ஃப்ளிப்கார்ட்டில் போலிப் பொருட்கள் விற்கப்படுகிறதா? இதோ அதற்குரிய உண்மையான பதில்கள்

Read this article in हिन्दी | English | বাংলা | ಕನ್ನಡ | मराठी | ગુજરાતી

ஃப்ளிப்கார்ட் போலிப் பொருட்களை விற்கிறது என்று நடந்துகொண்டிருக்கும் ஆன்லைன் விவாதத்தில் ஏதும் உண்மை இருக்கிறதா? இந்தக் கூற்றுக்களின் பின்னணியில் உள்ள உண்மைச் செய்திகளைப் புரிந்துகொள்ள ஏதேனும் முயற்சி எடுத்தீர்களா? இதோ அதற்கான விடைகள்.

fake products

ப்ளிப்கார்ட் ஊழல், ஃப்ளிப்கார்ட் போலி, ஃப்ளிப்கார்ட் மோசடி, ஃப்ளிப்கார்ட் ஏமாற்று. இதுபோன்ற சில புதுமையான பட்டப்பெயர்கள் இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகின்றன. ஃப்ளிப்கார்ட் உண்மையிலேயே போலிப் பொருட்களை விற்கிறதா என்று இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் விவாதம் நடந்துகொண்டிருக்கும் இத்தருணத்தில், அன்பான வாடிக்கையாளரே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்று கண்டுபிடிக்க ஆழமாக ஆராய்ந்திருக்கிறீர்களா? இல்லை என்றால், உங்கள் கஷ்டம் எங்களுக்குப் புரிகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் உஷார் அடைவது இயல்புதான். இதுபோன்ற வதந்திகளின் மூல காரணங்களைக் கண்டுபிடிப்பது நிச்சயமாக உங்கள் வேலை கிடையாது. அதனால்தான், உங்களுக்கும் எங்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள ஐயங்களை இங்கே தெளிவுபடுத்தப் போகிறோம். இந்தப் பிரச்சனை பற்றி ஃப்ளிப்கார்ட்டில் உள்ள நாங்கள் வெறுமனே கைகளைப் பிசைந்துகொண்டு இருக்கவில்லை. உங்கள் ஐயங்களுக்கு நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம்.

போலிப் பொருட்கள் குறித்த உங்கள் சந்தேகங்களை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கலைகிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள்.

fake products

சமூக வலைத்தள டைம்லைன்கள் மற்றும் இணைய விவாத மேடைகள் முழுக்க, ஆன்லைன் ஷாப்பிங் சைட்களில் விற்கப்படும் சில பொருட்களின் அசல்தன்மையை கேள்விக்குறியாக்கும் புகார்களும் கோபமான உரையாடல்களும் குவிந்துள்ளன. போலிப் பொருட்கள், கள்ளச் சரக்குகள், அசல் பிரான்டட் பொருட்களைப் போன்ற போலிகள் ஆகியவை குறித்து தினந்தோறும் கேள்விகள் எழுப்பப்படுகிறது (போலி சென்ட்களை எப்படித் தவிர்ப்பது என்ற எங்கள் விழிப்பூட்டும் கட்டுரையை வாசிக்கவும்).

ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் சந்தைகள் தங்கள் தளங்களில் விற்கப்படும் பொருட்களின் தரம் பற்றி எப்படி அலட்சியமாக இருக்கிறார்கள் போன்றவை குறித்து வெறுப்புகள் வளர்கின்றன. ஃப்ளாப்கார்ட், ஃபேக்கார்ட், ஃப்ராட்கார்ட் போன்ற இன்டர்நெட் மீம்கள் வலம் வருகின்றன. உங்கள் நூதனத்தை நாங்கள் பாராட்டுகிறோம், சற்று சிரிப்பும் வருகிறது, ஆனால் இது தீவிரமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். இந்த விவகாரங்கள் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பே, இதிலுள்ள உண்மை குறித்து ஆழமான புலனாய்வைத் தொடங்கிவிட்டோம். ஃப்ளிப்கார்ட் விற்பனையாளர்கள் உண்மையிலேயே போலிப் பொருட்களை விற்கிறார்களா?

