக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறார்.


இந்த ஆண்டின் பிக் பில்லியன் நாட்களை உண்மையிலேயே ஒரு #FlipkartForIndia நிகழ்வாக மாற்ற அவர்களின் பிரிவுகள் எவ்வாறு தயாராக உள்ளன என்பதை ஃப்ளிப்கார்ட் தலைவர்களான மணீஷ்குமார், நிஷித் கார்க் மற்றும் நிஷாந்த் குப்தா ஆகியோருடன் தேவ் ஐயர் சொல்லுவதை கேளுங்கள்.


சிறு குறிப்பு:

தற்போதைய தொற்று பரவும் காலநிலையில், ஃப்ளிப்கார்ட் பிரைவேட் லேபிள்களுக்கான ஊக்குவிக்கும் வாய்ப்புகளாக நுகர்வோர் போக்குகள் என்னவாக உள்ளது?

ப்ளாட்ஃபார்மில் நாம் காணும் தேவைகள், விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகளின் புதிய தொகுப்பு உள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கைகளை நீட்டிக்கையில், வீட்டில் தேவைப்படும் பொருட்களுக்கான பெரும் தேவையை நாங்கள் காண்கிறோம். உதாரணமாக, தொலைக்காட்சி விற்பனை 2X வளர்ச்சியைக் காட்டியுள்ளது. மடிக்கணினிகளின் வளர்ச்சியையும் நாங்கள் காண்கிறோம், குழந்தைகள் மெய்நிகர் வகுப்பறைகளில் கலந்துகொள்கிறார்கள் மற்றும் பெரும்பாலான கார்ப்பரேட் கூட்டங்கள் இப்போது டிஜிட்டலாக மாறுகின்றன. உதாரணமாக, டிஷ் வாஷர் இயந்திரங்களுக்கான தேவை முன்பு அவ்வளவாக இல்லை, ஆனால் இப்போது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

நுகர்வோர் வீட்டை விட்டு வெளியேறுவதில் இன்னும் கவனமாக இருப்பதால், இந்த பிரிவுகளில் தேவை இ-காமர்ஸுக்கு வலுவாக மாறியுள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலங்களில், இந்த பிரிவுகளில் பிரைவேட் பிராண்டுகள் மற்றும் லைசென்ஸ் பிராண்டுகளை அறிமுகப்படுத்தவும் வாடிக்கையாளர் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நாங்கள் முன்னோக்கி செல்கிறோம்.

இந்த வாய்ப்புகள் ஃப்ளிப்கார்ட்டின் பிரைவேட் பிராண்டுகளுக்கு எப்படி கிடைத்தது?

ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுபரவல் நம்மைத் தாக்கியபோது வாடிக்கையாளர்கள் தேடும் மாஸ்குகள் மற்றும் ஹேண்ட் சானிடைசர்கள் போன்ற அத்தியாவசிய பிரிவுகளை உருவாக்க நாங்கள் பணியாற்றினோம். இந்தக் கோரிக்கையை நாங்கள் நிறைவேற்ற வேண்டும். எனவே உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்களுடன் இணைந்த குழு, தரத்திற்கான தர நிலையை உறுதி செய்வதற்காக எங்கள் தரக் குழுக்கள் தொழிற்சாலைகளுக்குச் சென்று இந்தத் தயாரிப்புகளை ப்ளாட்ஃபார்மில் அறிமுகப்படுத்தின. நுகர்வோருக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் இந்த அத்தியாவசியங்களை நாங்கள் கொண்டு வந்தோம்

FMCG, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி, குழந்தை பராமரிப்பு மற்றும் அத்தியாவசியமானவற்றில் மட்டும் இந்த ஆண்டு மட்டும் 320 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம்.

ஃபிளிப்கார்ட் பிரைவேட் பிராண்டுகள் இந்தியாவில் நுகர்வோருக்கு வழங்கும் மதிப்பு முன்மொழிவு என்ன?

