ஃப்ளிப்கார்ட் கஸ்டமர் சப்போர்ட்டை அணுகவேண்டுமா அல்லது உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமா? ஃப்ளிப்கார்ட்டை தொடர்புகொள்ள இதோ சில மிகச் சுலபமான, சௌகரியமான வழிகளை வழங்குகிறோம்
ஃப்ளிப்கார்ட்டை அல்லது எங்களது பல்வேறு துறைகளை தொடர்புகொள்ள வேண்டுமா? அதற்கு வெவ்வேறு வழிகள் இருக்கிறது.
எங்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு மிகச் சுலபமான வழி, ஹெல்ப் சென்டர். இந்த வசதியை அணுகுவதற்கு, ஃப்ளிப்கார்ட் மொபைல் ஆப், ஃப்ளிப்கார்ட் மொபைல் சைட் அல்லது டெஸ்க்டாப் வலைத்தளத்தைப் பாருங்கள் https://www.flipkart.com.
ஆர்டர் தொடர்பான கேள்விகளா? இதோ, ஃப்ளிப்கார்ட்டை தொடர்புகொள்வதற்கான வழிகள்
உங்கள் சமீப ஆர்டர் குறித்து எங்களிடம் பேச வேண்டுமா அல்லது குறை தெரிவிக்க வேண்டுமா? ‘My Orders’ ஸ்கிரீனில் உள்ள ‘Need Help’ -ஐ டேப்/ கிளிக் செய்யுங்கள் (கீழே படத்தை பார்க்கவும்). இந்த வசதியை அணுகுவதற்கு, உங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல்/ மொபைல் எண் மூலம் ஃப்ளிப்கார்ட்டில் லாக்இன் செய்வது அவசியம்.
ஃப்ளிப்கார்ட்டை தொடர்புகொள்ள வேறு என்னென்ன வழிகள் உள்ளன?
ஃப்ளிப்கார்ட் ஆப் மூலம் எங்களை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் அல்லது எங்களுடன் சாட் செய்யலாம் (படத்தை பார்க்கவும்).
ஃப்ளிப்கார்ட்டின் அஞ்சல் முகவரி என்ன?
பின்வரும் அஞ்சல் முகவரியில் எங்களுக்கு தபால் அனுப்பலாம்:
ஃப்ளிப்கார்ட் இன்டர்நெட் பிரைவேட் லிமிடட்
பிளாக் பி (பெகோனியா), கீழ் தளம், எம்பஸ்ஸி டெக் வில்லேஜ்,
அவுட்டர் ரிங் ரோடு, தேவரபீசனஹள்ளி வில்லேஜ்,
வரத்தூர் ஹோப்லி, பெங்களூரு ஈஸ்ட் தாலுகா
பெங்களூரு மாவட்டம், கர்நாடகா, இந்தியா. PIN 560103
எங்களைத் தொடர்புகொள்ள வேறு வழிகளும் உள்ளன, தயவுசெய்து ஃப்ளிப்கார்ட் டெஸ்க்டாப் சைட் மற்றும் ஃப்ளிப்கார்ட் மொபைல் ஆப்பில் உள்ள ஹெல்ப் சென்டரை பார்க்கவும்.
ஃப்ளிப்கார்ட் ஆப்பை பதிவிறக்குவது எப்படி
இந்தியாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஃப்ளிப்கார்ட் ஷாப்பிங் ஆப்பை பயன்படுத்துகிறார்கள். உங்கள் டிவைஸ் பிளாட்ஃபாரமில் (iOS & ஆண்ட்ராய்டு) ஃப்ளிப்கார்ட் ஷாப்பிங் ஆப்பின் புதுப்பித்த பதிப்பை பதிவிறக்க, இங்கே தொடங்குங்கள்.
மேலும் தகவலுக்கு, தயவுசெய்து இந்த FAQ -ஐ படித்துப் பாருங்கள்