 

போலிப் பொருட்கள் என்றால் என்ன?

fake products

ஆன்லைனில் உள்ள போலிப் பொருட்களை பற்றி ஆராயும் முன்பு, எதுவெல்லாம் ‘போலி’ என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். போலி என்ற சொல்லுக்கு ஒரு பிரபல ஆன்லைன் அகராதியில் ‘அசல் அல்லாத; அசல் மாதிரியே தோன்றுகிற அல்லது கள்ளத்தனமான’ என்று விளக்கம் தரப்படுகிறது. இந்தச் சொற்பொருளையும் தாண்டி, ஆன்லைனில் நீங்கள் காணும் பொருட்கள் விஷயத்தில் இதற்கு என்ன அர்த்தம்?

போலிப் பொருட்கள் பெருகி வருவது, ஆன்லைன் சில்லறை விற்பனையின் மாபெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பொருட்கள் பார்ப்பதற்கு அசலானது போலவே தோன்றும் ஆனால் தரம் குறைந்த போலி மாதிரிகள், இவற்றை அசல் பிரான்டட் பொருட்கள் என்பதாக சந்தையில் வலம்விட இதன் உற்பத்தியாளர்கள் முயற்சிக்கிறார்கள். ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இதன் காட்சிப் படங்கள் அசலான தயாரிப்புகள் போன்றே தோன்றலாம். படங்கள் மட்டுமல்லாமல், லோகோ, பேக்கேஜிங், டிரேட்மார்க் போன்ற விவரணங்களும் கூட அசல் பிரான்டை போன்றே தோன்றலாம். பாவம், ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரால் இவற்றை வேறுபடுத்துவது சிரமமாக இருக்கக்கூடும்.

இந்த ‘போலிப் பொருட்கள்’ பிரபல பிரான்ட்களின் நற்பெயரைக் கெடுப்பது மட்டுமல்லாமல், வாடிக்கையாளரின் பணம், உணர்ச்சி இரண்டையும் புண்படுத்திவிடுகிறது என்பதை நாங்கள் அறிவோம். இது விஷயமாக நீங்கள் தயவுசெய்து ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும்: ஒரு ஆன்லைன் விற்பனையாளர் ஃப்ளிப்கார்ட்டில் போலிப் பொருட்களை வழங்குவது கண்டறியப்பட்டால், உடனே அவர் பிளாக்லிஸ்டில் சேர்க்கப்பட்டு, எமது தளத்தில் விற்பனை செய்வதிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.

 

ஆன்லைனில் ஒரு போலிப் பொருளை எப்படிக் கண்டுபிடிப்பது?

fake products

சவாலை எதிர்கொள்வோம். ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது ஒரு போலிப் பொருளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல, குறிப்பாக சலுகை காலங்களில் நீங்கள் ஷாப்பிங்கில் மூழ்கியுள்ள போது இது கஷ்டம். ஒரு பொருளைக் குறித்து உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை மற்றும் அதில் ஏதோ சரியில்லாமல் தோன்றுகிறது என்றால், அடிப்படையாக மூன்று விஷயங்களை நீங்கள் சோதிக்கலாம்.

படி 1: அதை நெருக்கமாகக் கவனியுங்கள்

அசல் பொருட்களின் போலி மாதிரிகள் மிகவும் தந்திரமாக வடிவமைக்கப்படுகிறது. முதல் பார்வையில் அது அசல் பொருளைப் போன்றே இருக்கும். எனவே, அந்தப் பொருளை கவனமாக ஆராயுங்கள், பொருளின் விவரங்களை நோட்டமிடுங்கள், மேலும் பிரான்ட் பெயர், லோகோ மற்றும் பிரச்சனைக்குரியதாகத் தெரியும் இதர வடிவமைப்பு அறிகுறிகள் உள்ளதா என்று பாருங்கள்.

படி 2: குறைந்த விலையில் இருப்பவை போலிப் பொருட்களாக இருக்கலாம்.