ஃப்ளிப்கார்ட் ப்ளாட்ஃபார்மின் மீது நுகர்வோருக்கு இருக்கும் நம்பிக்கையின் காரணமாக பிரைவேட் பிராண்டுகளில் நாங்கள் பெறும் இலாபத்தை பார்க்கிறோம். இவை ஃப்ளிப்கார்ட் என்ற பிராண்ட் பெயரில் நேரடியாக எங்களால் தயாரிக்கப்பட்ட தரமான பொருட்கள், வாடிக்கையாளர்களுக்கு இது ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வருவதால், தரத்திற்கான உறுதி உள்ளது.

எங்களது ஆழமான நுகர்வோர் நுண்ணறிவுடன், நுகர்வோரின் தேவை மற்றும் சந்தை என்ன வழங்குகிறது என்பதற்கு இடையிலான இடைவெளியை நாங்கள் புரிந்துகொண்டு, தெரிவு, தரம், விவரக்குறிப்புகள் மற்றும் விலையின் மூலம் இந்த இடைவெளியை நிரப்பிவருகிறோம்.

எங்களது தனியார் லேபிளான ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்பை மற்றும் ஃப்ளிப்கார்ட் சூப்பர்மார்ட் மளிகை, பொது பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய கொண்டு வருகிறது. மறுபுறம், எங்கள் தனியார் பிராண்டட் வணிகமானது நுகர்வோருக்கு மலிவு விலையில், தொலைக்காட்சிகள், வாஷிங் மெஷின்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள் மற்றும் IoT மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்கள் போன்ற பிற தொழில்நுட்ப பொருட்கள் போன்றவற்றை கொண்டு வருகிறது.

பிரைவேட் பிராண்டு வணிகத்தில், நாங்கள் நேரடியாக தொழிற்சாலைகள் மற்றும் பிராண்டு பார்ட்னர்களுடன் பணியாற்றுகிறோம். மேலும் நாங்கள் உற்பத்தியாளர்களை நேரடியாக நுகர்வோருடன் இணைக்க முடிவதால், நுகர்வோருக்கான செலவு கணிசமாக குறைவாக உள்ளது.

உள்ளூர் உற்பத்தி மற்றும் மேக் இன் இந்தியாவை பிரைவேட் பிராண்ட்ஸ் வணிகம் எவ்வாறு ஆதரிக்கிறது?

ஜனவரி 2021 முதல், எங்கள் போர்ட்ஃபோலியோவில் 80% முதல் 85% வரை இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இந்திய வணிக கூட்டாளர்களுடன் இந்தியாவில் கூடியிருக்கும். நாங்கள் விர்சுவல் பிரைவேட் லேபிள்கள், என அழைக்கப்படும் உள்ளூர் மேனுஃபாக்சரிங் ஈகோசிஸ்டம் உடன் இணைந்து, எங்களது ஃபர்னிச்சர் பிராண்டான, பர்ஃபெக்ட் ஹோம்ஸ் என்பதில் தொடங்கி தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இந்த தொலைநோக்கு எங்களது ப்யூர்வுட் துவக்கத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டு தொடங்கியது, ராஜஸ்தானின் கலை மற்றும் கட்டிடக்கலை மூலம் தாக்கத்தை ஏற்படுத்திய ஷீஷம் ரேஞ்சுகளைத் தொடங்க, ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூரில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் நாங்கள் இணைந்தோம். அப்போதிருந்து, நாங்கள் எங்கள் ஆன்லைன் சந்தைக்கு இதுபோன்ற 40 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களை கொண்டுவந்தோம், அவர்களில் 50% க்கும் அதிகமானவர்கள் சிறிய நகரங்களிலிருந்து வருகிறார்கள்.

