இணை-பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த ஆக்சிஸ் வங்கி மற்றும் மாஸ்டர்கார்டுடன் இணைந்ததன் மூலம் ஃப்ளிப்கார்ட் இந்தியாவின் முறைசார் கடன் மற்றும் சில்லறை விற்பனையில் அனைவரையும் உள்ளடக்குவதாக மாற்றியுள்ளது. ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் அதன் நன்மைகள் பற்றிய அனைத்தையும் படியுங்கள்.
ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு –இணைய ஷாப்பிங்கை முன்னெப்போதையும் விட எளிதாக்குகிறது!
பெரும்பாலான இந்தியர்கள் சில வடிவிலான முறைசாரா கடன்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளனர். எனினும் முறைசார் நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களிலிருந்து இன்னும் பல இந்தியர்கள் பலனடையாமல் உள்ளனர்.
ஃப்ளிப்கார்ட் ஏற்கனவே பே லேட்டர், கட்டணமில்லா ஈ.எம்.ஐ., and டெபிட் கார்டு ஈ.எம்.ஐ.போன்ற அனைவருக்கும் ஏற்ற சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றுடன் கூடுதலாக, இப்போது இணை-பிராண்ட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவதற்காக ஆக்சிஸ் வங்கி மற்றும் மாஸ்டர்கார்டுடன் இணைந்ததன் மூலம் ஃப்ளிப்கார்ட் இந்தியாவின் முறைசார் கடன் மற்றும் சில்லறை விற்பனையில் அனைவரையும் உள்ளடக்குவதாக மாற்றியுள்ளது.
ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துகிறோம்
ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த நன்மைகளைப் பெறுவதை ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு உறுதி செய்கிறது. அட்டையின் வரம்பில்லா கேஷ்பேக் உறுதிமொழி கேஷ்பேக்கில் எவ்வித அதிகபட்ச வரம்பும் இல்லாததைஇணையத்திலும் இணையமில்லா அனைத்துச் செலவினங்களிலும்*உறுதிசெய்து — உண்மையில் உண்மையிலேயே வரம்பற்றதாக்குகிறது!
நீங்கள் அனுபவிக்கப்போகும் நன்மைகளைப் பற்றி ஒருமுறை பாருங்கள்:
கார்டு கன்சோல் –உங்கள் இணை பிராண்ட் அட்டை தொடர்பான அனைத்துத் தகவல்களும், ஒரே செயலியில்!
ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம் கார்டு கன்சோல் ஆகும், இது வாடிக்கையாளர்கள் ஃப்ளிப்கார்ட் செயலியிலிருந்தே தங்களின் அட்டை தொடர்பான தகவல்களை நேரடியாகப் பார்ப்பதற்கான ஒற்றைப் பார்வைக் காட்சியாகும், இது உங்களின் அட்டையின் முக்கிய அம்சங்களை நிர்வகிப்பதைத் தடையற்றதாக்குகிறது.
நீங்கள் பெறக்கூடிய முக்கிய வசதிகள் இதோ:
- அட்டை எண், செல்லத்தக்க காலம், இத்துறையிலேயே முதன்முறையாக ஓ.டி.பி. சரிபார்ப்பின் மூலமாக சி.வி.இ. பார்க்கும் திறன் போன்ற அட்டை விவரங்களைப் பார்க்கலாம்
- நிலுவைத் தொகை, கடைசித் தேதி, கடைசித் தேதிக்கும் முன் செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகை போன்றவற்றை அறியலாம்
- பில்டெஸ்க் வழிமாற்றுதல் மூலமாக கிரெடிட் கார்டு பில்லைச் செலுத்தலாம்
- செலவினங்களில் இன்றைய தேதி வரை நீங்கள் பெற்ற கேஷ்பேக்குகளைப் பார்க்கலாம்
- பல்வேறு செலவினங்களில் நீங்கள் எவ்வளவு கேஷ்பேக் பெறமுடியும் என்பதை ஆராயலாம்
- கன்சோல் வழியாக மின்னஞ்சல் மூலம் உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையைப் பெறலாம்
- உங்கள் அட்டை விவரங்களான- மொத்த கடன் வரம்பு, கிடைக்கும் கடன் வரம்பு, அடுத்த பில் உருவாக்க தேதி, முந்தைய மாதம் பெற்ற கேஷ்பேக் போன்றவற்றின் சுருக்கமான பார்வையைப் பெறலாம்
- அவசரகாலங்களில் அட்டையைத் தடை செய்யலாம்
யாரெல்லம் விண்ணப்பிக்க முடியும்?
இப்போதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே ஃப்ளிப்கார்ட்டின் இணை-பிராண்ட் கார்டுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
ஒவ்வொரு மாதமும் தானாக வரவு வைக்கப்பட்டும் உத்திரவாத கேஷ்பேக் தவிர்த்து, கூடுதல் நன்மைச் சூழலமைப்பை வழங்குவதற்காக இணை-பிராண்ட் கார்டு மேக்மைடிரிப், கோஐபிஐபோ, ஊபர், பி.வி.ஆர், கானா, கியூர்ஃபிட் போன்ற மூன்றாம் தரப்புகளுடன் கூட்டு அமைத்துள்ளது.
இத்துடன் இந்தியாவின் விமான நிலையங்களில் நான்கு இலவச லவுன்ஞ் அணுகல்கள், ரூ 3000-க்கும் அதிக மதிப்புள்ள வரவேற்பு நன்மைகள் மற்றும் முதல் பரிவர்த்தனையை நிறைவு செய்யும்போது ரூ 500 மதிப்புள்ள ஃப்ளிப்கார்ட் இ -வவுச்சர் போன்றவற்றை அட்டைதாரர்கள் பெறுவார்கள். ஃப்ளிப்கார்ட் தளத்தில் செய்யும் செலவுகளுக்கு நெகிழ்வான பணம்செலுத்துதல் காலவரம்புடன் கூடிய கட்டணமில்லா ஈ.எம்.ஐ.-யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கிரெடிட் கார்டு வழங்குகிறது.
மில்லியன் கணக்கிலான வாடிக்கையாளர்கள் கடன் அணுகலின் நன்மையைப் பெறும் அதே நேரத்தில் நிதிச்சுமை குறித்த கவலையின்றி இணையத்திலும் இணையமில்லாமலும் ஷாப்பிங் செய்வதற்கு ஃப்ளிப்கார்ட்டின் சமீபத்திய நிதித் தொழில் நுட்பம் வழிசெய்கிறது.
ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி இணைத்து வழங்கும் கிரெடிட்கார்டு பற்றி மேலும் அறிய