இந்தியாவில் பொதுவாக மக்கள் ஒரு பொருளை வாங்க முடிவுசெய்யும் போது அதன் விலையை முதன்மையாகக் கவனிக்கிறார்கள். இந்த மனோபாவத்தை மோசடிக்காரர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே, ஒரு பழக்கப்பட்ட பிரான்ட் நம்பமுடியாத விலையில் விற்பனைக்கு வந்தால், உடனே மயங்கிவிடாதீர்கள். உஷார் அடையுங்கள். இதே பொருளை மற்ற விற்பனையாளர்கள் என்ன விலைக்குக் கொடுக்கிறார்கள் என்பதை ஒப்பிடுங்கள், மேலும் அதன் அளவுகள், எடை போன்றவற்றை ஒப்பிட்டுச் சரிபாருங்கள். பல சந்தர்ப்பங்களில் விற்பனையாளர்கள் விலையை குறைத்துவைக்கவும் உரிமம் பெற்றிருக்கலாம். அவ்வாறு இருந்தால், அது அசலான பொருள் தான். அவ்வாறு இல்லையென்றால், உங்கள் சந்தேகத்தில் நியாயம் இருக்கலாம்.

படி 3: விற்பனையாளர் தரமதிப்பு மற்றும் பொருள் மதிப்பீடு

ஒரு பொருளின் தரமதிப்பு அல்லது மதிப்பீடு எந்தளவுக்கு நம்பகமானது என்று பலர் கேள்வியெழுப்பலாம், என்றாலும்கூட நிச்சயமாக இது பொருளின் நம்பகத்தன்மையை எடைபோடுவதற்கு ஓர் அதிகாரப்பூர்வ தகவலாகத் தான் கருதவேண்டும். உரிய நேரம் எடுத்துக்கொண்டு பொருள் பட்டியலிடப்பட்ட பக்கத்தில் மதிப்பீடுகள் மற்றும் தரமதிப்புகள் குறித்து படித்துப் பாருங்கள், இதன் மூலம் மனதில் உள்ள சந்தேகங்களைக் கலைந்து அந்தப் பொருள் பற்றி ஒருவித உறுதியான எண்ணம் கிடைக்கும். எப்போதுமே அதிகபட்ச சாதகமான மதிப்பீடுகள் கொண்ட விற்பனையாளரிடமே வாங்குங்கள். ஃப்ளிப்கார்ட்டில் பொருள் மதிப்பீடுகளை பார்க்கும்போது, எப்போதுமே செர்டிஃபைடு பையர் மதிப்பீடுகள் உள்ளதா எனக் கவனியுங்கள், ஏனென்றால் இவை பொருளின் சரிபார்க்கப்பட்ட வாங்குனர்களால் எழுதப்பட்டவை. பட்டியலிடப்பட்ட பொருட்களுக்கு செர்டிஃபைடு பையர்கள் சாதகமான மதிப்பீடுகளை வழங்கியிருந்தால், அவை போலிப் பொருட்கள் அல்ல என்று நீங்கள் நம்பி வாங்கலாம்.

 

ஃப்ளிப்கார்ட் எப்படி போலிப் பொருட்கள் விவகாரத்தை கையாளுகிறது?

fake products

ஃப்ளிப்கார்ட் போலிப் பொருட்களை இனங்கண்டு அகற்றுவதற்கு பல சோதனைகளை வைத்துள்ளது. இவற்றை, முனைப்பாக இனங்காணுதல் மற்றும் உஷாரடைந்து இனங்காணுதல் என்று இரண்டு விரிவான வகைகளாகப் பிரிக்கலாம், இவற்றில் தானியங்கி முறை, மனிதரால் கண்டுபிடிக்கும் முறை ஆகிய இரண்டும் அடங்கும். இதற்கென்றே இயங்கும் ஒரு குழுவினர் ஃப்ளிப்கார்ட்டில் விற்கப்படும் பொருட்களின் நம்பகத்தன்மையை தொடர்ச்சியாக மதிப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், எனவே போலி குறித்து மிகச்சிறிய எச்சரிக்கை/சம்பவம் நிகழ்ந்தாலும் கூட, உடனே நிர்வாகம் உஷார்படுத்தப்படும்.