60 நாட்களுக்கு புதிய விற்பனையாளர்களுக்கான இலவச வணிக பாதுகாப்பு ஆதரவுடன் இதில் தயாரிப்பு ஆதரவு, விளம்பரம் மற்றும் வேகம் பற்றிய நுண்ணறிவுகளை அவர்களுக்கு வழங்குவது உட்பட, ஆன்போர்டிங் முயற்சியை நாங்கள் கூடுதலாக வழங்குகிறோம். இன்று, எங்கள் மெத்தை, சோபா மற்றும் சீட்டிங் வரம்பில் 100% மற்றும் ப்யூர்வுட் ரேஞ்ச் இந்த மாடலுக்கு முன்னேறியுள்ளது.

வணிகத்தின் உற்பத்தித்திறனை அதிகரித்து இறுதியில் எங்களுக்கு மலிவு பொருட்களை வழங்க உதவும் வகையில் போட்டி நன்மைகளுக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல், செலவு குறைந்த தரமான உற்பத்தி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதே நோக்கமாகும்.

பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய சில முக்கிய தொடக்கங்கள் யாவை?

ஃப்ளிப்கார்ட்டில் உள்ள பிரைவேட் பிராண்ட்ஸ் வணிகத்திற்கான முக்கிய வேறுபாடுகளில் ஒன்று, இந்தியாவிற்கு நிறைய சர்வதேச ஆர்வமுள்ள பிராண்டுகளை கொண்டு வர நாங்கள் என்ன செய்தோம் என்பதுதான். இந்த உயர்தர, மலிவு பொருட்கள் எங்கள் ஆழ்ந்த நுகர்வோர் நுண்ணறிவு மற்றும் பிராண்டின் தரத்திற்கான உத்தரவாதத்தின் கலவையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், அவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. நோக்கியா மற்றும் மோட்டோரோலா போன்ற சர்வதேச பிராண்டுகளுக்கான இந்திய உரிமம் எங்களிடம் உள்ளது. பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்காக 6 புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவிகளை மலிவு விலையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். மோட்டோரோலாவுடன், ஸ்மார்ட் டிவி, ரெஃப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட ஸ்மார்ட் வீட்டு உபகரணங்களை நாங்கள் கொண்டு வருகிறோம்.

இந்த தயாரிப்புகள் மிகவும் வேறுபட்டவை மற்றும் பேக் அம்சங்கள் முக்கிய பிராண்டுகளில் கிடைக்கவில்லை. உங்களுக்கு ஒரு உதாரணம் கொடுக்க, குறிப்பாக பிக் பில்லியன் டேஸுக்காக 32 இன்ச் மோட்டோரோலா தொலைக்காட்சியை லான்ச் செய்வோம். இதில் டால்பி டிஜிட்டல், டால்பி விஷன் மற்றும் சரவுண்ட் சவுண்ட் 32 இன்ச் டிவியில், ₹ 12,999 என்ற விலையில் கிடைக்கும். இந்த பிரிவில் இந்த விலை புள்ளியில் எந்த பிராண்டும் இந்த அம்சங்களை வழங்கவில்லை. எனவே, அதுதான் நாம் கொண்டு வரக்கூடிய புதுமை அல்லது ஃபீச்சர் என்ரிச்மெண்ட். எங்கள் பிளாட்ஃபார்மில் இந்த பிராண்டுகளுக்கான பெரிய இலாபத்தை நாங்கள் எப்படி காண்கிறோம் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதையும் வாசிக்கவும்
Enjoy shopping on Flipkart

About the Author

Jishnu Murali

ஜிஷ்ணு முரளி பிளிப்கார்ட் கதைகளைக் கொண்ட எழுத்தாளர். உணவு, வரலாறு மற்றும் பாரம்பரியம் மூலம் வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிக்க அவர் விரும்புகிறார். இசையும் இருண்ட நகைச்சுவையும் அவரை உயிரோடு வைத்திருக்கின்றன.

jQuery('.more').click(function(e) { e.preventDefault(); jQuery(this).text(function(i, t) { return t == 'close' ? 'Read More' : 'close'; }).prev('.more-cont').slideToggle() });