ஒரு பொருள் போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பொருளின் முழுப் பட்டியலும் மற்றும் அந்த விற்பனையாளரின் முழு பொருள்வரிசைப் பட்டியலும் உடனே நீக்கப்படும். பிறகு இந்த விவகாரம் ஓர் உள்துறைப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்படும், அவர்கள் இந்த விற்பனையாளர் பற்றி விசாரணை நடத்துவார்கள். ஒரு பொருள் போலியானது என்றும், விற்பனையாளரே அதை விற்க முயன்ற குற்றத்துக்கு உரியவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டால், உடனே அவர் பிளாக்லிஸ்டில் சேர்க்கப்படுவார். பிளாக்லிஸ்டில் சேர்க்கப்பட்ட விற்பனையாளர் பிறகு ஒருபோதும் ஃப்ளிப்கார்ட்டில் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்.

போலிப் பொருட்களை கட்டுப்படுத்த ஃப்ளிப்கார்ட் வைத்திருக்கும் இன்னொரு வழி, விற்பனையாளர் தரமதிப்பு முறை. இந்த முறையில், ஃப்ளிப்கார்ட்டில் முறைகேடான விற்பனையை கண்டறிவதற்கு ஒரு வெகுஜன அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர் தரமதிப்பு, திருப்பிக்கொடுத்தல் எண்ணிக்கை, விற்பனையாளர் ரத்துசெய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு விற்பனையாளரின் நம்பகத்தன்மை தீர்மானிக்கப்படுகிறது. விற்பனையாளர் தரமதிப்பு ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்குக் கீழ் குறைந்தால், இவ்விவகாரம் குறியிடப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையின் போது, அந்த விற்பனையாளர்களிடம் குறை இருப்பதாகத் தெரிந்தால், அவர்கள் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்ய முடியாத படி பிளாக்லிஸ்டில் சேர்க்கப்பட்டு, அவர்களுடைய பொருட்களின் வரிசைப் பட்டியல் நீக்கப்படும்.

ஃப்ளிப்கார்ட் எப்படி மிஸ்டரி ஷாப்பர்ஸ் மூலம் போலிப் பொருட்களை களையெடுக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்

 

ஒரு போலி விற்பனையாளருக்கு என்ன நேரும்?

fake products

ஃப்ளிப்கார்ட்டில் உள்ள அனைத்து ஆன்போர்டட் விற்பனையாளர்களும் ஒரு கறாரான சரிபார்ப்பு முறை மூலம் சோதிக்கப்படுவார்கள், அதன் பிறகே அவர்கள் சேர்க்கப்பட்டு, ஈ-காமர்ஸ் தலத்தில் விற்பனையை தொடங்க முடியும். இந்த முறையில், சீரான பின்னணிச் சோதனைகள், வணிகப் பதிவு ஆவணங்கள், பல கட்ட செல்லுபடிச் சோதனைகள் ஆகியவை அடங்கும், இவை இந்திய சட்டத்துக்கும், தொழில்துறையின் விதிமுறைகளுக்கும் இணங்கியிருப்பது அவசியம்.

சந்தையில் போலிப் பொருள் விற்பனை உறுதிசெய்யப்படுகிற எவ்வொரு சம்பவத்தையும் ஃப்ளிப்கார்ட் அறவே சகித்துக்கொள்ளாது. முந்தைய அனுபவ நற்சான்று உள்ள விற்பனையாளர்கள் மட்டுமே ஃப்ளிப்கார்ட்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதை எங்கள் இனங்காணும் செயல்முறைகளும் நடவடிக்கைகளும் உறுதிசெய்கின்றன. போலிப் பொருட்கள் வழங்கப்படும் சம்பவங்களுக்கு ஒரு வழக்கமான முறையில் தீர்வளிப்பதற்கும், அவை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், போலிப் பொருள் கண்டறியும் குழு தொடர்ச்சியாக பட்டியல்களை ஆய்வுசெய்கிறது.

போலிப் பொருட்களின் விற்பனையாளர்களுக்கு என்ன நேரும்? Find out

ஃப்ளிப்கார்ட்டில் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஷாப்பிங் செய்வதை பற்றி இந்தக் கட்டுரை விழிப்புணர்வு ஊட்டுகிறது.

ஃப்ளிப்கார்ட் அனுபவங்கள் பகுதிக்கு சித்திரம் வரைந்தவர், பல்ராஜ் கே என்


மேலும் வாசிக்க


 

Enjoy shopping on Flipkart